அடிப்படை ஜோதிட பாடம் – 5 | மேஷ ராசியும் , அஸ்வினி நட்சத்திர குணங்களும் ! ( Vedic Astrology )

 அடிப்படை ஜோதிட பாடம் – 5 | மேஷ ராசியும் , அஸ்வினி நட்சத்திர குணங்களும் ! ( Vedic Astrology )

ஜாதகம் கற்றுக் கொள்வது எப்படி ?

 அடிப்படை ஜோதிட பாடம் – 5 

ashwini natchathiram mesha rasi in tamil

ஜோதிட மாணவர்களே ஜோதிட ஆர்வலர்களே உங்களுக்கு எனது அன்பான வணக்கங்கள் ! 

ஜாதகம் கற்றுக் கொள்வது எப்படி ? என்கிற தலைப்பில் , அடிப்படை ஜோதிட பாடம் – 5 இல் உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் ! ( இதுவரை அடிப்படை ஜோதிட பாடங்கள் 1, 2, 3, 4 எழுதி இருக்கிறேன் . இது ஐந்தாவது பகுதி . மேலும் அடிப்படை ஜோதிட பாடங்கள் இதே தளத்தில் உள்ளன. )

ஒருவருக்கு ஜாதக பலன் சொல்வதற்கு முன்னர் ஒவ்வொரு ராசியின் குணங்களையும் நட்சத்திர குணங்களையும் தெரிந்திருக்க வேண்டும் ! ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு வித்தியாசமான குணங்கள் இருக்கும் . அதிலும் அந்த ராசியில் இடம்பெறக்கூடிய நட்சத்திர அடிப்படையில் அந்த ஒரே ராசியினர் கூட ஒருவருக்கொருவர் குணங்கள் மாறுபடும் . அதாவது மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் என்றால் ஒரு குணமும், மேஷ ராசி பரணி நட்சத்திரம் என்றால் ஒரு குணமும் , மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம் என்றால் ஒரு குணமும் என இவ்வாறு ஒரே ராசியினராக இருந்தாலும் நட்சத்திர அடிப்படையில் அவர்களுக்கு குணங்கள் மாறுபடும் ! அந்த ஒரே ராசியினுடைய விருப்பம் வெறுப்புகள் மாறுபடும் ! இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.. ஒரே ராசியாக இருந்தாலும் ஏன் அவர்கள் மாறுபட்டு இருக்கிறார்கள் என்றால் அதற்கு இதுதான் காரணம் ! இப்போது மேஷ ராசியின் பொதுவான குணங்களை பார்ப்போம் ! பிறகு மேஷ ராசியில் இடம்பெறக்கூடிய நட்சத்திர குணங்களையும் பார்ப்போம் ! 

மேஷ ராசி பொது குணம்

நல்ல பேச்சாற்றல் கொண்டவர்கள். கடுமையான உழைப்பாளிகள் . எடுத்த காரியத்தில் இறுதிவரை போராடி ஒரு முடிவை பார்த்துவிட வேண்டுமென்ற உறுதி கொண்டவர்கள் . எதிலும் விரைவாக ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள். இவர்களைக் கண்டு பலர் பயப்படக்கூடியவர்களாக இருப்பார்கள் . இவர்களைப் பார்த்து பயப்படும் எதிரிகளைக் கொண்டவர்கள் இவர்கள் . சற்று சுயநலமும் இவர்களுக்கு உண்டு. சுருக்கமாக பேசி எளிதில் புரிய வைக்க கூடியவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் படித்தோ கேட்டோ தெரிந்து கொள்வது இவர்களுக்கு பிடிக்காது . எந்த ஒரு விஷயத்தையும் அனுபவித்து அறிந்து கொள்வதையே இவர்கள் அதிகம் விரும்புவார்கள் . இவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் குணம் கொஞ்சம் குறைவுதான் . தன்னுடைய உற்றார் உறவினர்களிடம் கூட சற்று சுயநலப் போக்கோடு தான் இவர்கள் செயல்படுவார்கள் . அடுத்து மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் குணங்களை பார்ப்பதற்கு முன்னர் 

மேஷ ராசி வீட்டு அதிபதி செவ்வாயின் காரகத்துவங்களை பற்றி பார்க்கலாம் ! 

செவ்வாய் காரகத்துவங்கள் 

அதிகாரம், கோபம், ஆத்திரம், போராட்டம், துணிச்சல், தைரியம், பிடிவாதம் முதலிய காரகத்துவங்களை உடையது .. ( இங்கு காரகத்துவங்கள் என்பதை நீங்கள் குணங்கள் என்றும் புரிந்து கொள்ளலாம் ) மேலும் செவ்வாயின் காரகத்துவங்களை அடிப்படை ஜோதிட பாடம் 3 இல் எழுதி இருக்கிறேன் அதனை படிக்காதவர்கள் ஒரு முறை சென்று படித்து விடுங்கள் ! 

மேஷ ராசியும் அஸ்வினி நட்சத்திர குணமும் 

அஸ்வினி நட்சத்திரம் முதல் ரேவதி நட்சத்திரம் வரை என மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன . மேஷ ராசியில் இடம்பெறக் கூடிய முதல் நட்சத்திரம் அஸ்வினி . அஸ்வினி 1, 2, 3, 4 பாதங்கள் மேஷ ராசியில் இடம்பெறுகின்றன . அஸ்வினி நட்சத்திரம் அதிபதி கேதுவாகும் . கேதுவிற்கு மோட்ச காரகன் ஞானகாரகன் , ஆன்மீகம் என்று பல காரகங்கள் உள்ளன .. எனவே கோவில் வழிபாடு செய்வதற்கும் , ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவதற்கும் இது உகந்த நட்சத்திர காலமாகும் ! அஸ்வினி நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் தெய்வ வழிபாடு பரிகார வழிபாடு செய்வது உத்தமம் ! 
இப்போது உங்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்து இருக்கும் . மேஷ ராசி கோபக்கார ராசியாக இருந்தாலும் .. மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆன்மீக விஷயத்தில் அதிகம் நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள் ! 
( ஒரு முக்கிய குறிப்பு : ராசி அதிபதி செவ்வாய் எந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார் என்பதை பொறுத்தும் ஜாதகரின் குணம் மாறுபடும் ! ) எனவே ஜோதிடம் என்பது பல விஷயங்களை காரகத்துவங்களை உள்ளடக்கி ஒரு முடிவுக்கு வர வேண்டிய ஒரு ஜாதக கணிதம் ஆகும் ! கணிதம் என்றவுடன் நீங்கள் வேறு ஏதோ கடினமான ஒன்று என்று நினைத்து விட வேண்டாம் நேயர்களே ! ஜோதிட ஆர்வலர்களே ! நம்முடைய இந்த website இல் ( https://www.snganapathiastro.com/ ) முழுக்க முழுக்க பலன் சொல்வதற்கான அடிப்படை ஜோதிட பாடங்களை தொடர்ந்து எழுதி வருகிறேன்! ( கணிதம் முறையாக படிக்க வேண்டுமென்றால் என்னுடைய வாட்ஸ்அப் வழி வீடியோ பாடத்தில் இணைந்து கொண்டு படிக்கலாம் ! தொடர்புக்கு: 97 42 88 64 88 )
மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , தங்களுடைய கோபத்தை உடனே வெளிப்படுத்த மாட்டார்கள் . காரணம் அஸ்வினி நட்சத்திரம் கேதுவின் அமைப்பை உடையது . கேது தன்னுள் ஒரு விஷயத்தை அடைத்து வைத்திருந்து திடீரென்று வெளிப்படுத்தும் குணத்தை உடையது ! கேது என்பது ஒரு அணுவைப் போல .. அந்த அணு ஒரு அளவு மட்டும் தான் பொறுத்திருக்கும் . அதிகம் பிரஷர் (pressure ) கொடுத்தால் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி விடும் ! எனவே மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரக்காரர்களிடம் பொறுமையாக பேசி அவர்களை கையாள வேண்டும் ! ( ஒருவேளை நீங்கள் அஸ்வினி நட்சத்திரமாக இருந்தால் .. எந்த ஒரு விஷயத்தையும் உடனே கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள் .. உங்கள் மனதிற்குள் எந்த ஒரு விஷயத்தையும் போட்டு குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம் . ) கேது ஆரம்பத்தில் சற்று குழம்பி விடும். பிறகுதான் அதற்கு தெளிவு ஏற்பட்டு ஞானம் கிடைக்கும். அதனால் தான் கேதுவிற்கு ஞானகாரகன் என்ற ஒரு பெயர் உண்டு . 
மேலும் கேதுவின் காரகத்துவங்களை பற்றி அடிப்படை ஜோதிடப் பாடம் 4 இல் சொல்லி இருக்கிறேன் ! அந்தப் பதிவை படிக்காதவர்கள் ஒரு முறை படியுங்கள் உங்களுக்கு தெளிவாக புரியும் ! கேதுவின் காரகத்துவங்களை புரிந்து கொண்டால் இந்த மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரக்காரர்களை பற்றி நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள முடியும் ! 
மேஷ ராசி வீட்டு அதிபதி செவ்வாய் + அஸ்வினி நட்சத்திர அதிபதி கேது .. , செவ்வாய் கேது இணைவு என்ற ஒரு விஷயம் இங்கே இருக்கிறது .. செவ்வாய் கோபம் + கேது தன்னுள் எதையும் அடக்கி வைத்திருக்கும்  தன்மை உடையது , நேரம் வரும்போது கேது தன்னுடைய குணத்தை வெளிப்படுத்தி விடும் ! கேது எந்த கிரகத்தோடு தொடர்பு கொள்கிறதோ அந்த கிரகத்தின் தன்மையை தான் வெளிப்படுத்தும் ! இதனை மாணவர்கள் ,  ஜோதிட ஆர்வலர்கள் , நேயர்கள் ஆகிய நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் ! எனவே செவ்வாய் கேது என்பது தன்னுடைய கோபத்தை நேரம் வரும்போது திடீரென்று வெளிப்படுத்தி விடும் ! எனவே மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரக்காரர்களிடம் தன்மையாகத்தான் பேசி பழக வேண்டும் ! இவர்களிடம் தேவையில்லாமல் வீண் வம்பு வைத்துக் கொள்ளக்கூடாது ! எப்போது வெடிக்கும் என்றே தெரியாது ! 
இவர்கள் அன்புக்காக ஏங்கக் கூடியவர்கள் , பாசம் என்று வைத்துவிட்டால் அவர்களுக்காக உயிரையே கொடுப்பார்கள் ! ஆனால் ஒரு விஷயம் இவர்கள் சொல்வதை தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் அப்பொழுதுதான் இவர்களிடம் ஒத்து வாழ முடியும் ! கேது என்றால் கிரீடம் என்ற இன்னொரு காரகத்துவமும் உண்டு ! எனவே இந்த அஸ்வினி நட்சத்திர நேயர்கள் தலைமை பண்பை அதிகம் விரும்புவார்கள் ! 
பாருங்கள் ராசியிலும் முதல் ராசி , நட்சத்திரத்திலும் முதல் நட்சத்திரம் , என்றால் சொல்லவா வேண்டும்.. முதன்மை தன்மையை எப்படியாவது தட்டிப் பறிக்க வேண்டும் என்று நினைப்பார்கள் ! 
ஜாதக அமைப்பும் தசா புத்தியும் நன்றாக இருந்தால் நிச்சயம் இவர்களுக்கு தலைமை பண்பு வந்து சேரும் ! 

தொழில் 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள் ! யாரிடமும் கைகட்டி வேலை செய்ய விரும்ப மாட்டார்கள் ! ராசி அதிபதி செவ்வாய் அமர்ந்த வீட்டின் தன்மை பொறுத்து தான் இவர்கள் சொந்தமாக தொழில் செய்தால் லாபம் கிடைக்குமா என்பதை பற்றி அறிய முடியும் ! மேலும் அந்த ஜாதகரின் ஜாதகத்தில் குரு பலமாக இருக்க வேண்டும் ! அப்போதுதான் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் . இல்லையென்றால் அடுத்தவர்களை நம்பித்தான் அவர் வாழ முடியும் . 

திருமணம் 

திருமண விஷயத்தில் மிகவும் பிடிவாத குணம் உடையவர்கள் . இவர்கள் விருப்பப்படி தான் திருமணம் அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் . ஜாதகத்தில் ஏழாம் அதிபதியின் தன்மை பொறுத்து இவர்களுக்கு திருமண வாழ்க்கை அமையும் . ( ஒரு கிரகம் பலம் பெறுகிறதா? இல்லையா என்பதை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் இதே தளத்தில் எழுத இருக்கிறேன் . ) ஒரு கிரகத்தின் பலம் பலகீனம் பற்றி தெரிந்தால் தான்
 ஒரு பாவகத்தின் பலனை 100% தெளிவாக கூற முடியும் . இதனை நிச்சயமாக உங்களுக்கு கற்றுத் தருகிறேன் அடுத்தடுத்த பதிவுகளில் .

வீடு வாகன யோகம் 

இவர்களுக்கு வீடு வாகனம் யோகம் விரைவில் அமையாது ! சொந்த உழைப்பில் தான் இவர்களுக்கு வீடு வாகன யோகம் அமையும் ! இவர்களின் சுய ஜாதகத்தில் நான்காம் அதிபதி பலம் பெற்றால் நிச்சயம் வீடு வாகன யோகம் ஏற்படும் . ( ஒரு முக்கிய குறிப்பு நான்காம் அதிபதி ஆட்சி உச்சம் பெறுவது நல்லது ) 

கிரக சேர்க்கை பலன்

ராசிநாதன் செவ்வாய்க்கு நட்பு கிரகமான சந்திரன் சூரியன் குரு செவ்வாயோடு இணைந்து இருப்பின் குரு மங்கல யோகம் ஏற்படும் , சந்திரமங்கல யோகம் ஏற்படும் , குரு சந்திர யோகமும் ஏற்படும் . எனவே இவர்கள் கைராசிக்காரர்களாக விளங்குவார்கள் ! இவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும் ! 
அடுத்த பதிவிலே மேஷ ராசி பரணி நட்சத்திரம் மற்றும் மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம் பற்றி பார்க்கலாம் ! 

ஜாதக பலன் சொல்வதற்கு அடிப்படை ஜோதிட அறிவு தேவை எனவே தொடர்ந்து அடிப்படை ஜோதிட பாடங்களை இந்த தளத்தில் ( எழுதி வருகிறேன் ! 
மீண்டும் உங்களை அடிப்படை ஜோதிட பாடம் 6 இல் சந்திக்கிறேன் .. 
அனைத்து அடிப்படை ஜோதிட பாடங்களையும் இந்த ஒரே website இல் ( https://www.snganapathiastro.com/ ) பாருங்கள்.. 

என்னைப் பற்றி 

நான் ஜோதிஷ வித்யாவதி , ஜோதிடர், எண் கணித நிபுணர், வீடு வாஸ்து ஸ்பெஷலிஸ்ட் S.N. கணபதி B.Lit , M.A, D.Astro 

What’s up And Ph : 97 42 88 64 88 

மேலும் முழு ஜாதக பலன் அறிய..

அதாவது வேறு ஏதேனும் தனிப்பட்ட கேள்வி இருந்தால்..

தொலைபேசி வழி ஜாதக பலன் அறிய ..

 என்னுடைய இந்த whatsapp நம்பருக்கு உங்கள் பிறந்த தேதி நேரம் விவரங்கள் அனுப்பி 

கட்டணம் செலுத்தி தொலைபேசி வழியே ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம் 

Phone Call 97 42 88 64 88 

What’s up 97 42 88 64 88 

 மேலும் whats up வழி வீடியோ ஜோதிட பாடப்பதிவுகளை படிக்க என்னுடைய இந்த whatsapp நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் 

What’s up 97 42 88 64 88 

follow our website ( https://www.snganapathiastro.com/ ) SN Ganapathi Astroger 

தொடரும் ….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *