மேஷ ராசி | ஆகஸ்டு மாத ராசி பலன்கள் | August month rasi palan 2024 | Monthly Mesha rasi palan 2024
August 1 2024 கிரக நிலை |
மேஷ ராசி | ஆகஸ்டு மாத ராசி பலன்கள் மேஷம் | August month rasi palan mesham
மேஷ ராசி நேயர்களே !
தைரியமும் வீரமும் நிறைந்தவர்கள் நீங்கள்! வீண் வம்பிற்கு செல்ல மாட்டீர்கள் வந்த சண்டையை விட மாட்டீர்கள் ! இதோ உங்களுக்கான 2024 ஆகஸ்ட் மாத மேஷ ராசி பலன்கள் !
சுக்கிர பெயர்ச்சி பலன் | sukra peyarchi palangal
இந்த மாதம் சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கிறது . வரவேண்டிய சிறுசிறு பணத்தொகை உங்கள் கைக்கு வந்து சேரும் .
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஏற்பாடு நடக்கும் . திருமணம் கைகூடும் .
2025 மார்ச் மாதம் முதல் உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்க இருப்பதினால் இப்பொழுதே முக்கியமான விஷயங்களை சுறுசுறுப்புடன் நீங்கள் செய்து முடிக்க வேண்டும் . இந்த மாதம் ஆகஸ்ட் 20க்குள் உங்களுக்கு பணம் சார்ந்த விஷயத்தில் நன்மைகள் நடக்கும் . திருமண வரனும் பேசி முடித்து விட வேண்டும் . குரு மங்கள யோகம் இருந்தாலும் , ராசிப்படி செவ்வாயின் சஞ்சாரம் சிறப்பு இல்லை . எனவே வீண் வம்பு வழக்குகளுக்கு செல்ல வேண்டாம் ஒதுங்கியே இருங்கள் . வெளிநாட்டு பயணங்களை இந்த மாதம் தள்ளிப் போடுங்கள் . உங்கள் குழந்தைகள் சார்ந்த விஷயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் !
பெண்கள் வழி ஆதாயங்கள் ஏற்படும் . கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். இல்லறத்தில் நல்ல மகிழ்ச்சி நிலவும் . இதுவரை இருந்த கருத்து வேறுபாடு மாறி கருத்து ஒற்றுமை ஏற்படும் . வரவேண்டிய சிறு சிறு பணத்தொகை கைக்கு வந்து சேரும் . வண்டி வாகனம் வாங்குவதற்கு ஏற்ற மாதம் இது . ஏற்கனவே வண்டி வாகனம் வாங்க திட்டம் போட்டவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாகும் .
அலங்காரப் பொருட்கள் விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள் .
நீங்கள் வேலை செய்த இடத்தில் சரி வர சம்பளம் கொடுக்காமல் இருந்தால் இந்த மாதம் உங்களுக்கான சம்பளங்கள் பூர்த்தியாகும் . சம்பள உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு இந்த மாதம் முயற்சி செய்தால் சம்பள உயர்வு கிடைக்கும் . சிறு சிறு வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல பண வரவு இந்த மாதம் உண்டு !
சூரிய பெயர்ச்சி பலன்கள் | surya peyarchi
இந்த மாதம் சூரியனின் சஞ்சாரம் தங்களுக்கு சிறப்பு இல்லை ! எனவே அரசு மற்றும் அரசு சார்ந்த விஷயங்கள் தற்போது அனுகூலம் கொடுக்காது .
அரசு சார்ந்த மேல் மனு போடுவது , அரசு அதிகாரிகளை சந்திப்பது , இந்த மாதம் தள்ளிப் போடவும் !
உங்கள் தந்தையாருக்கும் உங்களுக்கும் மனக்கசப்பு ஏற்படும். எனவே தந்தையோடு வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும் . தந்தை வகை உறவுகளினால் தொந்தரவு ஏற்படும். எனவே கவனம் தேவை . உங்கள் தந்தையார் எடுக்கும் முடிவு உங்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தும் . எனவே தந்தையை சார்ந்த விஷயங்களை ஆர போட்டு அமைதி காக்கவும் . தந்தை சார்ந்த விஷயத்தில் முக்கிய முடிவுகளை இந்த மாதம் எடுக்க வேண்டாம் .
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் இந்த மாதம் சற்று கவுரவம் குறைச்சல் ஏற்படும் . உங்கள் மீது அவதூறு ஏற்பட வாய்ப்பு உண்டு . எனவே வேலை செய்யும் இடத்தில் முக்கியமான ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் . இந்த மாதம் அதிகப்படியான கோபம் வரும் . யோகா செய்யுங்கள் . அல்லது மூச்சு பயிற்சி செய்யுங்கள் . திருமணம் ஆனவர்களுக்கு மாமனார் வழி தொந்தரவுகள் ஏற்படும் . இந்த மாதம் ஆன்மீகத் தலைவர்களை சந்திப்பதை தள்ளி போடுங்கள் .
உடல் உஷ்ணம் சம்பந்தப்பட்ட தாக்கங்கள் ஏற்படும் . இயற்கையாக கிடைக்கும் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுங்கள் . உதாரணம் இளநீர் . குளிர்ச்சியான பழங்கள் சாப்பிட்டு வர வேண்டும் . சீதளம் இருந்தால் , மேற் சொன்ன உணவுகளை அளவோடு சாப்பிட வேண்டும் . வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக சென்று வாருங்கள் . வேகம் கூடாது பொறுமையாக செல்வது சிறப்பு .
வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு .. வீட்டு சொந்தக்காரர்களால் சில இடையூறுகள் ஏற்படும் .. இந்த மாதம் சற்று பொறுத்துக் கொள்ள வேண்டும் .
வரவேண்டிய வருமானம் தடைப்பட்டு கிடைக்கும் . இந்த மாதம் மலை மேல் உள்ள கோவிலுக்கு செல்ல வேண்டாம் . மலை மேடான பகுதியில் ஏற வேண்டாம் . கடன் விஷயத்தில் மிகுந்த நெருக்கடி ஏற்படும் . எனவே புதிதாக இந்த மாதம் எதுவும் கடன் வாங்க வேண்டாம் . அதேபோல் புதிதாக கடனும் யாருக்கும் கொடுக்க வேண்டாம் . இது இந்த மாதம் மட்டுமே . வம்பு வழக்கு எதிலும் இந்த மாதம் தலையிட வேண்டாம் . ஒத்தி போடுவது உங்களுக்கு பாதுகாப்பு .
அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு , மேல் அதகாரிகளால் நெருக்கடி ஏற்பட்டும் . இந்த மாதம் அதிகமாக வெயில் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கவும் .
செவ்வாய் பெயர்ச்சி | sevvai peyarchi
இந்த மாதம் செவ்வாயின் சஞ்சாரம் உங்களுக்கு அனுகூலமாக உள்ளது . சகோதர வழி உறவுகள் மேம்படும் . சகோதர சகோதரி வழி இருந்த மனக்கசப்பு தீரும் . இருப்பினும் சொத்து சார்ந்த விஷயங்களுக்கு இந்த மாதம் அணுகலும் இல்லை . இந்த மாதம் தைரியமாக செயல்படுவீர்கள் . ஆனால் அதே சமயம் அதிகப்படியான கோபம் வருவதால் . என்ன செய்கிறோம் என்ன பேசுகிறோம் என்பதை பற்றி யோசனை செய்து பேசுங்கள் .
பெண்களுக்கு கணவர் வழி உயர்வை காண முடியும் . கணவரின் ஆதரவு கிடைக்கும் . உங்கள் மனதில் உள்ள ஆசைகளை இப்பொழுது உங்கள் கணவரிடம் கேட்டு பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய மாதம் இது . உங்கள் சகோதர வழியாகவும் ஆதாயங்கள் ஏற்படும். சகோதர வழி உறவுகளும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் இந்த மாதம் மட்டுமே .
பெண்கள் இந்த மாதம் துர்க்கை வழிபாடு செய்வது மேலும் உங்களுக்கு நல்ல அனுகூலத்தை ஏற்படுத்தித் தரும் ! இந்த மாதம் வீட்டில் அதிகமாக துர்க்கை பாடல்களை காலை நேரத்தில் கேட்டு வாருங்கள் . நீங்கள் நினைத்த ஒரு விஷயம் பூர்த்தியாகும் . உங்கள் கணவர் வழி வீடு வாகன யோகம் ஏற்படும் . வீடு அல்லது வாகனம் வாங்க திட்டம் போட்டு இருந்தால் உங்கள் கணவரோடு சேர்ந்து வாங்குவீர்கள் . இதற்கு ஏற்ற காலம் இந்த மாதமாகும் . ( August 2024 )
முக்கிய குறிப்பு : எது செய்வதாக இருந்தாலும் ஆகஸ்ட் 20 க்குள் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் .
இந்த மாத தெய்வ வழிபாடு
மேஷ ராசி நேயர்களே !
இந்த மாதம் நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் , லட்சுமி வழிபாடு செய்யுங்கள் ! அல்லது அலங்காரமாக வடிவமைக்கப்பட்டுள்ள அம்பாள் வழிபாடு செய்யுங்கள் .
உங்கள் ஊரின் அருகில் உள்ள முருகர் வழிபாடும் உங்களுக்கு நற்பலனை தரும் . எனவே அலங்கார அம்மனையும் அலங்கார முருகரையும் வழிபாடு செய்யுங்கள். நீங்கள் கேட்டது கிடைக்கும் தொட்டது துலங்கும் மாதம் இந்த மாதமாகும் !
நீங்கள் வேண்டியது கிடைக்கும் .
இந்த மாத அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 9 . அதிர்ஷ்ட நிறம் வெண்மை + சிகப்பு .
August 31 2024 கிரக நிலை |
என்னை பற்றி
நான் ஜோதிஷ வித்யாவதி , ஜோதிடர், எண் கணித நிபுணர், வீடு வாஸ்து ஸ்பெஷலிஸ்ட் S.N. கணபதி B.Lit , M.A, D.Astro
What’s up And Ph : 97 42 88 64 88
மேலும் முழு ஜாதக பலன் அறிய..
அதாவது வேறு ஏதேனும் தனிப்பட்ட கேள்வி இருந்தால்..
தொலைபேசி வழி ஜாதக பலன் அறிய ..
என்னுடைய இந்த whatsapp நம்பருக்கு உங்கள் பிறந்த தேதி நேரம் விவரங்கள் அனுப்பி
கட்டணம் செலுத்தி தொலைபேசி வழியே ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்
Phone Call 97 42 88 64 88
What’s up 97 42 88 64 88
அடுத்தடுத்து உங்கள் மேஷ ராசிக்கு உரிய
குரு பெயர்ச்சி பலன்கள் ..
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் …
சனிப்பெயர்ச்சி பலன்கள்..
மாத ராசி பலன்கள்..
என அனைத்து கிரக பெயர்ச்சி பலன்களும்
இதே SN Ganapathi Astrologer website இல் இடம்பெறும் !
அவ்வபோது உங்களுக்கு உரிய பலனை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்..
வாழ்த்துக்கள் !