கும்ப ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் / kumba rasi sani peyarchi palangal / 2025 to 2027
2025 March 30 முதல் ஜென்ம சனி முடிந்து பாத சனி ஆரம்பம் !
இந்தப் பாதசனி உங்களுக்கு நன்மை செய்யுமா செய்யாதா ?
கடந்த ஐந்து வருடமாக உங்களுக்கு ஏழரை சனி நடந்து வருகிறது.. அதில் இப்போது பாதசனியை கடக்க இருக்கிறீர்கள் ! இந்தப் பாதசனி உங்களுக்கு நன்மை செய்யுமா செய்யாதா? என்பது பற்றி இந்த
பதிவில் விரிவாக பார்ப்போம் !
1) நட்சத்திரம்
அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம் 1,2,3,4 பாதங்கள், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் நட்சத்திரக்காரர்களுக்கு இது பாத சனியாகும் ! மேற்சொன்ன நட்சத்திரங்களில் நீங்கள் எந்த நட்சத்திரமாக இருந்தாலும் 2025 முதல் 2027 வரை இதுவரை இருந்த சோதனைகளை கடந்து விடுவீர்கள் .. இனி 60 % நன்மைகள் உங்களுக்கு நடக்க போகிறது ! 40 % சின்ன சோதனைகளும் இருக்கும் ! கவலை வேண்டாம் சில நன்மைகள் இருப்பதால் தைரியமாக செயல்படுவீர்கள் !
2) உத்யோகம்
இதுவரை வேலையில் இருந்த தடங்கல்கள் உங்களுக்கு விலகும்..
வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.. ! சம்பள உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு உரிய சம்பள உயர்வு கிடைக்கும் ! பதவி உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு உயர் சம்பளம் கிடைக்கும் ! இந்த காலகட்டங்களில் உங்கள் முதலாளியிடம் நல்ல பெயர் கிடைக்கும் ! இருப்பினும் அவசரப்பட வேண்டாம் நிதானமாக செயல்படுங்கள் எல்லாம் நன்மையாகவே நடக்கும் ! வெற்றி நிச்சயம் !
3) தொழில்
முதலீடு இல்லாமல் தொழில் சார்ந்த விஷயம் செய்பவர்களுக்கு நல்ல லாப மேன்மைகள் இந்த காலகட்டங்களில் உங்களுக்கு ஏற்படும் ! பணம் முதலீடு அதிகம் செய்ய வேண்டாம் … !
அடுத்து பணம் அதிகமாக முதலீடு போட்டு தொழில் செய்து கொண்டு வருபவர்களுக்கு… கடந்த ஐந்து வருடமாக பெரிய முன்னேற்றம் என்று சொல்லும்படியாக எதுவும் இல்லை.. ஆனால் அதற்குரிய காலம் இப்பொழுது வர இருக்கிறது… 2025 மார்ச் மாதம் முதல் உங்களுக்கு சில யோகங்கள் நடக்கும்… ! இருப்பினும் ஏற்கனவே செய்து வந்த முதலீடையே கடைப்பிடித்து வாருங்கள் ! புதிதாக எந்த கிளைகளையும் ஆரம்பிக்க வேண்டும்.. புதிதாக தொழில் எதுவும் ஆரம்பிக்க வேண்டாம்.. ஏற்கனவே செய்து வந்த தொழிலை மேம்படுத்தினாலே போதும்.. ! அதாவது பராமரிப்பு விஷயத்தில் கவனித்தால் போதும்.. ! ஏற்கனவே கிடைத்துவரும் லாபத்தில் இப்போது இந்த காலகட்டத்தில் 5% லாபம் கூடும் ! எனவே தெளிவோடும் பொறுமையோடும் செயல்படுங்கள் .. வெற்றி நிச்சயம் !
4) திருமணம்
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் ! தற்போது வீட்டில் சுப விரயம் ஏற்படும் ! தெளிவாக பொருத்தம் பார்த்து நல்ல முகூர்த்தத்தில் திருமணம் செய்வது உத்தமம் ! ( ஜாதகம் மற்றும் பொருத்தம் தொலைபேசி வழி பார்க்கப்படும் ! Ph : 97 42 88 64 88 )
காதல் திருமணமும் பெற்றோரின் சம்மதத்துடன் கைகூடும் ! பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்வதுதான் உத்தமம் ! பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்தால் காதல் கசக்கும் ! வாழ்க்கை சுபிட்சமாக இருக்காது ! மேலும் சுய ஜாதகத்தில் ராகு தசை நடந்தால் சொல்லவே வேண்டாம் பெரும் துன்பத்தைத் தரும் இந்த காதல் விவகாரத்தில் ! எனவே பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமே சிறப்பு ! அல்லது பெற்றோரின் விருப்பப்படி திருமணம் செய்வதும் சிறப்பு !
5)மாணவர்களே
படிப்பில் இதுவரை இருந்த தடைகள் விலகும் ! தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கப்பெறும் ! விரும்பிய படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பீர்கள் ! ஆசிரியர்களால் பாராட்ட பெறுவீர்கள் ! உங்கள் ஞாபக சக்தி திறன் ஆற்றல் பெருகும் ! இருப்பினும் விடாமுயற்சியோடு படிப்பில் ஆர்வத்தை செலுத்துங்கள் இன்னும் கூடுதல் நற் பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் !
6) இல்லத்தரசிகளே
இதுவரை இருந்த குடும்பச் சச்சரவுகள் விலகும் ! நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்தவர்கள் உங்களை விட்டு விலகுவார்கள் ! இனி உங்களுக்கு பொற்காலமே ! சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல .. பணமும் செல்வாக்கும் உங்களுக்கு சிறுக சிறுக சேரும்.. ! மாமனார் மாமியார் வழி பாராட்டுக்கள் குவியும் ! குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும்.. ! உங்கள் மீது உண்மையாக பாசம் செலுத்துபவர்கள் ஆதரவு இனிமேல் தடையின்றி கிடைக்கும் ! உடல் ஆரோக்கியம் மேலோங்கும் ! படிப்படியாக குடும்பத்தில் நல்ல முன்னேற்றத்தை கண் முன்னே காண்பீர்கள் ! இருப்பினும் ஒரு சிலர் உங்களை பண விஷயத்தில் ஏமாற்ற நினைப்பார்கள் கவனம் தேவை ! பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை !
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் ! வேலைக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு இப்போது வேலை கிடைக்கும் ! இருப்பினும் வீட்டின் பெரியோர்களின் சம்பந்தத்தோடு வேலைக்கு செல்லுங்கள் அப்பொழுதுதான் உங்களால் நிம்மதியாக வேலைக்கு சென்று வர முடியும் !
இல்லத்தரசிகளே உங்கள் வீட்டில் வேறு யாருக்கேனும் .. மேஷ ராசியாகவோ , சிம்ம ராசியாகவோ இருந்தால் , அவர்களுக்கு 2025 மார்ச் மாதம் பிறகு ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி ஆரம்பம் ஆகும் .. ! எனவே அவர்களை நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டி வரும் ! அவர்களுக்கு இது மிகுந்த சோதனை காலமாகும் ! மேலும் உங்களுக்கும் தொந்தரவு கொடுப்பார்கள் ! மேஷ ராசிக்கும் சிம்ம ராசிக்கும் தனியே சனிப்பெயர்ச்சி பலன்கள் பதிவு எழுதி இருக்கிறேன் இதே website இல் பாருங்கள் ! அதில் பரிகாரம் சொல்லி இருக்கிறேன் !
(மேஷ ராசி பலன்கள் , சிம்ம ராசி பலன்கள் 2025 to 2027 )
7) ஒரே வீட்டில் இரண்டு நபர்களோ அல்லது இரண்டு நபர்களுக்கு மேற்பட்டவர்களோ இந்த ராசியாக இருந்தால்..
இரண்டுக்கும் மேற்பட்ட ஒரே ராசிக்காரர்கள் .. குடும்ப உறுப்பினர்களுக்குள் இருந்தால்.. எல்லோருக்குமே படிப்படியாக நல்ல உயர்வு ஏற்படக்கூடிய காலமாகும் இது ! சிலருக்கு குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் தீரும் ! பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும் ! சொத்து நிலம் தகராறு தீர்ந்து நல்ல முடிவுக்கு வரும் ! வம்பு வழக்கு விலகும் ! உங்களைக் கடிந்து பேசியவர்கள் கூட நல்ல விதமாக வந்து பேசுவார்கள் ! இருப்பினும் நீங்கள் சர்வ ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும் .. ஏனென்றால் உங்களுக்கு இன்னும் முழுமையாக ஏழரை சனி முடியவில்லை ! ஏழரை சனியில் 5 வருடம் தான் முடியப்போகிறது ! இன்னும் இரண்டரை வருடம் இருக்கிறது ! இந்தக் கடைசி இரண்டரை வருடம் உங்களுக்கு பாத சனியாகும் ! துன்பங்கள் கஷ்டங்கள் இந்த இரண்டரை வருட காலத்தில் படிப்படியாகத்தான் குறையும் ! ஒரே நாளில் தீராது ! எனவே உங்கள் முயற்சியை படிப்படியாக அதிகப்படுத்துங்கள் ! வெற்றி வாய்ப்புகள் உங்கள் முயற்சிக்கு ஏற்ப உங்களை தேடி வரும் ! கடுமையாக முயற்சி செய்தால் தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் ! தானா எல்லாம் மாறிவிடும் என்று வீட்டில் இருந்தால் எதுவும் நடக்காது ! உங்களை தேடி எதுவும் வராது நீங்கள் தான் முயற்சி செய்து தேடி சென்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் ! உங்களுக்கு இயல்பிலேயே நல்ல திறமையும் சிந்திக்கும் ஆற்றலும் உண்டு ! இப்போது உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் காலம் வந்துவிட்டது ! இனிமேல் உங்கள் முயற்சிகள் வீண் போகாது நல்லதே நடக்கும் ! எல்லோரும் பாராட்டும் விதமாக வாழ்ந்து காட்ட போகிறீர்கள் !
8) தனுசு ராசி கொண்ட முதியோர்களே ..
இதுவரை இருந்த உடல் அசௌகரியம் படிப்படியாக சரியாகும் ! எவ்வளவு மருத்துவம் பார்த்தும் சரியாக உடல்நிலை இப்பொழுது படிப்படியாக குணமாகும் ! தேக ஆரோக்கியம் கூடும் ! இருப்பினும் தேவையான மருத்துவ ஆலோசனை அவ்வபொழுது பெற்றுக் கொள்ள வேண்டும் ! உங்களை நேசிக்கும் ஒருவர் உங்களுக்கு துணையாக இருப்பார்கள் ! பிள்ளைகள் ஆதரவு மேலோங்கும் ! வீடு வாகனம் சொத்து சார்ந்த விஷயங்களில் மேன்மை ஏற்படும் ! உங்கள் சந்ததிகளுக்காக நீங்கள் போடும் திட்டம் வெற்றி அடையும் ! ஒரு சிலர் இரண்டாவது சுற்று கடந்திருப்பீர்கள் .. அவர்களுக்கு கொஞ்சம் தாக்கம் குறைவு.. மூன்றாவது சுற்றைக் கடப்பவர்களுக்கு அதிகமாக கஷ்டம் ஏற்பட்டு படிப்படியாக தீரும் ! ஆனால் ஒரு விஷயம் யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள் முதியோர்களே ! உங்கள் மீது யாருக்கு உண்மையிலேயே பாசம் இருக்கிறது என்று கவனித்து செயல்படுங்கள் ! பாசம் காண்பிப்பது போல் இருக்கும் நம்பி விடாதீர்கள் ! ‘ கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்து அறிவதே மெய் ‘ என்ற பொன்மொழியை உணர்ந்தவர்கள் நீங்கள் ! எனவே நான் சொல்ல வந்த விஷயம் உங்களுக்கு புரியும் என நம்புகிறேன் !
9) சொத்து வீடு வாகனம் யோகம்
சொத்து சார்ந்த விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும் . ஒரு சிலர் இந்த எழரை சனி காலகட்டத்திலேயே தெரியாமல் வீடு கட்ட ஆரம்பித்து இருப்பீர்கள் ! ஆரம்பித்து பாதியிலேயே நின்று போன வீட்டை மீண்டும் இப்போது கட்ட ஆரம்பிப்பீர்கள் ! அருகிலுள்ள காலபைரவரை வணங்கி வீடு கட்ட ஆரம்பிங்கள் . விரைவில் வீடு கட்டி முடித்து விடுவீர்கள் . இப்போது பணம் கைக்கு கிடைக்கும் .. அதாவது வீடு கட்டுவதற்கான போதுமான பணம் கிடைக்கும் ! பண வரவு ஏற்படும் ! ஆனால் ஒரே நாளில் ஏற்பட்டு விடாது படிப்படியாக பண வரவு அதிகரிக்கும் ! ஆனால் ஒரு விஷயம் வருமானத்திற்கு அதிகமாக கடன் வாங்காதீர்கள் ! விரலுக்கேத்த வீக்கம் என்பது போல் .. இருக்கும் பண வசதியைக் கொண்டு எந்த ஒரு சுப செலவையும் செய்யுங்கள் ! இந்தப் பாத சனியை வெற்றிகரமாக நீங்கள் கடந்து விடலாம் ! அதாவது இது ஏழரை சனியில் கடைசி இரண்டரை வருட காலமாகும் !
புதிய சொத்து வீடு வாகனம் வாங்கும் போது வில்லங்கம் இல்லாமல் பார்த்து கவனித்து வாங்குங்கள் ! புதியவர்களிடம் சொத்து வீடு வாங்காதீர்கள் ! அதாவது முகம் தெரியாதவர்கள் முன் பின் தெரியாதவர்களிடம் வீடு வாகனம் வாங்காதீர்கள் ! அதே சமயம் நன்கு தெரிந்தவர்களாக இருந்தாலும் கவனமோடு வாங்குங்கள் ! ஏனென்றால் ஏழரை சனி இன்னும் உங்களுக்கு முடியவில்லை ! எனவே கவனமாக செயல்படுங்கள் ! எதற்கும் ஒரு முறை உங்கள் ஜனன கால ஜாதகத்தை பார்த்து முடிவு செய்யுங்கள் ! ( ஜாதகம் தொலைபேசி வழி பார்க்கப்படும் ! Ph : 97 42 88 64 88 )
10) பொருளாதாரம் முன்னேற்றம்
பொருளாதாரம் முன்னேற்றம் படிப்படியாக உயரும் ! பண வரவு அதிகரிக்கும் ! கொடுத்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப கிடைக்கும் ! மொத்தமாக வாங்க நினைத்தால் கிடைக்காது ! இப்போது யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம் !
நீங்களும் கடன் யாரிடமும் வாங்காதீர்கள் ! வருமானத்தைக் கொண்டு உங்களுக்கான சுப விஷயங்களை செய்து கொள்வது உத்தமம் ! வருமானம் பத்தவில்லை என்றால் காத்திருந்து எந்த ஒரு சுப விஷயத்தையும் செய்யுங்கள் ! இன்னும் இரண்டரை வருட காலம் நீங்கள் காத்திருக்க வேண்டும் !
11) அரசு பணி வேலை தேடுபவர்களுக்கு
இதுவரை இருந்த தடைகள் விலகும் ! அரசாங்க ஆதரவு கிடைக்கும் ! உங்கள் திறமை வெளிப்படும் ! பொறுமையும் திறமையும் உள்ளவர்களுக்கு அரசு பணி நிச்சயம் கிடைக்கும் ! அதே சமயம் உங்கள் ஜனக கால ஜாதகத்தில் அரசாங்கப் பணிக்கான அமைப்பு பரிபூரணமாக இருக்கும் பட்சத்தில் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அரசு பணி நிச்சயம் கிடைக்கும் ! 2026 இல் உங்களுக்கு அரசு பணி உறுதியாகும் ! தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு நிச்சயம் அரசு பணி உண்டுங்க ! சனி பகவான் நியாயாதிபதி நீதிமான் .. எனவே தகுதியானவர்களுக்கு தான் அரசு பணியை கொடுப்பார் இந்த ஏழரை சனி காலகட்டத்தில் ! உங்கள் முயற்சிக்கேற்ப வெற்றிகள் குவியும் !
ஏற்கனவே அரசு பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும் உங்கள் உழைப்புக்கு ஏற்ப !
12) வெளிநாடு யோகம்
கும்ப ராசி நேயர்களே ! வெளிநாட்டு வேலைக்காகவோ படிப்பதற்காகவோ அல்லது குடி உரிமை பெறுவதற்காகவோ முயற்சி செய்பவர்களுக்கு இந்த காலகட்டம் உங்கள் முயற்சிக்கு பலன் கிடைக்கும் ! வெளிநாடு சார்ந்த அத்தனை விஷயத்திற்கும் இந்த காலகட்டம் உங்களுக்கு உகந்ததாகும் ! ஏற்றுமதி இறக்குமதி தொழில் சார்ந்த விஷயத்திற்கும் நல்ல அனுகூல காலமாகும் ! இருப்பினும் உங்கள் சொந்த ஜாதக அடிப்படையில் தசா புத்தியும் நன்றாக இருந்தால்தான் 100% வெற்றி கிடைக்கும் ! ( ஜாதகம் தொலைபேசி வழி பார்க்கப்படும் ! Ph : 97 42 88 64 88 )
13 ) அரசியல்
அரசியல் சார்ந்த விஷயங்கள் படிப்படியாக நல்ல முன்னேற்றம் உங்களுக்கு கொடுக்கும் காலகட்டம் ஆரம்பித்து விட்டது ! இனி உங்கள் காட்டில் மழை தான் ! கடமை உணர்ச்சியும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் நல்ல கொள்கையும் உள்ளவர்களுக்கு இந்த காலகட்டம் மிக உன்னத வெற்றியை கொடுக்கும் ! எதிரி தொல்லை தீரும் ! எதிரிகளும் நண்பர் ஆவார்கள் ! இருப்பினும் யாரோடு நட்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்து நட்பு வைத்து பழகுங்கள் ! உங்களுக்கு எல்லாம் தெரியும் புரிந்து செயல்படுங்கள் ! உங்களுடைய ஆற்றல் செயல்படும் காலம் இதுதான் !
14 ) காதல் திருமணம்
காதல் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு , உங்கள் விருப்பப்படி திருமணம் நடக்கும் ! ஆனால் பெற்றோரின் சம்மதத்தோடு செய்ய வேண்டும் ! ஏனென்றால் இன்னும் உங்களுக்கு ஏழரை சனி முடியவில்லை ! மேலும் கும்ப ராசியினருக்கு காதல் திருமணம் என்பது பெரிய சவாலாக இருக்கும் ! இதில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல ! இரு விட்டாரும் அதிகப்படியான எதிர்ப்புகளை தெரிவிப்பார்கள் .. ஏனென்றால் கும்ப ராசிக்கு சிம்ம ராசி ஆகாத வீடாகும் ! கும்ப ராசிக்கு ஏழாம் வீடு சிம்ம ராசி தான் களத்திர ஸ்தானமாகும் ! எனவே பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்வதுதான் உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது ! காதல் கண்ணை மறைக்கும் எனவே கண்களை திறந்து செயல்படுங்கள் ! அதாவது எது நல்லது எது கெட்டது என்று ஒரு நிமிடம் நீங்கள் யோசித்தால் உங்கள் எதிர்கால ஒளிமயமான வாழ்க்கை உங்கள் கையில் ! இப்போது பெற்றோர்களே எதிரியாக தெரிவார்கள் ! பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்தால் திருமணத்திற்கு பிறகு உங்களுடைய வாழ்க்கைத் துணையே உங்களுக்கு எதிரியாக தெரிவார்கள் ! எனவே இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் நிச்சயம் வாழ்க்கையில் உணர்ந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன் ! காரணம் இது ஏழரை சனி காலகட்டமாகும் உணர்ந்து செயல்படுங்கள் ! 2026 இல் நீங்கள் எடுக்கும் முயற்சி உங்களுக்கு சாதகமாக அமையும் ! இருப்பினும் மேற்சொன்ன விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் !
பரிகாரம் மற்றும் தெய்வ வழிபாடு
நீங்கள் அருகில் உள்ள சித்திரகுப்த கோவிலுக்கு சென்று தெய்வ வழிபாடு செய்யுங்கள் !
ஜாதகம் தொலைபேசி வழி பார்க்கப்படும்
நான் ஜோதிஷ வித்யாவதி , ஜோதிடர், எண் கணித நிபுணர், வீடு வாஸ்து ஸ்பெஷலிஸ்ட் S.N. கணபதி B.Lit , M.A, D.Astro
What’s up And Ph : 97 42 88 64 88
மேலும் முழு ஜாதக பலன் அறிய..
அதாவது வேறு ஏதேனும் தனிப்பட்ட கேள்வி இருந்தால்..
தொலைபேசி வழி ஜாதக பலன் அறிய ..
என்னுடைய இந்த whatsapp நம்பருக்கு உங்கள் பிறந்த தேதி நேரம் விவரங்கள் அனுப்பி … கட்டணம் செலுத்தி தொலைபேசி வழியே ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம் !
Phone Call 97 42 88 64 88
What’s up 97 42 88 64 88
இனி அடுத்தடுத்த பதிவுகளிலே..
உங்கள் கும்ப ராசிக்கு உரிய
குரு பெயர்ச்சி பலன்கள் ..
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் …
சனிப்பெயர்ச்சி பலன்கள்..
மாத ராசி பலன்கள்..
என அனைத்து கிரக பெயர்ச்சி பலன்களும் இதே website இல் தொடர்ந்து எழுத இருக்கிறேன் !
அவ்வபோது உங்களுக்கு உரிய பலனை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்..
SN Ganapathi Astrologer Rasi Palan
வாழ்த்துக்கள்
Post Views: 65