பாடம் – 2 | ஜாதகம் கற்றுக் கொள்வது எப்படி ? |அடிப்படை ஜோதிட பாடம் – 2 | Vedic Astrology

பாடம் – 2 | ஜாதகம் கற்றுக் கொள்வது எப்படி ? |அடிப்படை ஜோதிட பாடம் – 2 | Vedic Astrology 

அடிப்படை ஜோதிட பாடம் இரண்டிற்கு செல்லலாம் !
வணக்கம் ஜோதிட மாணவர்களே நேயர்களே ! ஜாதகம் படிப்பது என்பது அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொள்வதின் மூலம் எதிர்காலத்தில் ஒரு ராசி கட்டத்தை வைத்து ஜாதகம் முழுமையாக சொல்ல முடியும் ! ஒரு ஜாதகத்தை பார்த்து முழுமையான பலன் சொல்வதற்கு இந்த அடிப்படையான விஷயங்களை தெளிவாக படிக்க வேண்டியது அவசியம் ! எனவேதான் இந்த அடிப்படை ஜோதிட பாடங்களை இந்த website இல் தொடர்ந்து எழுதி வருகிறேன் ! புதிய நேயர்கள் இந்த website ஐ  Follow செய்யுங்கள் ! மேலும் whatsapp வழி வீடியோ பதிவாக என்னிடம் ஜோதிடம் படிக்க விரும்புபவர்கள் என்னுடைய இந்த whatsapp நம்பரில் தொடர்பு கொள்ளலாம் ! What’s up 97 42 88 64 88 . வாருங்கள் இப்பொழுது அடிப்படை ஜோதிடம் பாடம் இரண்டிற்கு செல்லலாம் !

ராசிகளின் உருவங்கள் 

நம்முடைய முன்னோர்கள் வான் மண்டலத்தை பார்த்து 12 ராசிகளாக பிரித்தார்கள் . மேலும் அந்தப் 12 ராசிகளை உருவங்களாக பிரித்தார்கள் . அந்த உருவங்கள் ரீதியாக ஒவ்வொரு ராசிகளின் குண அதிசயங்களையும் கண்டுபிடித்தார்கள் ! இந்த website  இல் அடிப்படை ஜோதிட பாடங்களை தெளிவாக எழுதி இருக்கிறேன்.. அடிப்படை ஜோதிட பாடம் ஒன்று முதல் ஒவ்வொன்றாக அனைத்து பதிவுகளையும் படியுங்கள் ! 
கீழே உள்ள ராசி கட்டத்தையும் உருவங்களையும் பாருங்கள் !
ஜாதகம் கற்றுக் கொள்வது எப்படி ? , அடிப்படை ஜோதிட பாடம் - 2 , Vedic Astrology
Chart – 2
மேஷம் – ஆடு
ரிஷபம் – எருது
மிதுனம் – வீணையுடன் கூடிய பெண் கதையுடன் கூடிய ஆண்
கடகம் – நண்டு
சிம்மம் – சிங்கம்
கன்னி – கதிர் குலையும் அக்னியும் கொண்ட பெண்
துலாம் – தராசு கொண்ட ஆண்
விருச்சிகம் – கருந்தேள்
தனுசு – இடுப்புக்கு கீழ் குதிரையும் இடுப்புக்கு மேல் வில் பிடித்த மனிதன்
மகரம் – சுறா மீன்
கும்பம் – குடத்துடன் கூடிய ஆண்
மீனம் – இரட்டை மீன் 
இவ்வாறு நம்முடைய முன்னோர்கள் வகுத்துள்ளார்கள் .

ராசிகளின் நிறங்கள் 

ராசிகளின் நிறங்களையும் நம் முன்னோர்கள் வகுத்துள்ளார்கள்..
அதனை இப்பொழுது பார்க்கலாம்..
மேஷம் – சிகப்பு
ரிஷபம் – வெண்மை
மிதுனம் – பச்சை
கடகம் – வெண்மை
சிம்மம் – சிகப்பு
கன்னி – பச்சை
துலாம் – வெண்மை
விருச்சிகம் – கருஞ்சிவப்பு
தனுசு – மஞ்சள்
மகரம் – கருப்பு அல்லது கருநீலம்
கும்பம் – கருப்பு அல்லது கருநீலம்
மீனம் – மஞ்சள் 
ஒரு ஜாதகருக்கு அதிர்ஷ்டமான நிறங்களை இதனைக் கொண்டு பயன்படுத்த வேண்டும் ! 
உயர்நிலை வகுப்பு வரும் பொழுது இன்னும் தெளிவாக இதே website இல் பதிவு எழுத இருக்கிறேன் ! எல்லோரும் follow செய்யுங்கள் !

ராசிகளின் உறுப்புகள்

தேக ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களுக்கு 12 ராசிகளின் உறுப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் அடிப்படை ஜோதிடம் மாணவர்கள் .. ஒவ்வொரு ராசிக்கும் மனித உறுப்புகளை இங்கு எழுதி இருக்கிறேன் .
மேஷம் – தலை
ரிஷபம் – முகம்
மிதுனம் – மார்பு
கடகம் – இதயம்
சிம்மம் – வயிறு
கன்னி – இடுப்பு
துலாம் – அடிவயிறு
விருச்சிகம் – பாலினக்குறி
தனுசு – தொடை
மகரம் – ‍ முழங்கால்
கும்பம் – கணுக்கால்
மீனம் – பாதம் 
இவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும். 
என்ன ஜோதிட மாணவர்களே ! ஜோதிட ஆர்வலர்களே ! ஜோதிடம் ஆர்வமாக படித்து வருகிறீர்களா ? அடுத்ததாக… கிரகங்களின் ஆட்சி வீடுகளை பார்ப்போம் .

கிரகங்களின் ஆட்சி வீடுகள் 

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் மிக மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் அந்த ராசி கட்டத்தின் அந்த ராசியின் அதிபதியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் !
இங்கு 12 ராசிகளுக்கும் அந்த வீட்டு அதிபதிகளை குறித்து இருக்கிறேன் . அதாவது 12 வீடுகளில் கிரகங்களின் ஆட்சி வீடுகள் என்று இதனை புரிந்து கொள்ள வேண்டும் !
இப்போது கிரகங்களின் ஆட்சி வீடுகளை பார்ப்போம் .
மேஷம் – செவ்வாய்
ரிஷபம் – சுக்கிரன்
மிதுனம் – புதன்
கடகம் – சந்திரன்
சிம்மம் – சூரியன்
கன்னி – புதன்
துலாம் – சுக்கிரன்
விருச்சிகம் – செவ்வாய்
தனுசு – குரு
மகரம் – ‍ சனி
கும்பம் – சனி
மீனம் – குரு 
இவ்வாறு ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு கிரகம் ஆட்சி பெறுகின்றன..
இதில் ஒரு முக்கிய குறிப்பு : சந்திரன் மற்றும் சூரியனுக்கு ஒரு வீடு மட்டுமே ! மற்ற கிரகங்களுக்கு இரண்டு இரண்டு வீடுகள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ! 
ஒரு நோட்டு புத்தகம் எடுத்து , ராசி கட்டத்தை வரைந்து , ஒவ்வொரு ராசியிலும் கிரகங்களை எழுதுங்கள் உங்களுக்கு தெளிவாக புரிந்துவிடும் ! அடுத்ததாக கிரகங்களின் உச்ச வீடுகளை பார்ப்போம் !

கிரகங்களின் உச்ச வீடுகள் 

கிரகங்களின் உச்ச வீடுகள் என்பது ஆட்சி வீடுகளை விட பலம் அதிகம் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் !
அதாவது உச்ச வீடு என்றால் 200 சதவீத பலம் ! ஆட்சி வீடு என்றால் நூறு சதவீத பலம் ! இவ்வாறு புரிந்து கொண்டால் அந்த கிரகத்தின் பலத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் ! ஒரு கிரகத்தின் தசா புத்தி நடைபெறும் பொழுது , அந்த தசாநாதன் பலமாக இருக்கிறாரா இல்லையா ? என்பதை பற்றி அந்த கிரகத்தின் ஆட்சி உச்சத்தை வைத்து அறிய வேண்டும் ! இது பற்றி மேலும் உயர்நிலை பாடத்தில் உங்களுக்கு தெளிவாக எழுத இருக்கிறேன் ! 
இப்பொழுது ஒவ்வொரு கிரகமும் உச்சம் பெறும் வீடுகளை பார்ப்போம் !
சூரியன் – மேஷம்
சந்திரன் – ரிஷபம் 
செவ்வாய் – மகரம் 
புதன் – கன்னி 
குரு – கடகம் 
சுக்கிரன் – மீனம் 
சனி – துலாம் 
ராகு கேது விற்கு உச்ச வீடுகள் இல்லை 
ராகு கேது தான் நின்ற வீட்டு அதிபதியின் பலன்களை தரும் .. ராகு கேது பற்றி தெளிவான விளக்கங்களை உயர்நிலை பாடத்தில் சொல்லித் தருகிறேன் !

கிரகங்களின் நீச வீடுகள்

கிரகங்கள் தன்னுடைய உச்ச வீட்டில் இருந்து நேர் எதிர் ஏழாவது வீட்டில் நீசம் அடையும் ! நீசம் என்றால் அந்த கிரகம் முழுமையாக பலம் இழந்து விட்டது என்று அர்த்தம் . ஆனால் 20% வேலை செய்யும் ! முழுமையாக நீச கிரகம் வேலை செய்யாமல் போகாது . சில ஜோதிடர்கள் நேசம் என்றால் முழுமையாக வேலை செய்யாது என்று கூறுவார்கள் அப்படி எடுக்க வேண்டாம்.. 
என்னுடைய அனுபவத்தில் ஜாதகத்தை பார்க்கும் பொழுது நீச கிரகம்  நிச்சயமாக 20% வேலை செய்கின்றன ! எனவே இதனை உங்களுக்கு நான் கற்றுத் தருகிறேன் ! 
இப்பொழுது கிரகங்களின் நீச வீடுகளின் விளக்கம் பார்ப்போம் .
சூரியன் – துலாம்
சந்திரன் – விருச்சிகம்
செவ்வாய் – கடகம்
புதன் – மீனம் 
குரு – மகரம்
சுக்கிரன் – கன்னி
சனி – மேஷம் 
ராகு கேதுக்கு நீசவீடுகள் இல்லை
ராகு கேது தான் நின்ற வீட்டு அதிபதியின் பலன்களை தரும் .. ராகு கேது பற்றி தெளிவான விளக்கங்களை உயர்நிலை பாடத்தில் சொல்லித் தருகிறேன் !

27 நட்சத்திரங்கள் விளக்கம் | 27 stars in tamil

மேஷம் முதலான மீனம் வரையிலான 12 ராசிகளில் 27 நட்சத்திரங்கள் பிரித்து வகுக்கப்பட்டுள்ளன .. வான் மண்டலத்தில் கிரகங்களின் அசைவுகளை புரிந்து கொள்வதற்காக இந்த 27 நட்சத்திரம் மண்டலங்களை நம்முடைய முன்னோர்கள் வகுத்தார்கள்.. வானத்தில் தெரியக்கூடிய நட்சத்திர மண்டலங்களை அதன் உருவ அடிப்படையில் வகுத்துள்ளார்கள் .. 
அடிப்படை ஜோதிட பாடம் ஒன்றில் படித்த விஷயத்தை இப்பொழுது இங்கு உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் ..
அதாவது.. மேஷம் , ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி , துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் ஆகிய பன்னிரு ராசிகளில் இடம்பெற்றுள்ள நட்சத்திர மண்டலங்கள் வழியாக சூரியன் , சந்திரன், செவ்வாய் , புதன் , குரு , சுக்கிரன் , சனி , ராகு , கேது ஆகிய 9 கிரகங்கள் சஞ்சாரம் செய்வதால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை அறிய உதவி புரியும் மிகச்சிறந்த கணித சாஸ்திரமே இந்த மாபெரும் ஜோதிட சாஸ்திரமாகும் !
அந்த 27 நட்சத்திரங்கள் என்னென்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம் ! | 27 star names in tamil

அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகினி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம் , பூசம்,  ஆயில்யம்,  
மகம்,  பூரம்,  உத்திரம்,  ஹஸ்தம்,  சித்திரை,  சுவாதி,  விசாகம் , அனுஷம், கேட்டை,  
மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி 

இப்பொழுது ஒவ்வொரு நட்சத்திரங்களும் ஒவ்வொரு ராசி கட்டத்திலும் எவ்வாறு இடம் பெறுகின்றன என்பதை பற்றி பார்ப்போம் ! 
மேஷம் – அஸ்வினி 1,2,3,4 பாதங்கள் பரணி 1,2,3,4 பாதங்கள் கிருத்திகை 1 ஆம் பாதம் ஆகிய ஒன்பது பாதங்கள் இடம் பெறும்
ரிஷபம் – கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகினி 1,2,3,4 பாதங்கள், மிருகசீரிஷம் 1,2 பாதங்கள் ஆகிய ஒன்பது பாதங்கள் இடம்பெறும் .
மிதுனம் – மிருகசீரிஷம் 3,4 பாதங்கள், திருவாதிரை 1,2,3,4 பாதங்கள், புனர்பூசம் 1,2 ,3 பாதங்கள் ஆகிய ஒன்பது பாதங்கள் இடம்பெறும் .
கடகம் – புனர்பூசம் 4 ஆம் பாதம் , பூசம் 1,2,3,4 பாதங்கள், ஆயில்யம் 1,2,3,4 பாதங்கள் ஆகிய ஒன்பது பாதங்கள் இடம் பெறும் 
சிம்மம் – மகம் 1,2,3,4 பாதங்கள், பூரம் 1,2,3,4 பாதங்கள், உத்திரம் 1 ஆம் பாதம் ஆகிய ஒன்பது பாதங்கள் இடம் பெறும் .
கன்னி – உத்திரம் 2,3,4 பாதங்கள், அஸ்தம் 1,2,3,4 , சித்திரை 1,2 பாதங்கள் ஆகிய ஒன்பது பாதங்கள் இடம்பெறும் .
துலாம் – சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி 1,2,3,4 பாதங்கள், விசாகம் 1,2,3 பாதங்கள் ஆகிய 9 பாகங்கள் இடம் பெறும் !
விருச்சிகம் – விசாகம் 4 ஆம் பாதங்கள், அனுஷம் 1,2,3,4 பாதங்கள், கேட்டை 1,2,3,4 பாதங்கள் ஆகிய 9 பாதங்கள் இடம் பெறும் ! 
தனுசு – மூலம் 1,2,3,4 பாதங்கள், பூராடம் 1,2,3,4 பாதங்கள், உத்திராடம் 1 ஆம் பாதம் ஆகிய ஒன்பது பாதங்கள் இடம் பெறும் .
மகரம் – ‍ உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம் 1,2,3,4 பாதங்கள், அவிட்டம் 1,2 பாதங்கள் ஆகிய ஒன்பது பாதங்கள் இடம் பெறும் .
கும்பம் – அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம் 1,2,3,4 பாதங்கள், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் ஆகிய 9 பாதங்கள் இடம் பெறும் .
மீனம் – பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி 1,2,3,4 பாதங்கள், ரேவதி 1,2,3,4 பாதங்கள் ஆகிய ஒன்பது பாதங்கள் இடம் பெறும் . 
ஜோதிட மாணவர்களே ! ஜோதிட ஆர்வலர்களே ! ஒரு நோட்டு புத்தகம் எடுத்து , ராசி கட்டம் வரைந்து, அந்த ராசி கட்டத்தில் நான் கூறியபடி நட்சத்திர பாதங்களை எழுதுங்கள். ஒரு தெளிவான நட்சத்திர ராசி மண்டலம் உங்களுக்கு கிடைக்கப்பெறும் !
அடுத்து அடிப்படை ஜோதிட பாடம் 3  ண்டும் எழுதி பதிவு செய்து விட்டேன் தொடர்ந்து 3 ஆம் பகுதியையும் படியுங்கள் !
அனைத்து அடிப்படை ஜோதிட பாடங்களையும் இந்த ஒரே website இல்  பாருங்கள்.. 

என்னைப் பற்றி 
நான் ஜோதிஷ வித்யாவதி , ஜோதிடர், எண் கணித நிபுணர், வீடு வாஸ்து ஸ்பெஷலிஸ்ட் S.N. கணபதி B.Lit , M.A, D.Astro 
What’s up And Ph : 97 42 88 64 88 

 மேலும் முழு ஜாதக பலன் அறிய..

அதாவது வேறு ஏதேனும் தனிப்பட்ட கேள்வி இருந்தால்..

தொலைபேசி வழி ஜாதக பலன் அறிய ..
 என்னுடைய இந்த whatsapp நம்பருக்கு உங்கள் பிறந்த தேதி நேரம் விவரங்கள் அனுப்பி 

 கட்டணம் செலுத்தி தொலைபேசி வழியே ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம் 

Phone Call 97 42 88 64 88 
What’s up 97 42 88 64 88 

தொடரும் ….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *