பாடம் – 4 | ஜாதகம் கற்றுக் கொள்வது எப்படி ? | அடிப்படை ஜோதிட பாடம் – 4 | Vedic Astrology

 பாடம் – 4 | ஜாதகம் கற்றுக் கொள்வது எப்படி ? | அடிப்படை ஜோதிட பாடம் – 4 | Vedic Astrology

ஜாதகம் கற்றுக் கொள்வது எப்படி ? , அடிப்படை ஜோதிட பாடம் - 4 , Vedic Astrology
Chart – 4

கிரக காரகத்துவங்கள் தொடர்ச்சி ..

அடிப்படை ஜோதிட பாடம் மூன்றில் கிரக காரகத்துவங்கள் பற்றி சொல்லி இருக்கிறேன் .. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு காரகத்துவங்கள் சொல்லி இருக்கிறேன், அதாவது எழுதி இருக்கிறேன் .. இந்தப் பதிவை படித்துவிட்டு அடிப்படை ஜோதிட பாடம் ஒன்று, இரண்டு, மூன்று பதிவுகளையும் படியுங்கள் ! 

அடுத்து சனியின் காரகத்துவங்கள் பற்றி பார்ப்போம் .

அடுத்தவருக்கு செய்யும் சேவைகளை குறிக்கும் கிரகம் சனி , அடிமை வேலை ( job ) வேலை ஆட்கள் , துப்புறவு பணியாளர்கள் , ஊர் காவல் தெய்வங்கள், ஊர் எல்லையை காக்கும் காவல் தெய்வங்கள், ஆயுதம் ஏந்திய காவல் தெய்வங்கள், ( அய்யனாரப்பன், பிடாரியம்மன் ) , மந்தமான செயல்பாடுகள், பழைய பொருட்கள், அழுக்கு, சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பது அதாவது சோம்பேறித்தனம் , பழைய புராதானமான பொருட்கள் , தொன்மையான விஷயங்களில் அதிக ஈடுபாடு செலுத்துதல், சதா கவலையாக இருத்தல் , அழுக்கு படிந்திருக்கும் இடங்கள் , குப்பை கூலங்கள் , இருட்டான அடர்ந்த காடுகள் , கூரை இல்லாத தெய்வங்கள் , ஆச்சார குறைவு , தீட்டு , புரோக்கர் , அடுத்தவரரிடத்தில் கையேந்துதல் , கஷ்டமான ஜீவனும் , கடுமையான உழைப்பாளி , கடினமான வேலை, மூட்டை சுமத்தல் , கூலி வேலைகள், என்னைப் பொருட்கள் சார்ந்த தொழில்கள், பழுது பார்க்கும் தொழில்கள் , அடுத்தவருக்கு செய்யும் சேவைகள் , பழைய பொருட்களை புதிய பொருட்களாக மாற்றுதல் , 

ஒருவர் ஜாதகத்தில் சனி ஆயுள் பலத்தை குறிக்கும் , ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் பலத்தைக் கொண்டு ஆயுளை நிர்ணயிக்க முடியும் , எட்டாம் பாவக காரகாதிபதி , ஆயுள் பலம் எப்படி பார்ப்பது ? என்பது பற்றி உயர்நிலை வகுப்பில் எழுத இருக்கிறேன் . உங்களுக்கு கற்றுத் தர இருக்கிறேன் . மேலும் வாட்சப் வழி வீடியோ பதிவாக ஜோதிடம் படிக்க விருப்பம் உள்ளவர்கள் ( விரும்புபவர்கள் ) என்னுடைய இந்த whatsapp நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் ! Phone Call : 97 42 88 64 88 , What’s up : 97 42 88 64 88 

இப்போது இன்னும் சில சனியின் காரகத்துவங்களை பார்ப்போம் .. ! 

இரவில் பிறந்த குழந்தைகளுக்கு தந்தைக்காரர் சனி , பகலில் பிறந்தவர்களுக்கு தந்தைக்காரர் சூரியன், வேட்டையாடும் மக்கள், படகோட்டி, இரும்பு தொடர்புடைய தொழில்கள் , வெளிநாட்டு வேலை அமைப்பு , எட்டாம் எண் , சனிக்கிழமை, மலைவாசி, முதியவர், ஏழை , பூர்வ ஜென்ம கர்ம வினைகளை குறிப்பது சனி , எருமை மாடு , அவமானம், பழி , பாவம்,  கஷ்டம், வஞ்சனை , மாற்றுத்திறனாளிகள் ( handicapped ), சிறைச்சாலை , கருப்பு நிறம்… என இன்னும் பல காரகத்துவங்கள் சனிக்கு உண்டு .. உயர்நிலை வகுப்பு பதிவு எழுதும் போது உங்களுக்கு கற்றுத் தருகிறேன் ! ( follow this website ‘ SN Ganapathi Astrologer ‘ )

அடுத்து ராகுவின் காரகத்துவங்கள் பற்றி பார்ப்போம் ! 

சாயா கிரகம் என்று சொல்லக்கூடிய கிரகம் ராகு கிரகமாகும் , ஏனென்றால் ராகு ஒரு நிழல் கிரகமாகும் , வெளிநாடு செல்லுதல், சிறை தண்டனை, மத மாற்றம் , உறவுகளில் தாத்தா , தோல், அலர்ஜி, வலிப்பு, நோய்களைக் குறிக்கும் , மனித தலை இல்லாத தெய்வங்களை குறிக்கும் , துர்க்கை , வட்டி தொழில் , அடகு பிடித்தல் , கடிகாரம் ரேடியோ பழுதுபார்த்தல் , அலைந்து திரிந்து செய்யும் தொழில் வகைகள் , அரசுக்கு விரோதமான தொழில்கள் , ஏற்றுமதி இறக்குமதி, வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ட் , நான்காம் எண்ணெய் குறிக்கும் , தந்தை வழி பாட்டன் பாட்டியை குறிக்கும் , மயக்கம், வாயு , குடல் நோய், அந்நியர்கள் , புதியவர்கள், வேற்று மொழி பேசுபவர்கள், பயில்வான், பருத்த உடல்வாகு , திருடர்கள் , மறைமுகமாக செய்யக்கூடிய தொழில்கள் , நவீன பொருட்கள் , பாம்பு , விஷம் , வேடிக்கை வினோத செயல்கள் , மேஜிக் , ஆலைத் தொழில் , இழிதொழில் , மலைவாசி , 

ஒரு ஜாதகத்தில் ராகு நின்ற வீட்டு அதிபதியின் தன்மையை எடுத்து , ராகு தன்னுடைய தசா புத்தியில் பலன் தரும் ! 

இது பற்றி பலன் காணும் முறை என்னும் உயர்நிலை ஜோதிட பாடத்தில் எழுத இருக்கிறேன் ! ( follow our website SN Ganapathi Astrologer ) ( https://www.snganapathiastro.com/ )

அடுத்து கேதுவின் காரகத்துவங்கள் பற்றி பார்ப்போம் !

தாய் வழி பாட்டன் பாட்டியை குறிக்கும் , கருஞ்சிவப்பு, ஏழாம் எண் , செவ்வாய்க்கிழமை, வெளிநாடு வேலைவாய்ப்புகள் , இழிவான குலத் தொழில் , ஆன்மீகம் தொடர்புடைய தொழில்கள் , புத்தகம் விற்பனை , புத்தகம் எழுதுதல் , ஜோதிடம் , ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் , கேது சுப கிரகம் தொடர்பு பெற்றால் சுபதன்மை உள்ள வேலைகள் அமையும் , ஞானம், மோட்சம், வாழ்க்கையில் நெருக்கடி, மனக்குழப்பம், கேதுவே காரகத்துவமாகும் , மேலும் ராகுவிற்குச் சொன்ன சில காரகத்துவங்கள் கேதுவிற்கு பொருந்தும் ! வழக்காடும் இடங்கள் , வழக்கறிஞர்கள் கூடும் இடம் , தையல் , நெசவு செய்யும் இடம் , நுணுக்கமான வேலைபாடுகள் , 

மனித முகம் இல்லாத தெய்வங்கள் , ஆஞ்சநேயர், விநாயகர், ஏற்றுமதி இறக்குமதி , சட்டப்படியான விஷயங்கள் , சிக்கலான அனைத்து விஷயங்களும் , பிரிவினை தரக்கூடிய விஷயங்கள்  முதலிய காரகத்துவங்கள் கேதுவின் காரகத்துவங்கள் ஆகும் , மேலும் கேதுவின் காரகத்துவங்கள் பல உள்ளன .. ! 

கிரகங்களின் பார்வைகள் பற்றி பார்ப்போம் !

ஒரு கிரகம் தான் நின்ற வீட்டில் இருந்து ஏழாவது வீட்டை பார்க்கும் ! அதாவது தன்னுடைய கதிர்வீச்சை தான் நின்ற வீட்டில் இருந்து நேர் எதிரில் 160 டிகிரியில் வீசும் ! இதுவே ஒரு கிரகத்திற்கு ஏழாம் பார்வையாகும் ! 

( ஒரு ராசிக்கட்டம் மொத்தம் 360 டிகிரியை கொண்டதாகும் )

ஒரு சில கிரகங்களுக்கு சிறப்பு பார்வையும் உண்டு .. அது பற்றியும் இப்போது தெளிவாக பார்க்கலாம் .

இப்போது முதலில் எந்தெந்த கிரகம் தான் நின்று வீட்டில் இருந்து ஏழாம் வீட்டை பார்க்கும் என்பதை பற்றி பார்க்கலாம் !

சூரியன் – ஏழாம் வீட்டை பார்க்கும் ,

சந்திரன் – ஏழாம் வீட்டை பார்க்கும் ,

செவ்வாய் – ஏழாம் வீட்டை பார்க்கும் ,

புதன் – ஏழாம் வீட்டை பார்க்கும் ,

குரு – ஏழாம் வீட்டை பார்க்கும் , 

சுக்கிரன் – ஏழாம் வீட்டை பார்க்கும் ,

சனி – ஏழாம் வீட்டை பார்க்கும் , 

ராகு கேதுகளுக்கு பார்வை கிடையாது , சிலர் ராகு கேதுகளுக்கு பார்வை உண்டு என்பார்கள் , ஆனால் ராகு கேதுகளுக்கு பார்வை எடுக்க வேண்டாம் .

கிரகங்களின் சிறப்பு பார்வைகள் ! 

Chart – 5

குரு – தான் நின்ற வீட்டிலிருந்து ஐந்து மற்றும் ஒன்பதாம் வீட்டையும் பார்க்கும் , 

செவ்வாய் – தான் நின்ற வீட்டிலிருந்து நான்கு மற்றும் ஏழாம் இடத்தையும் பார்க்கும் , 

சனி – தான் நின்ற வீட்டிலிருந்து மூன்று மற்றும் பத்தாம் வீட்டையும் பார்க்கும் ! 

சூரியன், சந்திரன், புதன் , சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு ஏழாம் பார்வை மட்டுமே ! 

குரு, செவ்வாய், சனி , ஏழாம் பார்வையும் உண்டு மற்றும் சிறப்பு பார்வைகளும் உண்டு  ! 

கிரகங்களின் தசா ஆண்டுகள் பற்றி பார்ப்போம் !

கிரகங்களின் தசா ஆண்டுகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர் , நீங்கள் ‘ தசா ‘ என்றால் என்ன என்பது பற்றி அறிய வேண்டும் .

ஜாதகம் எழுதும் போது .. ஒரு ராசி கட்டத்தில் சந்திரனை எழுதுவார்கள் .. , அந்தச் சந்திரனை மையப்படுத்தியே .. தசா ஆண்டுகள் கணிக்கப்படுகின்றன .. , ஜாதகம் கணிப்பதற்கு தனி பாடம் இருக்கின்றன .. , ( ஜாதகம் கணிக்கும் முறையை அறிந்து கொள்வதற்கு என்னுடைய வாட்ஸ் அப் வழி வீடியோ பாடத்தில் இணைந்து கொள்ளலாம் Phone Call 97 42 88 64 88 

What’s up 97 42 88 64 88 ) 

இப்போது ஒவ்வொரு கிரகமும் குறிக்கும் தசா ஆண்டுகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் ! 

சூரியன் – ஆறு ஆண்டுகள் தன்னுடைய தசாவை நடத்தும் .

சந்திரன் – பத்து ஆண்டுகள் தன்னுடைய தசாவை நடத்தும் .

செவ்வாய் – ஏழு ஆண்டுகள் தன்னுடைய தசாவை நடத்தும் .

புதன் – 17 ஆண்டுகள் தன்னுடைய தசாவை நடத்தும் .

குரு – 16 ஆண்டுகள் தன்னுடைய தசாவை நடத்தும் .

சுக்கிரன் – 20 ஆண்டுகள் தன்னுடைய தசாவில் நடத்தும் .

சனி – 19 ஆண்டுகள் தன்னுடைய தசாவை நடத்தும் .

ராகு – 18 ஆண்டுகள் தன்னுடைய தசாவில் நடத்தும் .

கேது – ஏழு ஆண்டுகள் தன்னுடைய தசாவில் நடத்தும் . 

சூரியன் முதலான ஒன்பது கிரகங்களின் தசா ஆண்டுகளைக் கூட்டினால் 120 ஆண்டுகள் வரும் , இதனை வின்சோத்தரி வருடம் என்று ஜோதிடத்தில் குறிக்கப்படுகிறது . ஜோதிட ரீதியாக ஒரு மனிதனின் முழு ஆயுளை குறிப்பது இந்த 120 வருடங்கள் ஆகும் ! 

( 6+10+7+17+16+20+19+18+7 = 120 வருடங்கள் ஆகும் )

தசாவை வைத்து எப்படி பலன் எடுப்பது என்பது பற்றி ஒரு சிறு அடிப்படையான விளக்கத்தை இப்பொழுது தருகிறேன் ! 

உதாரணத்திற்கு ஒருவருக்கு சுக்கிர தசா நடக்கிறது என்றால் .. 20 வருடத்திற்கு சுக்கிரன் தன்னுடைய தசாவை அந்த ஜாதகருக்கு நடத்துவார் . அந்த இருபது வருடமும் அந்த ஜாதகருக்கு எப்படி இருக்கும் ? என்பது பற்றி ஆய்வு செய்து சொல்வது தான் ஜாதக பலன் காணும் முறை ஆகும் ! சரி எப்படி ஆய்வு செய்வது ? என்றால் ..  

ஒருவர் எந்த லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்று பார்க்க வேண்டும் ! லக்னம் என்றால் என்ன என்ற ஒரு கேள்வி அடிப்படை ஜோதிடம் மாணவர்களுக்கு வரும் . ஓரளவு அடிப்படை தெரிந்தவர்களுக்கு இந்த லக்னம் என்றால் என்ன என்று தெரியும் . ( லக்னம் பற்றி தெரியாதவர்கள் கவலைப்பட வேண்டாம் இதைப் பற்றி விரைவில் அடுத்தடுத்த பதிவுகளில் எழுத உள்ளேன் . ( உடனே தெரிய வேண்டுமென்றால்  என்னுடைய whats up  வழி வீடியோ ஜோதிட பாடத்தில் இணைந்து கொள்ளுங்கள் . What’s up 97 42 88 64 88 , வாட்ஸ் அப் வழி தொடர்பு கொள்ளுங்கள் ) 

ஒருவர் எந்த லக்னத்தில் பிறந்திருக்கிறாரோ , அந்த லக்னப்படி இந்த சுக்கிரன் லக்ன சுவராக இருந்தால்.. அந்த இருபது வருடமும் ஜாதகருக்கு நன்மை செய்யும் .. இல்லையென்றால் அந்த இருபது வருடமும் ஜாதகருக்கு நன்மை தராது . 

லக்னசுபர், லக்னப்பாவர் என்றால் என்ன ? என்பது பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் படியுங்கள் !

மீண்டும் உங்களை அடிப்படை ஜோதிட பாடம் 5 இல் சந்திக்கிறேன் .. 

அனைத்து அடிப்படை ஜோதிட பாடங்களையும் இந்த ஒரே website இல் பாருங்கள்.. 

என்னைப் பற்றி 

நான் ஜோதிஷ வித்யாவதி , ஜோதிடர், எண் கணித நிபுணர், வீடு வாஸ்து ஸ்பெஷலிஸ்ட் S.N. கணபதி B.Lit , M.A, D.Astro 

What’s up And Ph : 97 42 88 64 88 

மேலும் முழு ஜாதக பலன் அறிய..

அதாவது வேறு ஏதேனும் தனிப்பட்ட கேள்வி இருந்தால்..

தொலைபேசி வழி ஜாதக பலன் அறிய ..

 என்னுடைய இந்த whatsapp நம்பருக்கு உங்கள் பிறந்த தேதி நேரம் விவரங்கள் அனுப்பி 

கட்டணம் செலுத்தி தொலைபேசி வழியே ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம் 

Phone Call 97 42 88 64 88 

What’s up 97 42 88 64 88 

 மேலும் whats up வழி வீடியோ ஜோதிட பாடப்பதிவுகளை படிக்க என்னுடைய இந்த whatsapp நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் 

What’s up 97 42 88 64 88 

follow our website ( https://www.snganapathiastro.com/ ) SN Ganapathi Astroger 

தொடரும் ….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *