சுயதொழில் அல்லது உத்யோகம் ஜாதகப்படி எது அமையும் ? | career astrology | SN Ganapathi Astrologer B.Lit,M.A, D.Astro

 சுயதொழில் அல்லது உத்யோகம் ஜாதகப்படி எது அமையும் ? | career astrology |  SN Ganapathi Astrologer B.Lit,M.A, D.Astro

career astrology

 சொந்த தொழில் செய்யலாமா ? அல்லது வேலைக்கு செல்லலாமா ? , சுயதொழில் அல்லது உத்யோகம் ஜாதகப்படி எது அமையும் ? என்கிற கேள்விக்கான பதிலை இந்த பதிவில் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள் ! அன்பார்ந்த நேயர்களே ! ஜோதிட ஆர்வலர்களே ! ஜோதிட மாணவர்களே ! அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கங்கள் ! 

ஜாதக விளக்கம் !

 பெரும்பாலும் என்னிடம் ஜாதகம் பார்ப்பவர்கள் தங்களுடைய ஜாதகத்தை என்னிடம் கொடுத்து விட்டு ‘ சொந்தமாக தொழில் ஆரம்பிக்க இருக்கிறேன் எப்பொழுது ஆரம்பிக்கலாம் ? ‘ என்று கேட்பார்கள் ! எனவே இது போல் உங்கள் மனதிலும் கேள்வி இருந்தால் இந்தப் பதிவு உங்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கும் ! 

சொந்த தொழில் யாருக்கு அமையும் ?

 ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் , தனக்காரகர் குருவும் , ஏழாம் அதிபதியும்  மற்றும் கர்ம காரகர் 10 த்தாம் அதிபதியும் ஒன்றோடு ஒன்று பார்வை சேர்க்கை பெற்றிருக்க வேண்டும் இவர்களுக்கு சொந்தமாக தொழில் செய்யக்கூடிய யோகம் ஏற்படுகிறது ! 

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தை பாருங்கள் ! துலாம் லக்னம் – லக்னத்தில் சந்திரன் ராகு இணைவு , லக்னப்படி இரண்டாம் இடத்தில் குரு, ஆறாம் இடத்தில் சனி பகவான் , ஏழாம் இடத்தில் கேது, பத்தாம் இடத்தில் சூரியன் புதன் சுக்கிரன் மூன்று கிரகங்கள் இணைவு , பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய் . 

  • எந்த லக்னமாக இருந்தாலும் அந்த லக்னம் அமர்ந்த வீடு தான் முதல் பாவகம் ! 
  • இரண்டாம் இடம் தனஸ்தானம் ஆகும் .
  • மூன்றாம் இடம் தைரிய வீரியஸ் தானம் ஆகும் .
  • நான்காம் இடம் மாத்ரு ஸ்தானம் ஆகும்   வீடு வாகனத்தையும் குறிக்கும் இடம் 
  • ஐந்தாம் இடம் புத்திர ஸ்தானம். 
  • ஆறாம் இடம் எதிரி ,நோய், கடன் மற்றும் வேலையை குறிக்கும் இடம் , அடிமை வேலையை குறிக்கும் .
  • ஏழாம் இடம் களத்திர ஸ்தானம் ஆகும் . 
  • கணவன் அல்லது மனைவியை குறிக்கும் இடமாகும்.
  • எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானமாகும் . வம்பு வழக்கு அவமானம் முதலியவற்றை குறிக்கும் இடம் !
  • ஒன்பதாம் இடம் தந்தை ஸ்தானம் . மேலும் இது பாக்கியஸ்தானம் ஆகும் . தந்தை வழி அடையக்கூடிய பாக்கியத்தை குறிக்கும் . ( பூர்விக சொத்து முதலியன )
  • பத்தாமிடம் தொழிற் ஸ்தானமாகும் . மேலும் இந்த இடம் கர்ம ஸ்தானம் ஆகும். ஒருவர் இப் பிறவியில் செய்யக்கூடிய கர்மாவை குறிக்க கூடிய இடம் .
  • பதினோராம் இடம் இது லாப ஸ்தானமாகும் . ஜாதகர் அடையக்கூடிய லாபம் மேன்மைகளை குறிக்கும் இடம் இது .
  • பன்னிரெண்டாம் இடம் அயண சயன போக ஸ்தானம் ஆகும் . மேலும் இது விரைய ஸ்தானமாகும் . ஜாதகர் செய்யக்கூடிய செலவுகள், சுப செலவுகள் விரயங்களை குறிக்கக்கூடிய இடமாகும் .

 ஜாதகர் சொந்தமாக தொழில் செய்வாரா? அல்லது உத்தியோகத்துக்கு செல்வாரா ? என்பதற்கான ஜாதக விளக்கத்தை இப்பொழுது பார்ப்போம் ! 

 இந்தப் பதிவில் நான் மேலே கொடுத்துள்ள ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரனும் ஏழாம் அதிபதி செவ்வாயும் பார்வையோ சேர்க்கையோ பெறவில்லை ! சுய தொழில் செய்வதற்கான விதிமுறை இந்த ஜாதகத்தில் பொருந்தவில்லை ! ஆனால் ஜாதகருக்கு சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் . ஏனென்றால்.. லக்னாதிபதி சுக்கிரன் பத்தாவது வீட்டில் அமர்ந்துள்ளார் . பத்தாவது வீடு என்பது ஜாதகரை சுயமாக தொழில் செய்ய தூண்டும் . ஆனால் இரண்டாம் அதிபதி செவ்வாய் அவரே ஏழாம் அதிபதியும் ஆவார் அவர் 12ல் அமர்ந்தபடியால் ஜாதகர் சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பித்தால் விரையங்களை சந்திப்பார் என்பதே இந்த ஜாதகத்தினுடைய அமைப்பு ஆகும் ! இந்த ஜாதகர் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் சொந்தமாக தொழில் செய்ய வாய்ப்பே இல்லை ! அதே சமயம் குருவின் பார்வை பத்தில் அமர்ந்து இருக்கக்கூடிய செவ்வாய் மீது விழுவதால்  .. அதிக முதலீடு இல்லாத சிறு தொழில் இவர் செய்யலாம் ஆனால் உத்தியோகம் செய்து கொண்டுதான் சுயதொழில் இவர் செய்ய வேண்டும் ! ( side business ) 

அடிமை வேலை செய்வதற்கான விதிமுறைகள் 

 அதாவது அடுத்தவரிடத்தில் சென்று வேலை செய்து சம்பளம் வாங்குவது ( Job  ) . லக்னாதிபதியும், ஆறாம் அதிபதியும், பத்தாம் அதிபதியும், இரண்டாம் அதிபதியும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு உத்தியோக அமைப்பை கொடுக்கும் . அடுத்தவரிடத்தில் வேலை செய்யும் பொழுது நல்ல சம்பள உயர்வை கொடுக்கும் . இந்த அமைப்பு உடையவர்கள் சுயமாக தொழில் செய்தால் சம்பாதிக்க முடியாது .
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தை பாருங்கள் .. உழைப்பை குறிக்கும் கிரகமான சனி பகவான் லக்னப்படி ஆறாவது வீட்டில் அதாவது உத்தியோக ஸ்தானத்தில் இருக்கிறார் ! மேலும் குருவின் ஐந்தாவது பார்வையும் சனி பகவான் மீது விழுகிறது . துலா லக்னத்திற்கு சனி பகவான் யோகாதிபதி ஆவார் . ஒரு கேந்திரத்திற்கும் திரிகோணத்திற்கும் அதிபதியாக வரும் ஒரு கிரகம் யோகாதிபதி ஆகும் ! அந்த வகையில் இந்த துலா லக்னத்திற்கு கேந்திர ஸ்தானமான நான்காம் இடத்து அதிபதி சனி பகவான் ஆவார். திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் இடத்து அதிபதியும் சனி பகவானே ஆவார் ! 
யோகாதிபதி – உத்தியோகத்தை குறிக்கும் உத்தியோகஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் , ஜாதகருக்கு உத்தியோக வழி தான் பெரிய ஏற்றத்தை கொடுப்பார் ! மேலும் குருவின் பார்வை பெறுவதால் இந்த ஜாதகருக்கு உத்தியோகம் தான் சிறந்தது, உத்தியோகத்திற்கு தான் இவர் முதலிடமும் முக்கியத்துவமும் தர வேண்டும் . 
இந்த ஜாதகத்தில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால்.. குருவின் பார்வை பத்தாவது வீட்டையும் பார்க்கிறது லக்னபடி ஆறாம் வீட்டையும் பார்க்கிறது.. எனவே ஆறு பத்து என்று சொல்லக்கூடிய ஸ்தானங்கள் சுபத்துவம் பெறுகிறது . குருவின் பார்வை பெறும் இடங்கள் சுப பலனை பெறுகிறது . அதாவது குருவின் பார்வை கோடி நன்மை என்பது ஜோதிட தத்துவமாகும் ! எனது அனுபவபூர்வமாக குருவின் பார்வை பெற்ற கிரகங்கள் நற்பலன்களை வழங்குகின்றன ஜாதகருக்கு . 
மேலும் ஒரு முக்கிய குறிப்பு : துலாம் லக்னப்படி இரண்டாம் அதிபதி மற்றும் ஏழாம் அதிபதி செவ்வாய் , கால புருஷ தத்துவப்படி ஆறாவது வீட்டில் உத்தியோகஸ்தானத்தில் உள்ளார் . ( கால புருஷ தத்துவம் என்பது மேஷ வீட்டில் இருந்து என்ன வேண்டும் ) எனவே ஜாதகருக்கு உத்தியோக ரீதியிலான வலிமையை தான் அதிகமாக கொடுக்கிறது ! எனவே நூறு சதவீதம் அடித்துச் சொல்லலாம் இவருக்கு உத்தியோகம் தான் அமையும் !

 இந்த ஜாதகர் மிகுந்த செலவாளி 

 மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜாதக அமைப்பானது அந்த ஜாதகர் மிகுந்த செலவுகளை செய்யக்கூடியவராக இருப்பார் . அதற்கான விதிமுறை என்னவென்றால்.. , ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் ராகு இணைவு பெறக் கூடாது . அப்படி இணைவு பெற்ற ஜாதகர் சொந்தமாக தொழில் செய்யவே கூடாது ! மீறி செய்தால் பல செலவுகளை கொடுத்து நிர்வாகத்தை சரியாக நடத்த விடாமல் ஜாதகரை கடனாளி ஆக்கிவிடும் ! 

சந்திரன் ராகு சேர்க்கை யாருக்கும் நல்லதில்லை ! மேலும் இந்த சேர்க்கை லக்னத்தில் அமர்வதால் ஜாதகரே அதிக செலவாளியாவார் . ஏனென்றால் முதல் பாவகம் லக்ன பாவகம் என்பது குறிப்பிட்ட அந்த ஜாதகரையே குறிக்கும் . வேறு எந்த பாவகத்தில் சந்திரன் ராகு இணைவு பெற்றிருந்தாலும் ஜாதகர் செலவு செய்யக்கூடயவராக தான் இருப்பார் . 

சந்திரன் மனக் காரகன் , ராகு மன பயத்தை கொடுக்கக் கூடிய கிரக காரகத்துவம் , சந்திரன் வெளிச்சம் – ராகு இருட்டு , எனவே வெளிச்சம் எனும் சந்திரனை இருள் எனும் ராகு மறைப்பதால் , ஜாதகருக்கு ஒரு தெளிவில்லாத மன பயத்தை கொடுக்கும். முக்கியமாக தொழிற்சார்ந்த முக்கிய விஷயங்களில் இந்த மன பயத்தை ஜாதகருக்கு கொடுக்கும். ஜாதகர் தைரியமாக எந்த விஷயத்தையும் செயல்படுத்த மாட்டார். 

job or business astrology

 சுயமாக தொழில் செய்வதற்கு துணிச்சல் தைரியம் ஒரு முக்கிய விஷயமாக இருக்கிறது அல்லவா ! அந்த நம்பிக்கை என்ற விஷயத்தை இந்த சந்திரன் ராகு உடைத்து விடும் . மனதில் பலவீனத்தை கொடுத்து விடும் . எனவே சந்திரன் ராகு இணைவு இருப்பவர்கள் ஒருவேளை சுயமாக தொழில் செய்து கொண்டு இருந்தால் , அதாவது லக்னாதிபதியும் ஏழாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் தொடர்பு பெற்றிருந்து குரு பார்வையும் பெற்றிருந்தால் , சுயதொழில் அவர்கள் நிச்சயமாக செய்வார்கள் . அதே சமையும் அந்த குறிப்பிட்ட ஜாதகத்தில் சந்திரன் ராகு இணைவு இருந்தால் ஜாதகர் அதிகப்படியான செலவுகளையும் செய்து விடுவார். தான் சம்பாதித்ததை விட பத்து மடங்கு செலவுகளை செய்து விட்டால் பிறகு அவர் தொழில் செய்து என்ன லாபம் நீங்களே சொல்லுங்களேன் . எனவே சந்திரன் ராகு இணைவு இருந்தாலே பெரிய தொழில் பணம் முதலீடு போட்டு செய்வதற்கு முன்னர் ஜாதகத்தை ஜோதிடர் இடத்தில் கொடுத்து காண்பித்து பிறகுதான் அவர் சுய தொழில் ஆரம்பிக்க வேண்டும் ! 

என்னிடம் ஜாதகம் பார்க்க விருப்பமுள்ளவர்கள் என்னுடைய இந்த whats up நம்பரில் தொடர்பு கொண்டு 

தொலைபேசி வழி ஜாதக பலன் அறிய ..

 என்னுடைய இந்த whatsapp நம்பருக்கு உங்கள் பிறந்த தேதி நேரம் விவரங்கள் அனுப்பி தொலைபேசி வழியே ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம் 

Phone Call 97 42 88 64 88 

What’s up 97 42 88 64 88 

அடுத்த பதிவிலே சொந்தத் தொழில் ஜாதகம் பற்றி பார்க்கலாம் ! 

அனைத்து ஜோதிட பதிவுகளையும் இந்த ஒரே website இல் பாருங்கள்  

( https://www.snganapathiastro.com/

வாஸ்து திசை காட்டி ,

நாக தோஷம் நீங்க பரிகாரம்

அடிப்படை ஜோதிட பாடங்கள்  👈இந்த தலைப்புகளையும் கிளிக் செய்து படியுங்கள் ! 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *