பாடம் – 1 | ஜாதகம் கற்றுக் கொள்வது எப்படி ? | அடிப்படை ஜோதிட பாடம் – 1 | Vedic Astrology
அறிமுகம்
மனிதனை நெறிப்படுத்த இறைவனே குருவாகி ஏற்படுத்திய சாஸ்திரங்கள் பல உண்டு , அதிலே மிக உயர்ந்த உன்னத சாஸ்திரம் இந்த ஜோதிட சாஸ்திரம் ஆகும் ! இந்த சாஸ்திரம் வேதகால முதல் இன்றைய நவீன காலம் வரை என அனைத்து காலங்களிலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறது இந்த ஜோதிட சாஸ்திரம் !
நமது இந்திய தேசத்தின் வடமொழி இலக்கிய வரலாற்றி முதல் இடத்தில் இருப்பவை ரிக், யஜுர் , சாமம், அதர்வணம் என்று சொல்லக்கூடிய நான்கு வேதங்கள் ஆகும் .
வணக்கம் ஜோதிட மாணவர்களே நேயர்களே !
ஜாதகம் படிப்பது என்பது அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொள்வதின் மூலம் எதிர்காலத்தில் ஒரு ராசி கட்டத்தை வைத்து ஜாதகம் முழுமையாக சொல்ல முடியும் ! ஒரு ஜாதகத்தை பார்த்து முழுமையான பலன் சொல்வதற்கு இந்த அடிப்படையான விஷயங்களை தெளிவாக படிக்க வேண்டியது அவசியம் ! எனவேதான் இந்த அடிப்படை ஜோதிட பாடங்களை இதே blogger website இல் ( https://www.snganapathiastro.com ) தொடர்ந்து எழுதி வருகிறேன் ! புதிய நேயர்கள் இந்த website ஐ Follow செய்யுங்கள் ! மேலும் whatsapp வழி வீடியோ பதிவாக என்னிடம் ஜோதிடம் படிக்க விரும்புபவர்கள் என்னுடைய இந்த whatsapp நம்பரில் தொடர்பு கொள்ளலாம் ! What’s up 97 42 88 64 88 . வாருங்கள் இப்பொழுது அடிப்படை ஜோதிடம் பாடம் இரண்டிற்கு செல்லலாம் !
ஜோதிட சாஸ்திரம்
மேஷம் , ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி , துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் ஆகிய பன்னிரு ராசிகளில் இடம்பெற்றுள்ள நட்சத்திர மண்டலங்கள் வழியாக சூரியன் , சந்திரன், செவ்வாய் , புதன் , குரு , சுக்கிரன் , சனி , ராகு , கேது ஆகிய 9 கிரகங்கள் சஞ்சாரம் செய்வதால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை அறிய உதவி புரியும் மிகச்சிறந்த கணித சாஸ்திரமே இந்த மாபெரும் ஜோதிட சாஸ்திரமாகும் !
ராசி மண்டலம் விளக்கம் !
சூரியனை மையப்படுத்தியே 12 ராசி கட்டங்களும் பிரிக்கப்பட்டுள்ளன ! கீழே உள்ள வரைபடத்தை ( Chart – 1 ) பாருங்கள் !
|
அடிப்படை ஜோதிட பாடம் |
ராசி மண்டலம் என்பது வட்ட வடிவமைப்பை உடையது . ஜோதிட அமைப்பை எளிமையாக புரிந்து கொள்ளும் விதத்தில் ராசி மண்டலத்தை கட்டமாக அமைத்து கிரக நிலைகளை அடைவு செய்து தற்காலத்தில் பலன்கள் சொல்லப்பட்டு வருகின்றன !
12 ராசி பெயர்களும் அதற்குரிய ஆங்கில பெயர்களும்
மேஷம் ♈ ARIES
ரிஷபம் ♉ TAURUS
மிதுனம் ♊ GEMINI
கடகம் ♋ CANCER
சிம்மம் ♌ LEO
கன்னி ♍ VIRGO
துலாம் ♎ LIBRA
விருச்சிகம் ♏ SCORPIO
தனுசு ♐ SAGITTARIUS
மகரம் ♑ CAPRICORN
கும்பம் ♒ AQUARIUS
மீனம் ♓ PISCES
ஆண் ராசிகள்
மேஷம் , மிதுனம் , சிம்மம் , துலாம் , தனுசு , கும்பம் ஆகிய ஆறு ராசிகள் ஆண் ராசிகள் ஆகும். ஆண் ராசியில் பிறந்தவர்கள் தைரிய வீரிய பராக்கிரமத்தில் இருப்பார்கள் ! ( Tough Character)
பெண் ராசிகள்
ரிஷபம் , கடகம் , கன்னி , விருச்சிகம் , மகரம் , மீனம் ஆகிய ஆறு ராசிகள் பெண் ராசிகள் ஆகும் . பெண் ராசியில் பிறந்தவர்கள் இளகிய தன்மையோடு இருப்பார்கள் ( soft character )
சரம் ஸ்திரம் உபயம் ( ராசிகளின் தன்மைகள் )
சர ராசிகள்
மேஷம், கடகம், துலாம், மகரம்
சரராசிகளுடைய தன்மைகள் ஓடிக்கொண்டே இருப்பது . சென்றால் திரும்ப வராது . சென்று கொண்டே இருக்கும் . ஒரு இடத்திலும் நிலைத்து நிற்காது .
ஸ்திர ராசிகள்
ரிஷபம் , சிம்மம், விருச்சிகம் , கும்பம்
பஸ்திர ராசிகளுடைய தன்மைகள் ஒரே இடத்தில் நிலைத்து நிற்பது . வேறு எங்கும் செல்ல விரும்பாது
உபய ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு, மீனம்
உபய ராசிகளுடைய தன்மைகள்
ஒரு நிலையில்லாதது . செல்வதும் வருவதுமான குணத்தை உடையது. ஒரு இடத்தில் இருந்து வரும், மீண்டும் அந்த இடத்திற்கு சென்று விடும் , மீண்டும் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லும் . இதுவே உபய ராசிகளின் தன்மைகள் ஆகம் .
சரம் ஸ்திரம் உபயம் ராசிகளுக்கான ஒரு உதாரணம்
சர ராசியில் பிறந்த ஒருவர் வெளிநாட்டுக்கு செல்கிறார் என்றால் .. அங்கு ஒரே நாட்டில் இருக்க மாட்டார்.. மீண்டும் வேறு நாட்டிற்கு இடம் பெயர்வார்.. சிறிது காலம் பொறுத்து மீண்டும் இன்னொரு வெளிநாட்டிற்கு இடம் பெயர்வார்.. இப்படி வெளிநாடு வெளிநாடாக இடம் மாறிக் கொண்டே இருப்பார்.
.. ஆனால் தனது பூர்வீகத்திற்கு திரும்ப வர மாட்டார்.. இதுவே சர ராசியல் பிறந்தவருடைய குணம்
!
ஸ்திர ராசியில் பிறந்த ஒருவர் .. வெளிநாட்டிற்கு செல்கிறார் என்றால்.. அந்த ஒரே நாட்டில் கடைசி வரைக்கும் வேலை செய்வார் .. ! தனக்கு வயதாகும் காலம் வரை அந்த வேலையை செய்வார்.. அதாவது ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும் தன்மை உடையவர்கள் இந்த ஸ்திர ராசியில் பிறந்தவர்கள் !
உபய ராசியில் பிறந்த ஒருவர்… வெளிநாட்டிற்கு செல்கிறார் என்றால்.. சிறிது காலம் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு.. மீண்டும் சொந்த ஊருக்கே வந்து விடுவார்.. மீண்டும் சிறிது காலம் பொறுத்து அதே வெளிநாட்டிற்கு சென்று விடுவார்.. பிறகு சிறிது காலம் பொறுத்து தன்னுடைய சொந்த நாட்டிற்கு வந்து விடுவார்.. இப்படி போவதும் வருவதுமான குண இயல்பை உடையவர்கள் இந்த உபய ராசியில் பிறந்தவர்கள் !
பஞ்சபூத தத்துவ ராசிகள்
நெருப்பு ராசிகள்
மேஷம், சிம்மம் , தனுசு ஆகிய மூன்று ராசிகள் நெருப்பு ராசிகள் ஆகும் . இந்த ராசிகளில் பிறந்தவர்கள் வேகம், கோபம், ஆதிக்கத்தை உடையவர்கள் !
நில ராசிகள்
ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசிகள் நில ராசிகள் ஆகும் . இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக கையாளுவார்கள் பொறுமை குணம் உடையவர்கள்.. அதாவது பூமா தேவி போல் ( பூமி ) பொறுமை குணம் உடையவர்கள் .
காற்று ராசிகள்
மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகள் காற்று தத்துவத்தை உடைய ராசிகள் ஆகும் . இந்த ராசியில் பிறந்தவர்கள் தகவல் தொடர்பும் பொது அறிவும் நிரம்பியவர்கள் ஆவார்கள் . காற்று போல் தகவல்களை பரப்பும் சக்தி உடையவர்கள் .
நீர் ராசிகள்
கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிகள் நீர் தத்துவத்தை உடைய ராசிகள் ஆகும் . இந்த ராசியில் பிறந்தவர்கள் , மனதில் இரக்க குணம் உடையவர்கள், எல்லோர் மீதும் அதிகப்படியான அன்பை வெளிப்படுத்துபவர்கள், பயணம் செய்வதில் அதிக பிரியம் உள்ளவர்கள் .
என்னைப் பற்றி
நான் ஜோதிஷ வித்யாவதி , ஜோதிடர், எண் கணித நிபுணர், வீடு வாஸ்து ஸ்பெஷலிஸ்ட் S.N. கணபதி B.Lit , M.A, D.Astro
What’s up And Ph : 97 42 88 64 88
மேலும் முழு ஜாதக பலன் அறிய..
அதாவது வேறு ஏதேனும் தனிப்பட்ட கேள்வி இருந்தால்..
தொலைபேசி வழி ஜாதக பலன் அறிய ..
என்னுடைய இந்த whatsapp நம்பருக்கு உங்கள் பிறந்த தேதி நேரம் விவரங்கள் அனுப்பி
கட்டணம் செலுத்தி தொலைபேசி வழியே ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்
Phone Call 97 42 88 64 88
What’s up 97 42 88 64 88
தொடரும் ….
Post Views: 102
சிறந்த பதிவு
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
தொடர்ந்து பதிவுகளை படியுங்கள்