தனுசு ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் ( 2025 to 2027 )| dhanusu rasi new update

dhanusu rasi new update / sani peyarchi 2025 to 2027 tamil


தனுசு ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 

( 2025 to 2027 )| dhanusu rasi new update | 

அர்த்தாஷ்டம சனி என்ன செய்யும் ? 

சோதனை மேல் சோதனை

தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பம் ! வருகின்ற 2025 ஆம் வருடம் மார்ச் மாதம் 30 ஆம் தேதி முதல் .. சனி பகவான் கும்பத்தில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் ! இந்த சனிப் பெயர்ச்சி ( 2025 to 2027 ) தனுசு ராசிக்கு நான்காம் இடமாகும்..
நான்காம் இடத்து சனி என்பது அர்த்தாஷ்டம சனி ஆகும் ! ( dhanusu rasi new update )

1) நட்சத்திரம்

மூல நட்சத்திரம் 1,2,3,4 ஆம் பாதங்கள் , பூராடம்  நட்சத்திரம் 1,2,3,4 ஆம் பாதங்கள், உத்திராடம் 1 ஆம் பாதம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு இது அர்த்தாஷ்டம சனி காலமாகும் ! மேற்சொனன நட்சத்திரங்களில் நீங்கள் எந்த நட்சத்திரமாக இருந்தாலும் 2025 முதல் 2027 வரை சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! 

எந்தெந்த விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டுமென்றால் ..

2) தொழில் 

 1)புதிதாக தொழில் தொடங்க ஆரம்பித்தாலோ.. அல்லது ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலை விரிவுபடுத்த நினைத்தாலோ… அதற்கு இது உகந்த காலம் இல்லை .. (2025 to 2027 ) 

3) உத்தியோகம்

2) உத்தியோகத்திற்கு செல்பவர்கள்.. ( job ) ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும்… நீங்கள் செய்து கொண்டிருக்கும் உத்தியோகத்தை மாற்ற நினைத்தால்.. 2025 மார்ச் மாதத்திற்குள் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்…

4) திருமணம்

திருமணம் ஆன தனுசு ராசி நேயர்களே .. இந்த அர்த்தாஷ்டம சனி காலகட்டத்திலேயே குடும்ப செலவுகள் அதிகரிக்கும்.. எவ்வளவு வருமானம் வந்தாலும் பத்தாது .. மேற்கொண்டு கடன் வாங்கி எந்த ஒரு சுப செலவையும் செய்ய நேரிடும்.. அதுமட்டுமல்ல சற்று கவனக்குறைவாக இருந்தால் வீண் செலவு ஆகிவிடும் ..

திருமணம் ஆகாத தனுசு ராசி நேயர்களே.. அல்லது திருமண வயதில் இருக்கும் தனுசு ராசி நேயர்களே… இந்த காலகட்டத்திலே திருமணத்திற்கான முயற்சி மட்டும் உங்களுக்கு வெற்றி தரும்.. திருமணம் செய்யலாம்..!  உங்கள் ஜனன கால ஜாதகப்படி தசா புத்தி நல்ல அணுகூலமாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக உங்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமணம் நடக்கும்.. !

5) இல்லத்தரசிகளே !

 இல்லத்தரசிகளுக்கு இது சத்திய சோதனை காலமாகும் ! இந்த அர்த்தாஷ்டம சனி உங்களுக்கு பெரிய சவால்களை கொண்டு வரும் ! கால பைரவர் வழிபாடு உங்களுக்கு நிம்மதியை தரும்.. வீண் தொந்தரவுகளை குறைக்கும்.. ! கணவர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் உங்களால் மிச்சம் படுத்த முடியாத ஒரு சூழ்நிலை இந்த காலகட்டமாகும் ! எனவே பண விஷயத்தில் கவனம் தேவை ! கணவருக்கு உடல்நிலை குறைவு ஏற்படும்.. பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்..
ஆனால் ஒரு நல்ல விஷயம் திருமண வயதில் உள்ள உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்யலாம் ! திருமணம் சார்ந்த சுப செலவுகள் உண்டு‌! 

6) மாணவர்களே !

தனுசு ராசி கொண்ட மாணவர்களே ! கடந்த வருடம் படித்ததை விட கூடுதல் கவனத்தோடு நீங்கள் இந்த காலகட்டத்தில் படிக்க வேண்டும் ! ( 2025 to 2027 ) உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு படிப்பு சொல்லித் தரும் ஆசிரியர்கள் சொல்லும் விஷயங்கள் உங்களுக்கு கஷ்டமாகத்தான் தோன்றும் ! எல்லாம் உங்கள் நன்மைக்காகத்தான் என்று புரிந்து கொண்டால் இந்த காலகட்டம் உங்களுக்கு தேர்வில் நல்ல வெற்றி வாய்ப்புகளை கொடுக்கும் ! உங்கள் பெற்றோர்களையோ அல்லது ஆசிரியர்களையோ சற்று அலட்சியப்படுத்தினாலும் பாதிப்பு உங்களுக்கு தான் ! பொறுப்புணர்வும் பக்குவமும் உள்ள மாணவர்கள் வெற்றி பெறுவது உறுதி ! சனி பகவான் இப்படிப்பட்ட மாணவர்களுக்கு நல்ல அனுகூலத்தை இந்த காலகட்டத்தில் நிச்சயம் கொடுப்பார்! 

7) ஒரே வீட்டில் இரண்டு நபர்களோ அல்லது  இரண்டு நபர்களுக்கு மேற்பட்டவர்களோ தனுசு ராசியாக இருந்தால்.. !


இந்த காலகட்டம் சோதனை மேல் சோதனை தரும் ! குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும் .. காரணமே இல்லாமல் வாக்குவாதங்கள் ஏற்படும் .. ஒருவருக்கொருவர் அதிருப்தி ஏற்படும் .. உற்றார் உறவினர்கள் ரீதியாகவும் தொந்தரவுகள் ஏற்படும் .. நல்ல தொழிலோ நல்ல வேலையோ அமைந்து இருந்தாலும் கூட அதிலே பல இடையூறுகள் ஏற்படும்.. ஒரே வீட்டில் நிறைய பேருக்கு தனுசு ராசியாக இருந்தால் ஒரே ராசியாக இருந்தால் இது போன்ற சனிப்பெயர்ச்சி காலகட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் .. ( அதாவது ஏழரை சனி , அஷ்டம சனி , அர்த்தாஷ்டம சனி , ஜென்ம சனி , கண்டக சனி ,  ஏற்படும்போது தாக்கத்தை கொடுக்கும் ) பொறுமையும் பொறுப்பும் நிதானமும் கடைபிடித்தால்.. குடும்பத்தை ஒரு கட்டுக்கோப்பாக பாதுகாப்பாக நடத்தி செல்ல முடியும்.. எனவே இந்த காலகட்டத்தை சர்வ ஜாக்கிரதையாக கடக்க வேண்டியது உங்கள் கடமை ! 


8) அறுவது வயதிற்கு மேற்பட்ட தனுசு ராசி நேயர்களே.. குறிப்பாக வயதானவர்களே.. 


இந்த சுற்று இரண்டாவது சுற்றாக இருந்தால் நீங்கள் பயப்படத் தேவையில்லை.. மூன்றாவது சுற்று என்றால் சற்று கவனமாக இருக்க வேண்டும்.. ஆனால் ஏழரை சனி அளவுக்கு தாகத்தை ஏற்படுத்தாது.. அதில் பாதி அளவு தாக்கத்தை ம நிச்சயம் ஏற்படுத்தும் ! அர்த்தாஷ்டம சனி தானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.. அடி பலமாக விழுந்தால் என்ன .. பொறுமையாக விழுந்தால் என்ன அடி அடி தானே.. தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.. எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும்.. அஜீரண கோளாறு தரும் பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.. இந்த உணவு முறை பழக்கத்தை நீங்கள் கொண்டு வந்தாலே ஓரளவு உங்கள் தேக ஆரோக்கியத்தை  பாதுகாத்துக் கொள்ள முடியும் ..‌ 

9) வீடு, சொத்து , 

வீடு , வண்டி வாகனங்கள் விற்பது வாங்குவது போன்ற செயல்களை இந்த காலகட்டத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் .. 2025 மார்ச் மாதத்திற்குள் ஆரம்பித்து விடலாம்.. அதற்குப் பிறகு இரண்டரை வருடம் பொறுமையாக இருங்கள்.. 2027 பிறகு நீங்கள் புதிய செயல்களை ஆரம்பிக்கலாம் ! 

10) பொருளாதார விஷயத்தில் .. 

பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருங்கள்.. யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்.. சொந்த உறவுகளே என்றாலும் நண்பர்களே என்றாலும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்.. ஏனென்றால் இது உங்களுக்கு அனுகூலமற்ற காலகட்டமாகும்.. உறவினர்களும் நண்பர்களும் கூட எதிரியாவார்கள், பண விஷயத்தில் ! 

11) அரசாங்க வேலை 

அரசாங்க வேலைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தனுசு ராசி நேயர்களே ! இதுவரை செய்து வந்த முயற்சியை விட எட்டு மடங்கு நீங்கள் முயற்சி செய்தால் மட்டுமே நீங்கள் நினைத்ததை சாதிக்க முடியும்.. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டால் வெற்றி வாய்ப்புகள் கிடைக்காது .. எனவே அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்கள் கூடுதல் கவனத்தோடு முயற்சி செய்யுங்கள் ! உங்கள் ஜனகால ஜாதக அடிப்படையில் தசா புத்தி நன்றாக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் ! 


12) வெளிநாடு வேலை வாய்ப்பு !

வெளிநாடு வேலை வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் .. தனுசு ராசி நேயர்களே ! பொறுமையாகவும் கடமை உணர்ச்சியோடும் நியாயமாகவும் நீங்கள் முயற்சி செய்தால் நிச்சயம் வெளிநாடு வாய்ப்பு வெளிநாடு யோகம் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும் ! சனிபகவான் மீனத்தில் பெயர்ச்சி ஆவதால் .. மீனம் நீர் ராசி என்பதால்.. கால புருஷ தத்துவப்படி அது பன்னிரண்டாவது வீடு என்பதால்.. மீன ராசி வெளிநாட்டை குறிக்கும் ஒரு இடம் என்பதால்.. அதாவது வெளிநாடு வாய்ப்புகளை குறிக்கும் ஒரு இடம் என்பதால்.. சனிக்கோலும் அயல்நாட்டைக் குறிக்கும் என்பதால்.. வெளிநாட்டு யோகம் நிச்சயமாக தனுசு நேயர்களுக்கு கொடுக்கும்.. மேலும் சனி பகவான் உங்கள் ராசிப்படி இரண்டாம் வீட்டிற்கு அதிபதி என்பதால்.. வெளிநாடு வெளியூர் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு பண வருமானத்தை கொடுப்பார்..எனவே  இந்த ஒரு விஷயத்திற்கு இந்த அர்த்தாஷ்டம சனி வெளிநாட்டிற்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல விஷயத்தை கொடுக்கும்.. நிரந்தர குடி உரிமை பெறுவதற்கும்.. இது ஏற்ற காலமாகும்..  வெளிநாட்டிற்கு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இது உகந்த காலமாகும் ! 

13) அரசியல்

தனுசு ராசி கொண்ட அரசியல் துறை வல்லுனரகளுக்கு.. அரசியல் கட்சி தலைவர்களுக்கு.. சில வெற்றி வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில் ஏற்படும்.. மக்களுக்காக செய்யக்கூடிய விஷயங்களில் வெற்றி தரும்.. இதனால் பட்டம் பதவி பெயர் புகழ் தேடி வரும்.. அரசியலில் ஆழமாக ஊன்றுவதற்கு இந்த காலகட்டம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்… மக்கள் மனதில் இந்த காலகட்டத்தில் ஆழமாக இடம் பிடிக்கலாம்.. ஊர் அளவிலோ மாவட்ட அளவிலோ மக்களுக்காக நீங்கள் சேவையாற்றும் பட்சத்தில் எதிர்காலத்தில் உங்கள் அரசியல் செல்வாக்கு உயரம் ! எனவே அரசியல் சார்ந்தவர்களுக்கு இந்த காலகட்டம் ஒரு பொற்காலமாகும் .. ! உங்கள் திறமைகளை வெளிக்காட்ட கூடிய மிக உன்னத கால கட்டமாகும்.. ! அதே சமயம் போட்டிகளும் பொறாமைகளும் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அதிகரிக்கும்.. எனவே மக்கள் மனதில் நீங்கள் இடம் பிடித்து விட்டால் போட்டிகள் பொறாமைகள் தவிடு பொடியாகிவிடும்.. !! 

14) காதல் திருமணம் கை கூடாது.. ! 

காதலன் அல்லது காதலி உங்களை ஏமாற்றி விடுவார் !  இளைஞி மற்றும் இளைஞர்களே காதல் வலையில் விழுந்து விடாதீர்கள் ! உங்களை ஆசை காட்டி மோசம் செய்து விடுவார்கள் .. பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்யலாம் என்று நினைத்தால்.. ! எதிர்காலத்தில் உங்களின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் ! மேலும் உங்கள் ஜனன கால ஜாதக அடிப்படையில் தற்போது ராகு தசை நடக்குமே ஆனால்.. 100% உங்கள் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.. ! ஒருவேளை பெற்றோர்களின் சம்மதத்தோடு காதல் திருமணம் நடைபெற்றால் தப்பித்து விடலாம் ! வாழ்க்கை சீராகிவிடும் ! பெற்றோர்கள் ஆசீர்வாதம் இல்லாத திருமணம் இந்த காலகட்டத்தில் சரிபடாது ! 

2025 March 30 முதல் .. 

சனிப்பெயர்ச்சி ஆனவுடன்.. முதல் 12 மாதங்கள் ஆனது .. மூலம் நட்சத்திர நேயர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்… 
அடுத்த 12 மாதங்கள் பூராட நட்சத்திர நேயர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்…
இதற்கு அடுத்த ஆறு மாதமானது பூராட நட்சத்திர நேயர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.. என்பதை நினைவில் கொண்டு.. இந்தப் பதிவில் சொன்ன அத்தனை விஷயங்களின் தாக்கம் உங்களுக்கு எப்போது ஏற்படும் என்பதை புரிந்து கொண்டு செயல்படுங்கள்… !

 பொறுமையும் நிதானமும் உங்கள் கைவசம் இருந்தால் இந்த காலகட்டத்திலும் நீங்கள் சில வெற்றி வாய்ப்புகளை அடைய முடியும் ! 

பரிகாரம்‌ ! 

இந்த காலகட்டத்தில் நீங்கள் அவசியம் செய்ய வேண்டிய பரிகார முறை ! 
உங்கள் ஊரின் அருகில் உள்ள சித்திரகுப்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வாருங்கள் , சித்ரகுப்தர் கோவில் கண்டுபிடிக்க முடியாதவர்கள்.. கால பைரவரை வழிபட்டு வாருங்கள்..

மேலும் பண வசதி வாய்ப்பு உள்ளவர்கள்.. உங்களுக்கு அருகில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள் ! இதனால் சனி பகவான் மகிழ்ச்சி அடைந்து உங்களுக்கு மேலும் பண வரவு வாய்ப்புகளை கொடுப்பார்.. !
உங்கள் சக்திக்கு உண்டான பரிகாரங்களை செய்யுங்கள்..
பொருள் உதவி கூட உங்கள் சக்திக்கு உண்டான பொருள் உதவி செய்யுங்கள்..
ஏனென்றால் தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும் .. 

ஜாதகம் தொலைபேசி வழி பார்க்கப்படும் !

உங்கள் ஜாதகப்படி மேலும் முக்கியமான விஷயங்கள் , முக்கியமான முடிவுகள், தொழில் சார்ந்த விஷயங்கள், வேலை, திருமணம் , வீடு, வாகன யோகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மற்றும் 
உங்கள் தனிப்பட்ட கேள்விகளுக்கான பலன்களை தெரிந்து கொள்ள.. 
 உங்களுடைய பிறந்த தேதி, பிறந்த நேரம் விவரங்களை என்னுடைய இந்த What’s up நம்பரில் அனுப்பி கட்டணம் செலுத்தி பார்த்துக் கொள்ளலாம் வாழ்த்துக்கள் 
What’s up : 97 42 88 64 88
Phone Call : 97 42 88 64 88 

இனி அடுத்தடுத்த பதிவுகளிலே .. 

உங்கள் தனுசு ராசிக்கு உரிய
குரு பெயர்ச்சி பலன்கள் ..
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் …
சனிப்பெயர்ச்சி பலன்கள்..
மாத ராசி பலன்கள்..
என அனைத்து கிரக பெயர்ச்சி பலன்களும் இதே website இல் இடம்பெறும் !
அவ்வபோது உங்களுக்கு உரிய பலனை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்..

SN Ganapathi Astrologer Rasi Palan 

இந்த website ஐ follow செய்யுங்கள்
 !
வாழ்த்துக்கள் !


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *