பாடம் – 3 | ஜாதகம் கற்றுக் கொள்வது எப்படி ? | அடிப்படை ஜோதிட பாடம் – 3 | Vedic Astrology

பாடம் – 3 | ஜாதகம் கற்றுக் கொள்வது எப்படி ? | அடிப்படை ஜோதிட பாடம் – 3 | Vedic Astrology

ஜாதகப் பலன்கள் சொல்வதற்கான முக்கிய விதிமுறைகளை இந்த பதிவில் பார்ப்போம் ! 

ஜாதகம் கற்றுக் கொள்வது எப்படி ? , அடிப்படை ஜோதிட பாடம் - 3 , Vedic Astrology
Chart – 3

கிரகங்களின் காரகத்துவங்கள் , 

கிரகங்களின் பார்வைகள் 

கிரகங்களின் திசா ஆண்டுகள் 

கிரகங்கள் ஒரு ராசியில் சஞ்சரிக்கக் கூடிய காலங்கள் 

ஆகிய தலைப்புகளில் இந்தப் பதிவில் ஜோதிட பாடங்களை பார்க்கலாம் ! 

கிரகங்களின் காரகத்துவங்கள் | காரகத்துவம் என்றால் என்ன ?

நவகிரகங்களுக்கும் தனித்தனியே காரகத்துவங்கள் உள்ளன . சரி முதலில் இந்த காரகத்துவங்கள் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பதை பற்றி பார்ப்போம் ! அதாவது உதாரணமாக ஒரு தெய்வத்திற்கு பல பெயர்கள் இருப்பது போல .. ஒரு கிரகத்தினை பல்வேறு விஷயங்களாக புரிந்து கொள்ளலாம் ! 
இப்போது ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் காரணத்துவங்களை சொல்லுகிறேன் .. அந்த கிரகம் எந்தெந்த விஷயங்களை எல்லாம் குறிக்கும் என்பதை பற்றி படிக்கும் பாடம் தான் கிரக காரகத்துவங்கள் ! 
முதலில் சூரியன் காரகத்துவங்களை பார்ப்போம் ! | சூரியனின் காரகத்துவம் 
தந்தை, தந்தை வழி உறவுகள், கௌரவம், நம்பிக்கை, நாணயம் , ஆன்மா , நெருப்பு,  கோபம்,  மூத்த மகன் , திருமணத்திற்கு பின் மாமனார் , ஆன்மிக தலைவர்கள்,  வலது கண் , மலை மேடான பகுதி,  நிரந்தர வருமானம் தரக்கூடிய கட்டிடங்கள் , வாடகை வீடுகள், வணிக வளாகம் ,
அரசு , அரசு சார்ந்த விஷயங்கள், தலைமை பொறுப்புகள் , ஊரின் பெரிய மனிதர்கள் , 
ஊர் தலைவர்கள், தேசத்தலைவர்கள், ஜோதி ரூபமான வழிபாடுகள், லிங்க வழிபாடுகள், சிவநாமத்தைக் கொண்டவர்கள், அரச குலத்தை சேர்ந்தவர்கள் , வீரர்கள், விவசாயம், மருத்துவம், சிவப்பு நிறம் , காரம் , நெருப்பு , பாதரசம் , கோதுமை,  தேன்,  தங்க நகைகள் , மாணிக்க கற்கள்,  ஒன்றாம் எண் , செம்பு உலோகம்,  விஷ மருந்துகள் , அடர்த்தியான துணி வகைகள் , அரசாங்க வேலை,  ஞாயிற்றுக்கிழமை , காடு , மலை , யோகம் , மூளை , ஆத்ம சக்தி , கிழக்கு,  திசை,  துணிவு , தைரியம் , வெற்றி,  சத்துவ குணம் , உடல்நலம், வலது கண், தலை, எலும்பு, மார்பு , ஆயுள் , உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் , பித்தம் இதுபோன்று இன்னும் பல காரகத்துவங்கள் இருக்கின்றன . இங்கு சில காரகத்துவங்களை மட்டும் உங்களுக்கு சொல்லி இருக்கிறேன் ! இன்னும் உயர்நிலை பலன் சொல்லும் முறை எனும் பாடத்தில் நிறைய விஷயங்களை எழுத இருக்கிறேன் ! எனவே இந்த website ஐ follow செய்யுங்கள் !
அடுத்து சந்திரனின் காரகத்துவங்களை பார்ப்போம் !

தாய் மற்றும் தாய் வகை உறவுகளை குறிக்கும் , பெண்கள் , வணிகர்கள், வெண்மை நிறம் , உப்பு சுவைகள்,  சுவைகளில் இனிப்பு , நீர்நிலை , மலர்கள்,  வெண்மணிகள் , முத்து,  பழங்கள் , 
மனச்சலனம், மனம் , அவமானம் தரும் காரியங்கள் , இலவச பொருட்கள், ஞாபக மறதியும், ஞாபக சக்தி ,  நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் , உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் , பிரயாணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்,  உடம்பும் மனசும் அனுபவிக்க கூடிய அனைத்தும் சந்திரன் காரகத்துவமாகும்,
நெல் , தாவரங்கள், இலைகள், தகரம், வெள்ளி , வெண்கலம், மூலிகைகள், இரண்டாம் எண் , குளியல், வாசனை பொருட்கள் , திங்கட்கிழமை , பால் பொருட்கள் , உணவு வகை,  பட்டு துணி,  ஆடை ஆபரணங்கள் , செல்வம் , புகழ்,  பரிசு , கடற்கரை , வியாபாரம் , விவசாயம்,  விளைநிலம் , கொம்பு உள்ள பிராணிகள் , புத்தி , சிந்தனை , உடல் அழகு , உடல் நலம் , ஆசைகள், சிற்றின்பம் , சத்துவ குணம், இடது கண் , சீதள நோய்கள், ஆஸ்துமா, இரத்தம், 
அம்பாள் அலங்காரம் இல்லாத நிலையில் உள்ள பெண் தெய்வங்கள் , ஊர்க்காவல் தெய்வங்கள் , அன்றாடம் அழியக்கூடிய பொருட்கள் , சந்திரன் வளர்வதும் தேய்வதுமான ஒரு கிரகம் என்பதால் .. சந்திர தசாவில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும் !
முதலிய கார்கத்துவங்கள் சந்திரனின் காரகத்துவங்கள் ஆகும் . இதுபோல் சந்திரனுக்கு இன்னும் பல காரகத்துவங்கள் உள்ளன ! 
அடுத்து செவ்வாயின் காரகத்துவங்கள் பார்ப்போம் !
தைரியம் கோபம் ஊக்கத்துடன் செய்தல் உடலின் கட்டமைப்பு தற்காப்பு கலைகளின் மீது தீவிர எண்ணம் போட்டி மனப்பான்மை தீவிரம் பிடிவாதமான செயல் முரட்டுத்தனமான பிடிவாதம் பாதுகாப்பு கருவிகள் நிர்வாகத்திறன் கடுமையான சொற்கள் முரட்டுத்தனமான பிடிவாதம் , சகோதரன் சகோதரிகளை குறிக்கும், அதாவது உடன்பிறப்புகளை குறிக்கும் , சகோதர வழி உறவுகள், தந்தை வழி உறவுகள், காட்டுவாசிகள் வீரர்கள், சாஸ்திரிகள், ரசாயன உரங்கள், சேவகர்கள் , அரசர்கள் , திருடர்கள்,  எதிரிகள்,  படைத்தளபதி , அதிகாரிகள், சிவப்பு நிறம், ஒன்பதாம் எண், செவ்வாய்க்கிழமை , உலோகம் , செம்பு, பொன் , நெருப்பு , கசப்பு சுவை , சூடான பொருள் , மருந்துகள்,  தீப்பட்ட துணிகள்,  வெள்ளம் , பூமி , வீடு , வீடு சம்பந்தப்பட்ட பொருட்கள் , அசையா சொத்துக்கள்,  வன்முறை , உற்சாகம்,  ரண சிகிச்சை, ஆயுதங்கள் , ரத்தம், எலும்பு மச்சை , நகம்,  பற்கள் , இமைகள் , முறுக்கான மீசை , வீரிய தன்மை , வீடு மனை மருத்துவமனை , ஆராய்ச்சி கூடம்,  முட்புதர்கள் , சமையலறை , அடிக்கடி விபத்து நடக்கும் இடம் ,
செவ்வாய் பெண் வீட்டில் இருந்தால் துர்க்கையை குறிக்கும், ஆண் வீட்டில் இருந்தால் முருகரை குறிக்கும், போர் கோலம் கொண்ட தெய்வ ரூபங்கள் , உக்கிரமான தெய்வங்கள் , காவல்துறை, ராணுவம் , பாதுகாப்புத்துறை , மருந்து வியாபாரம் , கெமிக்கல்,  பூமி சம்பந்தப்பட்ட தொழில்கள் , தையல் வேலை , சிவப்பு நிறத்தில் உள்ள பொருட்கள் , கமிஷன் வியாபாரம் , கத்தி,  ரத்தம் , ஆயுதம் , ஆபரேஷன் ஆகியவற்றுக்கு செவ்வாய் காரக அதிபதியாக வரும் . இதுபோன்று இன்னும் பல காரகத்துவங்கள் செவ்வாய்க்கு இருக்கின்றன .. உயர்நிலை ஜாதக பலன் சொல்லும் பாடத்தில் உங்களுக்கு மேலும் தெளிவாக எழுத இருக்கிறேன் .. ( follow this website )
ஜோதிட பாடங்களை வீடியோ பதிவாக படிக்க என்னுடைய இந்த whatsapp நம்பரில் என்னை தொடர்பு கொள்ளலாம் 
Phone Call 97 42 88 64 88 
What’s up 97 42 88 64 88 

அடுத்து புதனின் காரகத்துவங்கள் பார்ப்போம் ! 

தாய் மாமன், உறவினர்கள், நண்பர்கள் , மருத்துவ வல்லுநர்,  கணித மேதை , வியாபாரிகள் , சங்கீத வித்துவான் , கணக்கு எழுதுபவர்கள் , அறிவுத்திறன் , இரட்டைத்தன்மை , நுணுக்கமான விஷயங்கள் , பொது அறிவு சார்ந்த விஷயங்கள் , நுணுக்கமான பிரச்சனைகளை குறிக்காட்டுவது, இளைய சகோதரி , காதலன், காதலி, ஒருவரின் விருப்பம் நரம்பு மண்டலங்கள் , தோல் , 
மந்திரவாதி தொழில் இலக்கணம் ஆசிரியர் கடைவீதிகள் வாக்குத்திறவை ஜோதிட திறமை விரல் மற்றும் தோல் நோய் , படிக்கப் பயன்படும் பொருட்கள் , அறிவு சார்ந்த அனைத்து பொருட்களையும் குறிக்கும் புதன், கணிதம் சார்ந்த தொழில்கள் அனைத்தும், காலி நிலம் விற்பனையாளர்கள், ஆசிரியர்கள், நடிகர்கள், பேச்சாளர்கள், கல்வியாளர்கள் ,புத்தக விற்பனையாளர்கள், மகாவிஷ்ணு பெருமாள் அம்சம் உளள தெய்வங்கள் அனைத்தும், 
 கந்தர்வர்கள், கன்னிமார்கள் , சப்த கன்னிகள்  முதலிய காரகத்துவங்கள் புதனை குறிக்கும் ! புதனுக்கு இன்னும் பல காரகத்துவங்கள் உள்ளன அடுத்தடுத்து உயர்நிலை பாடத்தில் எழுத இருக்கிறேன் !
என்ன ஜோதிட மாணவர்களே ! ஜோதிட ஆர்வலர்களே ! கிரக கிரக காரகத்துவங்களை ஆர்வமுடன் படித்து வருகிறீர்களா ? இந்த காரகத்துவங்கள் தான் எதிர்காலத்தில் நீங்கள் ஜாதக பலன் சொல்லும் போது தெளிவாக பலன் சொல்வதற்கு உதவும் ! 
அடுத்து குருவின் காரகத்துவங்களை பார்ப்போம் 
ஆசிரியரை குறிக்கும்,  சித்தர்களை குறிக்கும் , மந்திரம், ஜெபம், சித்து வேலைகள், தீர்க்கமான ஆலோசனை , மதத் தலைவர்கள் , ஆலயங்கள் , தெய்வ வழிபாடு இடங்கள், வித்தை, தர்மம், குருகுலம் கல்வி, மூன்றாம் எண் , வியாழக்கிழமை, இனிப்பு, பொன் வெள்ளி நகைகள், 
எல்லாவித சுபத் தன்மைகளையும் சுட்டிக்காட்டுவது , மிக ஒழுக்கமான தன்மையை குறிக்கும் , குரு எந்த கிரகத்தை பார்க்கிறதோ அந்த கிரகத்திற்கு சுபத்தன்மை ஏற்பட்டுவிடும் , குருவின் பார்வை கோடி நன்மை , வித்வான், மஞ்சள் வண்ணம், குடை, வக்கீல் , ஆசான், மந்திரி, 
நீதிபதி, அர்ச்சகர், கோவில் குருக்கள், வட்டி தொழில் , ஜவுளி வியாபாரம், பெரிய பணத்தொகை , பணம் சார்ந்த விஷயங்கள், குரு வருமானத்தை குறிப்பார், ஒருவர் ஜாதகத்தில் குருவின் பலத்தைக் கொண்டு அவருடைய பண பலத்தை அறிந்து கொள்ளலாம் ! , 
ஆச்சார அனுஷ்டானம் உள்ள தெய்வங்கள், பிராமணர்களால் பூஜிக்கப்படக்கூடிய தெய்வ ஆலயங்கள் , குருவாக அமர்ந்து போதிக்கும் தொழில் ,
குரு குழந்தைகளைக் குறிப்பார் , ஒரு ஜாதகத்தில் புத்திர பாக்கியத்தை அறிவதற்கு குருவின் பலம் பலவீனத்தை பார்க்க வேண்டும் , இதனை உயர்நிலை ஜாதக பலன் சொல்லும் முறையில் அந்த பாடத்திட்டத்தில் தெளிவாக எழுத இருக்கிறேன் ( follow this websiteSN Ganapathi Astrologer ‘ ) 
அடுத்து சுக்கிரனின் காரகத்துவங்கள் பார்ப்போம் 
சுக்ரன் ஒரு ஜாதகத்தில் மனைவியை குறிக்கும், ஆண் பெண் இருவர் ஜாதகத்திலும் களத்திரத்தை குறிக்கும் , ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரனை வைத்து அவருக்கு வரும் கணவன் அல்லது மனைவியின் தன்மையை புரிந்து கொள்ளலாம் , களத்திர ஸ்தான அதிபதி சுக்கிரன் ,  (  ஸ்தான விவரங்கள்  உயர்நிலை வகுப்பில் வரும் , உங்களுக்கு சொல்லித் தருகிறேன் ) , பெண்கள்,  வாலிபர் , மணமக்கள், லட்சுமி , சரஸ்வதி, கலைஞர்கள், ஆறாம் எண், வெள்ளிக்கிழமை, நவரத்தினங்கள், தேர், செல்வம் , மலர்கள் , வாசனைப் பொருட்கள், மலர் தோட்டம், படுக்கை அறை, கப்பல் , இசை , நடனம்,  நடிப்பு துறை , நாட்டியக்கலை , அழகு, புகழ், காதல் , காமம் , பணத்திற்கு அதிபதி, ஆடம்பரம், அலங்காரமான அம்மன் தெய்வங்கள், சொகுசான பொருட்கள் , சொகுசான அனைத்து இடங்களும் சுக்கிரன் காரகத்துவமே , மூத்த சகோதரி, பெரியம்மா, சிறிய தாயார், அத்தை, பெண்கள் வகை உறவுகள் அனைத்தும் சுக்கிரனே , அலங்காரமான அம்பாள், சுக்கிரனும் புதனும் இணைந்தால் விஷ்ணு அம்சமுள்ள அம்பாள் , சூரியன் சுக்கிரன் இணையும் பொழுது சிவ அம்சம் உள்ள அம்பாள், வெள்ளிப் பொருட்கள் , கூத்தாடி, வாகன தொழில், ஃபேன்சி தொழில்,  பிராணிகள் வளர்ப்பு தொழில் , கட்டில் மெத்தை தலையணை வியாபாரம் , பூ வியாபாரம்,  வாசனை திரவிய வியாபாரம் , பெண்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம் என பல காரகத்துவங்கள் சுக்கிரனுக்கு உண்டு ! 
( ஒவ்வொரு கிரகங்களும் குறிக்கும் தொழில் சார்ந்த காரகத்துவங்களை விரிவாகவும் தெளிவாகவும் விரைவில் ஒரு தனி பதிவாக இந்த வெப்சைட்டில் எழுத இருக்கிறேன் follow செய்யுங்கள் ‘ SN Ganapathi Astrologer ‘ Web site!
இதன் தொடர்ச்சி 
அடிப்படை ஜோதிட பாடம் நான்கில் பாருங்கள் ! 
சனி காரகத்துவங்கள் ராகு கேது காதுகத்துவங்கள் , 
கிரகங்களின் பார்வைகள் 
கிரகங்களின் திசா ஆண்டுகள் 
கிரகங்கள் ஒரு ராசியில் சஞ்சரிக்கக் கூடிய காலங்கள் .. 
ஆகிய தலைப்புகள் உள்ள பாடங்கள் , அடிப்படை ஜோதிட பாடம் நான்கில் எழுதி இருக்கிறேன் பாருங்கள் !
அடுத்து அடிப்படை ஜோதிட பாடம் 4 யும் எழுதி பதிவு செய்து விட்டேன் தொடர்ந்து 4 ஆம் பகுதியையும் படியுங்கள் !
அனைத்து அடிப்படை ஜோதிட பாடங்களையும் இந்த ஒரே website இல் பாருங்கள்.. 
என்னைப் பற்றி 
நான் ஜோதிஷ வித்யாவதி , ஜோதிடர், எண் கணித நிபுணர், வீடு வாஸ்து ஸ்பெஷலிஸ்ட் S.N. கணபதி B.Lit , M.A, D.Astro 
What’s up And Ph : 97 42 88 64 88 
 மேலும் முழு ஜாதக பலன் அறிய..
அதாவது வேறு ஏதேனும் தனிப்பட்ட கேள்வி இருந்தால்..
தொலைபேசி வழி ஜாதக பலன் அறிய ..
 என்னுடைய இந்த whatsapp நம்பருக்கு உங்கள் பிறந்த தேதி நேரம் விவரங்கள் அனுப்பி 
 கட்டணம் செலுத்தி தொலைபேசி வழியே ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம் 
Phone Call 97 42 88 64 88 
What’s up 97 42 88 64 88 
மேலும் whats up வழி வீடியோ ஜோதிட பாடப்பதிவுகளை படிக்க என்னுடைய இந்த whatsapp நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் What’s up 97 42 88 64 88 
தொடரும் ….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *