நாக தோஷம் நீங்க பரிகாரம் ( naga dosham pariharam in tamil ) by SN Ganapathi Astrologer B.Lit, M.A, D.Astro

நாக தோஷம் நீங்க பரிகாரம் ( naga dosham pariharam in tamil ) by SN Ganapathi Astrologer B.Lit, M.A, D.Astro

நாகதோஷம் என்ன செய்யும் ?

naga dosham pariharam in tamil


அன்பார்ந்த நேயர்களே ! ஜோதிட ஆர்வலர்களே ! ஜோதிட மாணவர்களே ! அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கங்கள் ! நாக தோஷம் நீங்க பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவை முழுமையாக படித்து தெளிவாக நீங்கள் புரிந்து கொள்ளலாம் ! அதற்கு முன்பாக நாக தோஷம் என்றால் என்ன ? என்கிற விளக்கத்தை பார்த்துவிட்டு , நாக தோஷ அமைப்பு உள்ள உதாரண ஜாதகத்தையும் இந்த பதிவில் பார்ப்போம் ! 

  • நாக தோஷம் என்றால் என்ன ? 
  • நாக தோஷம் என்ன செய்யும் ?
  • நாக தோஷம் எந்த வயதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ?
  • நாக தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ? 
  • நாக தோஷம் அமைப்பு உள்ள ஒரு உதாரண ஜாதகம் ? 
  • ராகு ஸ்தல விவரம்
முதலிய தலைப்புகளில் இந்தப் பதிவில் விளக்கமாக எழுதி இருக்கிறேன் ! முழுமையாக படியுங்கள் தெளிவான விளக்கம் கிடைக்கும் ! 

நாக தோஷம் என்றால் என்ன ? 

நாக தோஷம் என்பது ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் , ஜென்ம லக்னப்படியும் , ஜென்ம ராசி படியும் ஒன்றாம் இடம், இரண்டாம் இடம் , நான்காம் இடம், ஐந்தாம் இடம், ஏழாம் இடம் , எட்டாம் இடம், 12-ஆம் இடம்  ( 1,2,4,5,7,8,12 ) ஆகிய பாவகங்களில் ராகு அமரும்பொழுது நாக தோஷம் ஏற்படுகிறது ! ( சுக்கிரன் நின்ற வீட்டிலிருந்து கூட இந்த நாக தோஷம் பார்க்கப்பட்டது . இப்போது சுக்கிரன் அமைப்பை யாரும் எடுத்துக் கொள்வதில்லை  ) திருமணம் செய்யும்போது தான் இந்த நாக தோஷத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது ! மேற்சொன்ன பாவகங்கள் திருமணத்திற்கு தொடர்புடைய பாவகங்கள் ஆகும் ! எனவேதான் இந்த இடத்தில் ராகு அமர்வது திருமண செய்யும் காலகட்டத்தில் தோஷத்தை ஏற்படுத்துகிறது ! இதற்கு என்ன தீர்வு ? இந்தப் பதிவை முழுமையாக படியுங்கள் தீர்வு கிடைக்கும் ! 

நாக தோஷம் என்ன செய்யும் ? 

ஒருவர் பிறப்பு ஜாதகத்திலே ஒன்றாம் இடத்தில் அமர்ந்த ராகு எந்த மாதிரி  பலன்களை வழங்குவார் என்பதை இப்பொழுது பார்ப்போம் ! 

ஒன்றாம் இடத்தில் அமர்ந்த ராகு 

உரிய திருமண வயதில் திருமணம் நடக்க விடாமல் திருமண தாமதத்தினையும் மனக்கசப்பையும் தருகிறது , திருமணத்திற்குப் பிறகு மன வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாத தன்மையை தருகிறது , கணவன் மனைவிக்குள் நிம்மதி இல்லாத வாழ்க்கை தன்மையைக் கொடுக்கிறது , திருமண பந்தத்தில் ஒரு இணக்கம் இல்லாத பற்றற்ற நிலை இல்லாத தன்மையை தருகிறது, ஜாதகரின் குணத்தில் ஒரு தடுமாற்றத்தை கொடுக்கிறது, ஜாதகருக்கு நல்ல பெயர் கிடைக்காத தன்மை ஏற்படுகிறது !

இரண்டாம் இடத்தில் அமர்ந்த ராகு

வாக்கு ஸ்தானத்தை பாதிக்கிறது , குடும்ப ஸ்தானத்தை பாதிக்கிறது, ( இரண்டாம் பாவகம் என்பது ஒரு குறிப்பிட்ட ஜாதகருக்கு வரும் களத்திரத்தை குறிக்கும் இடமாகும் , அதாவது கணவன் அல்லது மனைவியைக் குறிக்கும் இடமாகும் இந்த இரண்டாம் இடம் , மேலும் இரண்டாம் இடத்தில் அமர்ந்த ராகு குடும்ப உறுப்பினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளை கொடுக்கிறது . முக்கியமாக கணவன் மனைவிக்குள் தொந்தரவை கொடுக்கிறது , மன பயத்தை கொடுக்கிறது , தகாத வார்த்தைகள் ஏற்படுவதால் குடும்பத்தில் பிரிவினையை தருகிறது , இரண்டாம் இடத்து ராகு பலருக்கு திருமண தாமதத்தைக் கொடுக்கிறது , ஜாதகருக்கு வரும் வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தையும் இது பாதிக்க செய்கிறது , குடும்பத்தை பொறுப்பாக பார்த்துக் கொள்ளாத சூழ்நிலையை அந்த ஜாதகருக்கு கொடுக்கிறது , ஜாதக திருமண பந்தத்தில் பொறுப்பில்லாமல் இருப்பார் , தனக்கு வரும் கணவன் அல்லது மனைவியை அக்கரையாக பார்த்துக் கொள்ள மாட்டார் . எனவே இரண்டாம் இடத்தில் ராகு இதுபோன்ற எதிர்வினையை, பாதிப்புகளை ஏற்படுத்தும் !

5 ஆம் இடத்தில் அமர்ந்த ராகு – 

இந்த ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானமாகும் ! ஒரு ஜாதகரின் புத்திர ஸ்தானத்தை குறிப்பது .  ஜாதகரின் பூர்வ ஜென்ம புண்ணிய பலத்தை தெரிவிக்கும் இடமாகும் . இந்த ஐந்தாம் இடத்தில் ராகு இருப்பது நல்லதில்லை ! எனவே ஐந்தாம் இடத்தில் உள்ள ராகு ஊழ்வினை பலன்களை அனுபவிக்க செய்கிறது . ஜாதகரின் ஆழ்மனதில் சூழ்ச்சி வஞ்சம் போன்ற எதிர்மறையான எண்ணங்களை கொடுக்கிறது . 
முக்கியமாக புத்திர பாக்கியத்தை தாமதப்படுத்துகிறது அல்லது புத்திரர்களால் தொந்தரவு தருகிறது, மன நிம்மதி இல்லாத சூழ்நிலையை தருகிறது . புத்திரர்களின் ஆதரவு அன்பு கிடைக்காமல் போகிறது ! இவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதற்கு எதிர்மறையாக வாழ வைக்கிறது இந்த ஐந்தாம் இடத்தில் அமர்ந்த ராகு ! 

7 ஆம் இடத்தில் அமர்ந்த ராகு

 நேயர்களே இந்த ஏழாம் இடம் என்பது மிக முக்கியமான ஸ்தானமாகும் அதாவது களத்திர ஸ்தானமாகும் ! களத்திர ஸ்தானம் என்றால் கணவன் அல்லது மனைவியைக் குறிக்கும் இடமாகும் ! லக்னம் ஜாதகர் என்றால் ஏழாம் பாவகம் அவருக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையைக் குறிக்கும் பாவகமாகும் . அந்த இடத்தில் ராகு அமர்வது களத்திரத்தை பாதிக்கிறது . ( களத்திரம் என்கிற வார்த்தை கணவன் அல்லது மனைவியை குறிக்கும் வார்த்தை ஆகும் ) 
இந்த ஏழாம் இடத்து ராகு மன வாழ்க்கையை பாதிக்கிறது . மற்றவர்களுக்கு விரோதமான அதாவது பெற்றோர்களுக்கு விரோதமான திருமண வாழ்க்கையை தருகிறது . ஜாதகரின் சுய விருப்பப்படி திருமணம் நடக்கும் . ஆனால் அதில் நிறைய தொந்தரவும் இருக்கும் . திருமணம் என்ற பேச்சு எடுத்த உடன் வீட்டில் பல்வேறு குழப்பங்களை கொடுக்கும் . ஜாதகருக்கு காலதாமதமான திருமணத்தை கொடுக்கிறது . அல்லது தன்னைவிட அதிக மூத்த வயது உள்ளவரை திருமணம் செய்யும்படி ஆகிவிடுகிறது ! ( அதாவது பொருந்தாத திருமணம் ) மேலும் வாழ்க்கைத் துணையால் வருந்தும் சூழ்நிலையை அதிகப்படுத்துகிறது ! இதற்கெல்லாம் என்ன தீர்வு பரிகாரம் என்று சொல்ல இருக்கிறேன் பதிவை முழுமையாக படியுங்கள் !

8 ஆம் இடத்தில் அமர்ந்த ராகு –

இந்த எட்டாம் இடத்தில் அமர்ந்த ராகு திருமணத்திற்கு பிறகு குடும்பப் பிரச்சனையை வீதிக்கு கொண்டு வந்து ஜாதகரை அவமானப்படுத்தும் அளவுக்கு தொந்தரவு தருகிறது ! வாழ்க்கைத் துணையின் பேச்சு ஜாதகரை அதிகம் காயப்படுத்தும் ‌. வாழ்க்கைத் துணையின் செயல்பாடுகள் ஜாதகருக்கு அதிகப்படியான மன வருத்தத்தை ஏற்படுத்தி காயப்படுத்துகிறது . வெளி ஆட்கள் விமர்சனம் செய்யும் அளவிற்கு கீழ்த்தரமான பழக்க வழக்கங்களை கொடுக்கிறது . எந்த அவமானத்தைப் பற்றியும் அச்சப்படாத குணத்தை கொடுக்கிறது . விஷ ஜந்துக்களால் தொந்தரவையும் பயத்தையும் ஏற்படுத்துகிறது இந்த எட்டாம் இடத்து ராகு ! 
மேலும் இந்த எட்டாம் இடம் என்பது வம்பு வழக்குகளை குறிக்கும் இடமாகும் . எனவே ஜாதகரின் வாழ்க்கை துணை வம்பு வழக்குகளை ஏற்படுத்தி ஜாதகருக்கு தொந்தரவு கொடுப்பார் . திருமணம் ஆன சில காலகட்டங்களிலேயே குடும்பத்தில் பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறது ! வண்டி வாகனங்களில் விபத்துகளை சந்திக்க கூடிய சூழ்நிலையை கொடுத்து விடுகிறது ! எனவே இது போன்று உள்ள  ஜாதகத்தை திருமணத்தின் போது சர்வ ஜாக்கிரதையாக பொருத்தம் பார்த்து இணைக்க வேண்டும் ! 

12 ஆம் இடத்தில் அமர்ந்த ராகு 

பன்னிரெண்டாம் இடம் என்பது அயன சயன போக ஸ்தானமாகும் . திருமண விஷயத்தில் இது கட்டில் ஸ்தானமாகும் . சுருக்கமாக கட்டில் சுகம் என்று சொல்லலாம் . கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்தரத்தை குறிக்கும் இடமாகும் . கணவன் மனைவிக்குள் ஏற்படும் தாம்பத்தியத்தைக் குறிக்கும் முக்கிய இடமாகும் ! இந்த இடத்தில் ராகு இருந்தால் என்ன செய்யும் ? இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும் அல்லவா ! நீங்கள் நினைத்தது சரியே அதுதான் நடக்கும் ! அதாவது திருப்தி இல்லாத தாம்பத்தியத்தை தரும் . கணவன் மனைவியை சேர விடாது . குடும்பத்தை விட்டே பிரிய செய்து விடுகிறது ! சிலர் திருமணத்திற்குப் பிறகு வெளிநாட்டிற்கு சென்று விடுவதற்கு காரணம் இதுதான் . கணவர் ஒரு இடத்திலும் மனைவி ஒரு இடத்திலும் என்று வாழ வைத்து விடுகிறது . மொத்தத்தில் இருவரும் திருமணத்திற்கு பிறகு சேர விடாமல் செய்வது இந்த 12-ஆம் இடத்து ராகுவாகும் ! களத்திரத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ! மன வாழ்க்கைக்கு பிறகு வீட்டில் தேவையில்லாத விரயங்களை கொடுக்கும் ! இதற்கு என்ன தீர்வு தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள் ! 
முக்கிய குறிப்பு : ஒன்றாம் இடம், இரண்டாம் இடம், ஏழாம் இடம், எட்டாம் இடம் இந்த இடத்தில் அமர்ந்த ராகுவே கடுமையான தோஷத் தாக்கங்களை கொடுக்கிறது . எனவே நேயர்களே ஜோதிட ஆர்வலர்களே மேற்சொன்ன இடத்தில் ராகு இருக்கும் பட்சத்தில்  இதே அமைப்பு உடைய ஜாதகத்தையே இணைக்க வேண்டும் ! அதாவது ஆண் பெண் இருவருக்கும் ஒரே இடத்தில் ராகு இருந்தால் திருமணம் செய்யலாம் ! திருமணப் பொருத்தத்தில் பல விதிமுறைகள் இருக்கின்றன அதில் இது ஒரு விதிமுறை ஆகும் ! திருமணப் பொருத்தம் என்று வேறொரு தலைப்பில் ஒரு புதிய பதிவையும் எழுத இருக்கிறேன் எனவே இந்த வெப்சைட்டை follow செய்யுங்கள் ! 
ஐந்து மற்றும் எட்டாம் இடத்தில் அமர்ந்த ராகு மத்திமமான சர்ப தோஷத்தை ஏற்படுத்தும் என்பதை நேயர்களே புரிந்து கொள்ளுங்கள் . எனவே ஒருவருக்கு ஐந்து மற்றும் 12ஆம் இடத்தில் ராகு இருந்தால் அதே போல் உள்ள ஜாதக அமைப்பையே இணைக்க வேண்டும் . 

நாக தோஷத்தின் வீரியம் குறையும் அமைப்பு உள்ள ஜாதகம் 

இந்த தோஷத்திற்கு உரிய ஸ்தானத்தில் ராகு இருக்கும்போது , அந்த ராகு லக்ன சுபர்களில் சாரம் பெறும்போது நிவர்த்தி பெறுகிறது . இந்த அமைப்பு பரிகாரம் செய்யாமலே நிவர்த்தி பெறுகிறது . இவர்களுக்கு பரிகாரம் செய்தால் உடனே நிவர்த்தி ஆகிவிடும் . அதேபோல் ராகுவை குரு பார்த்தாலோ ராகுவோடு குரு இணைந்தாலோ தோஷத்தின் வீரியம் குறையும் ! இதுபோன்று விதிவிலக்கு உள்ள ஜாதகத்தை அதே விதிவிலக்கு உள்ள ஜாதகத்தோடு தான் இணைக்க வேண்டும் ! 

நாக தோஷம் எந்த வயதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ?

திருமண வயது காலகட்டத்தில் இருந்து 36 வயது வரை இந்த தாக்கம் அதிகப்படியாக இருக்கும் ! 36 வது வயதுக்கு பிறகும் தாக்கம் இருந்தாலும் ஜாதகர் பக்குவப்பட்டு விடுவதால் ராகுவின் தாக்கம் ஜாதகரை ஒன்றும் செய்யாது . 


நாக தோஷம் அமைப்பு உள்ள ஒரு உதாரண ஜாதகம் ? 

naga thosam tamil

நேயர்களே மேலே உள்ள ஜாதகத்தை பாருங்கள் , தனுசு லக்னம் லக்னத்தில் ராகு , லக்னத்தில் அமர்ந்த ராகு என்ன செய்யும் என்று இதே பதிவில் மேலே படித்திருப்பீர்கள் ! அந்த எதிர்மறை பலன்கள் அனைத்தும் மேலே உள்ள ஜாதகத்திற்கு ஏற்படுத்தும் ! இதனால் ஜாதகருக்கு திருமண தாமதத்தையோ அல்லது திருமணத்திற்குப் பின்பு இல்லற வாழ்க்கையில் தொந்தரவுகளையோ அதிகப்படுத்தும் ! 
மேலே உள்ள ஜாதகத்தில் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது அது என்னவென்றால் , நான் ஏற்கனவே இதே பதிவில் சொல்லி உள்ளது படி ,  குருவின் பார்வை பெற்றால் அந்த ராகு தோஷம் நிவர்த்தி பெறுகிறது . மேலே உள்ள ஜாதகத்தை நன்றாக பாருங்கள் சிம்ம வீட்டில் உள்ள குரு தன்னுடைய ஐந்தாம் பார்வையாக லக்னத்தில் உள்ள ராகுவை பார்க்கிறது , எனவே இது முழுக்க முழுக்க நிவர்த்தி பெற்ற நாகதோஷ அமைப்புடைய ஜாதகம் ஆகும் ! நிவர்த்தி என்றால் முழுமையாக நிவர்த்தி அடையாது , 50 சதவீதம் பாதிப்பை குறைத்து விடுகிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும் , அப்படி என்றால் மீதி 50 சதவீதம் பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம் ! இந்த 50 சதவீத பாதிப்பை குறைப்பதற்கு கீழே நான் சொல்லக்கூடிய பரிகாரத்தை செய்வதால் நூறு சதவீதம் அந்த ஜாதகருக்கு பாதிப்பு குறைய செய்து விடும் ! இதே அமைப்புடைய ஜாதகத்தை தான் திருமணம் பொருத்தத்தில் இணைக்க வேண்டும் என்பதை நேயர்களே , ஜோதிட ஆர்வலர்களே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ! 

நாக தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ? 

உங்கள் ஊருக்கு அருகில் உள்ள புற்றுக்கோவிலை வாரம்தோறும் சுற்றிவர வேண்டும் , இதுபோல் திருமணம் ஆகும் வரை செய்து வர வேண்டும் ! இருப்பதிலேயே இதுதான் மிக மிக எளிமையான பரிகாரம் !  இதுதான் மற்ற பரிகாரத்தை விட சக்தி வாய்ந்த பரிகாரம் ! மேலும் உங்களுக்கு வீண் செலவே இல்லாத அற்புதமான பரிகாரம் ! பணம் அதிகம் செலவு செய்து விட்டால் மட்டும் தோஷம் நீங்கி விடாது . அந்தக் குறிப்பிட்ட ஜாதகர் மனமுவந்து மேற்கூறிய பரிகாரத்தை செய்தால் பரிபூரணமாக இந்த நாக தோஷத்திலிருந்து விடுபடலாம் ! இது பலபேருடைய வாழ்க்கையில் கண்கண்ட உண்மை ! 
ஒரு சிலருக்கு என்னதான் பரிகாரம் செய்தாலும் நிவர்த்தியே ஆகாது , திருமணம் நடத்தவே விடாது , அதற்கு என்ன காரணம் என்றால் .. ? அந்த ஜாதகம் விஷ கன்னிகா தோஷம் உடைய ஜாதகமாக இருக்கும்  ?! விஷக்கன்னிகா தோஷம் என்றால் என்ன ? என்று மற்றொரு பதிவில் இதே தளத்தில் உங்களுக்கு எழுத்து மூலமாக சொல்லுகிறேன் ! 
( https://www.snganapathiastro.com/ , follow our website )

ராகு ஸ்தல விவரம்

திருப்பதி அருகில் உள்ள காளஹஸ்தி என்று சொல்லக்கூடிய ராகு கேது ஸ்தலத்திற்கு ஏதாவது ஒரு திங்கட்கிழமை அன்று அதிகாலை பரிகாரம் செய்ய வேண்டும் ! நீங்கள் எந்தப் பகுதியில் இருந்தாலும் .. திங்கட்கிழமை முன்னாள் ஞாயிற்றுக்கிழமை இரவு அன்றே கோவிலுக்கு சென்று சேர்ந்து விட வேண்டும் ! பிறகு அதிகாலையில் அங்கு பரிகாரம் செய்ய வேண்டும்! 
மேலும் இந்த பரிகாரம் செய்வது பற்றி விரிவான விளக்கம் வேண்டுமென்றால் என்னை whats up வழி  தொடர்பு கொள்ளுங்கள் ! What’s or Phone Call : 97 42 88 64 88 , another number 95 85 88 80 87 
மேலும் இந்த நாகதோஷம் விவரம் அறிய , அதாவது ஜாதகத்தில் இருக்கிறதா இல்லையா நிவர்த்தி ஆகுமா ஆகாதா? என்பதை பற்றி அறிவதற்கு என்னை வாட்ஸ்அப் வழி தொடர்பு கொண்டு ஜாதகம் பார்த்துக் கொள்ளுங்கள் ! 
அனைத்து ஜோதிட பதிவுகளையும் இந்த ஒரே website இல் ( https://www.snganapathiastro.com/ ) பாருங்கள்.. 
அடிப்படை ஜோதிடம் 👈பாடங்கள் படிக்க  இந்த ‘ அடிப்படை ஜோதிட ‘  என்கிற வார்த்தைகளை Click  செய்யுங்கள் !  

என்னைப் பற்றி 

நான் ஜோதிஷ வித்யாவதி , ஜோதிடர், எண் கணித நிபுணர், வீடு வாஸ்து ஸ்பெஷலிஸ்ட் S.N. கணபதி B.Lit , M.A, D.Astro 
What’s up And Ph : 97 42 88 64 88 
மேலும் முழு ஜாதக பலன் அறிய..
அதாவது வேறு ஏதேனும் தனிப்பட்ட கேள்வி இருந்தால்..
தொலைபேசி வழி ஜாதக பலன் அறிய ..
 என்னுடைய இந்த whatsapp நம்பருக்கு உங்கள் பிறந்த தேதி நேரம் விவரங்கள் அனுப்பி 
கட்டணம் செலுத்தி தொலைபேசி வழியே ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம் 
Phone Call 97 42 88 64 88 
What’s up 97 42 88 64 88 
 மேலும் whats up வழி வீடியோ ஜோதிட பாடப்பதிவுகளை படிக்க என்னுடைய இந்த whatsapp நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் 
What’s up 97 42 88 64 88 
follow our website ( https://www.snganapathiastro.com/ ) SN Ganapathi Astroger 
தொடரும் ….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *