Part – 1 | அதிர்ஷ்ட எண்கள் | numerology alphabet number | baby name numerolgy
அறிமுகம்
அதிர்ஷ்ட எண்களை பயன்படுத்தும் போது வாழ்க்கையில் பல நன்மைகள் நடப்பதை கண்கூடாக பலர் அனுபவித்திருக்கிறார்கள் ! இந்த அதிர்ஷ்ட எண்களை பயன்படுத்தும் போது எனக்கும் பல நன்மையான விஷயங்கள் நடைபெற்று இருக்கின்றன. தொடர்ந்து என் வாழ்வில் பல நன்மைகள் நடந்து கொண்டிருக்கின்றன ! எனவே யாம் கண்ட இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்காகவே இந்த பதிவை வெளியிடுகிறேன் !
நான் ஜோதிஷ வித்யாவதி , ஜோதிடர், எண் கணித நிபுணர், வீடு வாஸ்து ஸ்பெஷலிஸ்ட் S.N. கணபதி B.Lit , M.A, D.Astro
What’s up And Ph : 97 42 88 64 88
இந்த website இதல் தொடர்ந்து பல ஜோதிட ரீதியான பதிவுகளை எழுத இருக்கிறேன் ! என்னுடைய இந்த SN Ganapathi Astrologer website ஐ follow செய்யுங்கள் !
எண் கணிதம் ஓர் அறிமுகம்
மனித வாழ்க்கையில் எண்களும் எழுத்துகளும் ஏதோ ஒரு வகையில் நல் ஆதிக்கம் செலுத்துகின்றன என்று நம்முடைய முன்னோர்கள் கண்டுபிடித்து , இந்த எண் கணிதத்தை நமக்காக வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள் !
ஜோதிடத்தில் 12 ராசிகள், 9 கிரகங்கள் , 27 நட்சத்திரங்கள், 108 நட்சத்திர பாதங்கள் , 360 பாகை அளவுகள் என இந்த எண்கள் வேரூன்றி இருக்கின்றன ! எனவே எண்ணில்லாமல் எழுத்து இல்லை , எழுத்தில்லாமல் எண்கள் இல்லை என்கிற அளவிற்கு எண்ணும் எழுத்தும் பின்னிப் பிணைந்துள்ளன !
என்னும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்பது பழமொழி !
திருவள்ளுவரும் இந்த எண்களை பற்றி சொல்லியிருக்கிறார்
‘ எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழுமுயிர்க்கு ‘
எண்ணும் எழுத்தும் மனித குலத்திற்கு இரண்டு கண்களை போன்றது என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் !
ஆங்கில எழுத்துக்களும் அதற்குரிய எண்களும் !
என் கணிதத்தில் எழுத்துகளுக்கான எண்களை நிர்ணயிக்கும் போது பெரும்பாலும் அனைவரும் ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்துவது இன்று வழக்கத்தில் உள்ளது !
அதனை இப்பொழுது விளக்கமாக பார்ப்போம் !
ஆங்கில எழுத்துக்கள் அதற்குரிய எண்கள்
A- I – J – Q – Y இந்த எழுத்துக்கள் – 1 ஆம் என்னை குறிக்கும் எழுத்துகள் ஆகும் .
B – K – R இந்த எழுத்துக்கள் – 2 ஆம் என்னை குறிக்கும் எழுத்துகள் ஆகும் .
C – G – L – S இந்த எழுத்துக்கள் – 3 ஆம் என்னை குறிக்கும் எழுத்துகள் ஆகும் .
D – M – T இந்த எழுத்துக்கள் – 4 ஆம் என்னை குறிக்கும் எழுத்துகள் ஆகும் .
E – H – N – X இந்த எழுத்துக்கள் – 5 ஆம் என்னை குறிக்கும் எழுத்துகள் ஆகும் .
U – V – W இந்த எழுத்துக்கள் – 6 ஆம் என்னை குறிக்கும் எழுத்துகள் ஆகும் .
O – Z இந்த எழுத்துக்கள் – 7 ஆம் என்னை குறிக்கும் எழுத்துகள் ஆகும் .
F – P இந்த எழுத்துக்கள் – 8 ஆம் என்னை குறிக்கும் எழுத்துகள் ஆகும் .
மேற்கூறிய ஆங்கில எழுத்துக்களுக்கான எண்களை மனனம் செய்து கொள்ள வேண்டும் . ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் .
ஒரு ஜாதகருக்கு பெயர் பெயர் திருத்தும் பொழுதும் , பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுதும் , இந்த ஆங்கில எழுத்துக்கான எண்கணிதத்தை பின்பற்ற வேண்டும் !
அடுத்ததாக பெயர் அமைப்பதற்கு முன்னர் , எண்கள் குறிக்கும் கிரகங்களை
பற்றியும் அறிந்திருக்க வேண்டும் . அப்பொழுதுதான் பிறந்த தேதி அடிப்படையில் ஜாதகருக்கு சரியான எண்கணிதப்படி பெயர் அமைக்க முடியும் !
எண்கள் குறிக்கும் ஆட்சி கிரகம்
ஒன்றாம் என் சூரியனைக் குறிக்கும் ,
இரண்டாம் எண் சந்திரனை குறிக்கும் ,
மூன்றாம் எண் குருவை குறிக்கும் ,
நான்காம் எண் ராகுவை குறிக்கும் ,
ஐந்தாம் எண் புதனை குறிக்கும் ,
ஆறாம் எண் சுக்கிரனை குறிக்கும் ,
ஏழாம் எண் கேதுவை குறிக்கும் ,
எட்டாம் எண் சனியை குறிக்கும் ,
ஒன்பதாம் எண் செவ்வாயை குறிக்கும்
எனவே ஒவ்வொரு குறிப்பிட்ட எண்களும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆதிக்கத்தை பெற்றிருக்கின்றன ..
பிறந்த தேதி அடிப்படையில் , அந்த கிரகம் ஆதிக்கம் பெற்றிருக்கிறது என்று கண்டுபிடித்து , அதன்படி பெயர் அமைக்கும் பொழுது அந்த ஜாதகரின் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் !
ஒரு ஜாதகருக்கு பிறந்த தேதி அடிப்படையில் அவருக்கு உண்டான அதிர்ஷ்ட எண்ணை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றி இப்பொழுது தெளிவாக பார்க்கலாம் !
உதாரணமாக ஒருவர் 08 / 08 / 1987 இல் பிறந்திருக்கிறார் என்றால் ..
இவருக்கான அதிர்ஷ்ட எண் இப்படித்தான் கண்டுபிடிக்க வேண்டும் ..
அதாவது பிறந்த தேதியில் உள்ள ஒவ்வொரு எண்களையும் ஒன்றோடு ஒன்று கூட்ட வேண்டும்..
கீழே பாருங்கள்
0+8+0+8+1+9+8+7 கூட்டினால் 41 ன்று வரும் 4+1 என்று மீண்டும் பலர் கூட்டுவார்கள்.. ஆனால் அப்படி கூட்டக்கூடாது ! 41 ஆகவே எடுத்து பலன் அறிய வேண்டும் !
உங்களுக்கு இப்பொழுது ஒரு குழப்பம் தோன்றும் .. பல ஜோதிடர்கள் கடைசி இரண்டு இலக்கங்களையும் கூட்டி ஒரே எண்ணாகத்தானே பலன் சொல்கிறார்கள் என்று நீங்கள் என்னிடம் கேட்கலாம் .. ! ஆனால் அது பழைய முறை !
பிறந்த தேதியை கூட்டும் பொழுது வருகின்ற இரண்டு இலக்கங்களை அப்படியே எடுத்து பலன் எடுக்க வேண்டும் இது புதிய முறை ! எல்லோருக்கும் இப்பொழுது ஆச்சரியமாக இருக்கும் ! அடுத்தடுத்த பதிவுகளிலே என் கணிதம் தொடர்பான நல்ல எண்களின் ஆதிக்கத்தை உங்களுக்கு வர இருக்கும் பதிவில் எழுத இருக்கிறேன் ! எனவே என்னுடைய இந்த SN Ganapathi Astrologer website ஐ follow செய்யுங்கள் ! என் கணிதம் பற்றி மேலும் பல அறிய தகவல்களை அறிந்து கொள்ளலாம் !
08 / 08 / 1987 இப்போது இந்த தேதியில் பிறந்தவருக்கு அதிர்ஷ்ட என்னை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை பற்றி இப்பொழுது தெளிவாக பார்க்கலாம் !
இந்த ஜாதகர் பிறந்த தேதியோடு பிறந்த நேரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் . கணிக்கப்பட்ட ஜாதகத்தில் வாரம், திதி, நட்சத்திரம், யோகம், காரணம் என பஞ்ச அங்கங்களின் விவரங்கள் இடம் பெற்று இருக்கும் ! மேலும் ராசி கட்டத்தில் ஒன்பது கிரகங்களின் அமைப்புகளையும் பார்க்க வேண்டும் ! அந்த ஜாதகர் பிறந்த லக்னப்படியும் எந்த கிரகம் நல் ஆதிக்கம் பெற்றிருக்கின்றது என்று கணிக்க வேண்டும் ! அவர் ஜாதகப்படி எந்த கிரகம் ஜாதகருக்கு நற்பலன்களை வழங்கும் என்று பார்க்க வேண்டும் !
அந்த கிரகம் குறிக்கும் எண்ணையும் கணக்கில் எடுக்க வேண்டும் ! ஜாதகர் பிறந்த தேதி கூட்டுத்தொகை 41 , இதில் உள்ள நான்கு மற்றும் ஒன்றாம் என்னை எடுத்துக் கொள்ள வேண்டும் , அடுத்து ஜாதகத்தில் பலம் உடைய கிரகத்தின் எண்ணையும் எடுத்துக் கொள்ள வேண்டும் ! ஒரு ஜாதகத்தில் எந்த கிரகம் பலம் பெற்று இருக்கிறது என்பதை பற்றி எப்படி அறிய வேண்டும் என்றால்.. ! ஓரளவு அடிப்படை உயர்நிலை ஜோதிடம் படித்த நேயர்களுக்கு இது புரியும் ! அப்படி நூதனம் படிக்காத நேயர்கள் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் .. என்னுடைய வாட்ஸ்அப் நம்பரில் உங்களுடைய பிறந்த தேதியை என்னுடைய இந்த whatsapp நம்பருக்கு அனுப்பி உங்களுக்கான அதிர்ஷ்ட எண்களை தெரிந்து கொள்ளலாம் !
Phone Call 97 42 88 64 88
What’s up 97 42 88 64 88
என்னுடைய எண் கணித முறையானது முழுக்க முழுக்க புதிய முறையாகும் ! கடந்த 32 வருட அனுபவத்திலே எனது குருநாதர் கற்றுக்கொடுத்த எண் கணித முறை இதுவாகும் ! பழைய எண் கணித முறை அனுபவத்தில் சரியாக வரவில்லை ! தற்போது இந்தப் பதிவில் நான் கூறியிருக்கும் என் கணித முறை பலருக்கு வெற்றிகளை கொடுத்து இரக்கிறது.. மேலும் தொடர்ந்து வெற்றிகளை கொடுத்துக்கொண்டு வருகிறது !
எனவே பிறந்த தேதி அடிப்படையில் உள்ள கூட்டு தொகையில் உள்ள எண்களையும்.. ஜாதக அடிப்படையில் நற்பலனை வழங்கும் கிரகத்தின் எண்களின் அடிப்படையிலும் , பிறந்த குழந்தைக்கு பெயரினை அமைத்தால் அந்தக் குழந்தை நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறும். பெற்றோர்களுக்கு நல்ல வருமான வாய்ப்புகளை கொடுக்கும் .. வீடு வாகன யோகங்களை கொடுக்கும்.. பல லட்சங்களுக்கு அதிபதியாக்கும் .. பலருக்கு இந்த முறையில் பெயர் அமைத்துக் கொடுத்ததினால் ஏற்றங்கள் நடந்திருக்கின்றன என்பது கண்கூடான உண்மையாகும் !
அடுத்த பதிவிலே ஒரு சில நல்ல எண்களைப் பற்றி பதிவில் எழுத இருக்கிறேன்.. அந்த எண்களை பயன்படுத்தி நீங்கள் உங்கள் குழந்தைக்கு பெயர் அமைத்துக் கொள்ள முடியும்.. ! ஆனால் ஒரு விஷயம் .. உங்களுக்கு ஓரளவாவது அடிப்படை ஜோதிடம் தெரிந்திருக்க வேண்டும் !
இதே என்னுடைய வெப்சைட்டில் அடிப்படை ஜோதிட பாடங்கள் கற்றுக் கொடுத்துக் கொண்டு வருகிறேன் ! அந்த ஜோதிட பாடங்களையும் தொடர்ந்து படித்து வாருங்கள் ! உங்களுக்கு ஜோதிட அறிவும் கிடைக்கும் ! எண் கணித ரீதியிலான பெயர் அமைக்கும் முறையையும் தெளிவாக கற்றுக் கொள்ள முடியும் !
இப்பொழுது புதிதாகப் பிறந்த குழந்தைக்கு உடனே பெயர் வைக்க வேண்டுமென்றால் .. என்னுடைய இந்த whatsapp நம்பருக்கு உங்கள் குழந்தையின் பிறந்த தேதி விவரங்களை அனுப்புங்கள் .. கட்டணம் செலுத்தி உங்கள் குழந்தைக்கான பெயரை என் மூலமாக அமைத்துக் கொள்ளலாம் !
Phone Call 97 42 88 64 88
What’s up 97 42 88 64 88
பிறந்த குழந்தையின் பிறந்த தேதி அடிப்படையிலும் , ஜாதக அடிப்படையிலும் எப்படி பெயர் அமைத்துக் கொடுத்தேன் என்று இப்பொழுது ஒரு உதாரண ஜாதகம் பார்ப்போம் !
26/ 04 / 2024 இல் பிறந்த குழந்தையின் ஜாதகம்
Baby Birth Chart |
மேலே கொடுக்கப்பட்டுள்ள ரிஷப லக்னத்தை உடைய ஜாதகத்தில் .. சூரியன் இரண்டு சுப கிரகங்களான குரு மற்றும் சுக்கிரனோடு இணைவு பெற்றுள்ளார் . சூரியன் இயற்கைப் பாவர் .., ஆனால் லக்னரீதியாக அவர் மத்திம சுபர் .. , மத்திம சுவறோடு இரண்டு இயற்கை சுப கிரகங்கள் இணைவு பெறுவதால் சூரியன் பலம் பெறுகிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் , இயற்கை பாவ கிரகம் சூரியன் சுபத்தன்மையை பெறுகிறது . எனவே சூரியனைக் குறிக்கும் ஒன்றாம் எண்ணை ஜாதகருக்கு அதிர்ஷ்ட எண்னாக எடுக்க வேண்டும் ! ( ஒரு ஜாதகத்தில் எந்த கிரகம் சுபத் தன்மை பெறுகிறது என்பது பற்றி அடிப்படை ஜோதிட பாடத்தில் அடுத்தடுத்து சொல்ல இருக்கிறேன் அதாவது பதிவில் எழுத இருக்கிறேன்
இதே SN Ganapathi Astrologer website இல் , Follow செய்யுங்கள் )
இப்போது அந்த குழந்தைக்கு ஒன்றாம் எண்ணில் எப்படி பெயர் அமைத்து கொடுத்தேன் என்பதை பற்றி பார்ப்போம் ! ( ஆண் குழந்தை)
S.Karan கூட்டுத் தொகை 14 வரும் ..
ஒன்று முதல் நூறு வரை உள்ள எண்களிலே இந்த 14 என்பது நல்ல எண்ணாகும் ! மேலும் அந்த குழந்தைக்கு ஒன்று என்ற எண்ணம் அதிர்ஷ்ட எண் ஆகும் ! இதன் அடிப்படையில் இந்தப் பெயரை அமைத்துக் கொடுத்திருக்கிறேன் ! இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழும் .. 14 என்ற எண் ராகுவை குறிக்குமே , இந்த எண் வரலாமா என்று நினைப்பீர்கள் , அதாவது ஒன்று பக்கத்தில் நான்கு வரலாம் , என்ற அடிப்படையில் இந்த பெயரை இந்த எண் கணித முறையில் அமைத்துக் கொடுத்திருக்கிறேன் , என்னுடைய எண் கணித முறையானது நவீன கால என் கணித முறையாகும் !
இதில் இன்னும் பல சூட்சமங்கள் உள்ளன !
அடுத்தடுத்த பதிவுகளில் எழுத இருக்கிறேன் !
So Follow our SN Ganapathi Astrologer website
இதுவரை இந்த பதிவை பொறுமையாக படித்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் !
உங்களுக்கு வேறு ஏதேனும் கேள்வி இருந்தால் என்னை whatsapp-ல் தொடர்பு கொள்ளலாம் ! What’s up : 97 42 88 64 88