அடிப்படை ஜோதிட பாடம் – 6 | மேஷ ராசியும் , பரணி நட்சத்திர பலன்களும் ! ( Vedic Astrology )

 அடிப்படை ஜோதிட பாடம் – 6 | மேஷ ராசியும் , பரணி நட்சத்திர பலன்களும் ! ( Vedic Astrology )

ஜாதகம் கற்றுக் கொள்வது எப்படி ?

அடிப்படை ஜோதிட பாடம் – 6

barani natchathiram palan in tamil

ஜோதிட மாணவர்களே ஜோதிட ஆர்வலர்களே உங்களுக்கு எனது அன்பான வணக்கங்கள் ! 

ஜாதகம் கற்றுக் கொள்வது எப்படி ? என்கிற தலைப்பில் , அடிப்படை ஜோதிட பாடம் – 6 இல் உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் ! ( இதுவரை அடிப்படை ஜோதிட பாடங்கள் 1, 2, 3, 4,5 எழுதி இருக்கிறேன் . இது ஆறாவது பகுதி . மேலும் அடிப்படை ஜோதிட பாடங்கள் அனைத்தும் இந்த ஒரே தளத்தில் உள்ளன. )

மேஷ ராசி பரணி நட்சத்திரம் பொது குணம் & காரகத்துவங்கள் 

மேஷ  ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகானவர்களாகவும் நடுத்தர உயரமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். மனைவி மக்களை நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களோடு பழகும் விதத்தில் தனித்துவம் கொண்டவர்களாக இவர்கள் விளங்குவார்கள் . மற்றவர்களை அனுசரித்து வாழும் திறன் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும். எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களைப் பற்றி முன்னரே அறிந்து கொள்ளும் ஒருவித திறன் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். குறைவாக பேசினாலும் சரியான நல்ல விஷயங்களை பேசுவார்கள். எல்லோரையும் இவர்களுக்கு பிடிக்கும். 
ஜனப் பிரியராக இருப்பார்கள். ஏதாவது ஒரு பிரச்சனை தொந்தரவு என்றால் ஒதுங்கியே இருப்பார்கள். வண்டி வாகனங்களில் அதிகம் பிரியம் உடையவர்கள் இவர்கள். 
எந்த ஒரு விஷயத்தையும் அலைச்சல் திரிசல் இருந்தாலும் கூட சாமர்த்தியமாக ஆர்வமுடன் அந்த விஷயத்தை சிறப்பாக செய்து முடிப்பார்கள். ஆன்மீக சிந்தனை அதிகம் இருக்கும் எனவே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடையவர்கள் இவர்கள். இவர்களுக்கு அதிகமாக பெண் எதிரிகள் இருப்பார்கள் . காரணம் இந்த ராசிக்கு ஆறாம் அதிபதி ருண ரோக ஸ்தானம் என்பது பெண் கிரகத்தை குறிக்கும் ஸ்தானமாகும். ( ஆறாம் அதிபதி பொறுத்து ஒருவருக்கு எதிரி அமைவார்கள் . இதைப் பற்றி உயர்நிலை பாடத்தில் எழுத இருக்கிறேன் . ) இந்த தளத்தை Follow செய்யுங்கள்
மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உள்ள குறை என்னவென்றால் .. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது . சேர்த்த செல்வத்தை முறைப்படுத்தவும் இவர்களுக்கு தெரியாது. லாப விஷயங்களில் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருப்பார்கள். ஒரு 40 வயதிற்கு மேல் தான் இவர்கள் பொறுப்போடு நிறைய விஷயங்களை செய்ய ஆரம்பிப்பார்கள் . அப்போது வீடு வாகன யோகம் செல்வாக்கு சொத்து இவர்களுக்கு சேரும் . 

நிர்வாகத் திறமை

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு இயல்பிலேயே நிர்வாகத் திறமை உண்டு ! ( ‘ Management Skill ‘ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் . ) நிறைய சுப செலவுகளை செய்வார்கள். எந்த ஒரு விஷயத்தையும் எதார்த்தமாக எடுத்துக் கொண்டு வெற்றிகரமாக முடித்துக் காட்டுவார்கள் . மேலும் யாரையும் எளிதாக நம்பி விடுவார்கள். பிறகு அவர்களைப் பற்றி தெரியும் போது மனவருத்தம் அடைவார்கள். இவர்களுக்கு மன்னிக்கும் குணம் அதிகம். 

கலைத்திறன்

நன்றாக படிக்கும் திறமை உடையவர்கள். கலைத்திறமை இவர்கள் ரத்தத்திலேயே ஊறி இருக்கும். எந்த ஒரு கலையையும் எளிதாக கற்றுக் கொள்வார்கள். இசையில் பிரியும் அதிகமாக இருக்கும். இவர்கள் பேச்சில் ஞானம் வெளிப்படும். இவர்களின் பேச்சை கேட்பவர்கள் மெய்மறந்து கேட்கக்கூடிய அளவுக்கு ஞானத்தோடும் நல்ல விஷயங்களை பேசி சாதிக்க கூடியவர்கள் இவர்கள். இவர்களுக்கு நடிப்பிலும் ஆர்வம் இருக்கும். இந்த ராசியில் அல்லது லக்னத்தில் பிறந்த பலர் கலைத்துறையில் பிரகாசமாக விளங்கி வருகிறார்கள். ஓவியத்துறையிலும் இவர்களுக்கு அதிக ஈடுபாடு இருக்கும் . இருப்பினும் இவர்கள் ஜாதக அடிப்படையிலே ஐந்தாம் அதிபதி நான்காம் அதிபதி 10ஆம் அதிபதியின் தன்மையைப் பொறுத்து இவர்களின் தொழில்முறை வேலை அமைப்பு மாறுபடும் . 

ஜாதக அமைப்பு

மேஷ ராசிநாதன் செவ்வாயும், பரணி நட்சத்திர அதிபதி சுக்கிரனும் ( பரணி நட்சத்திர அதிபதி சுக்கிரன் ஆவார் ) 
ஒருவர் ஜாதகத்தில் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்வை பெற்றாலோ ! மேற் சொன்ன பலன்கள் குணங்கள் அனைத்தும் 100% அந்த ஜாதகருக்கு நடக்கும் ! பார்வை சேர்க்கை தொடர்பு இல்லாத போது 60% மட்டுமே நடக்கும் . அதனால்தான் பலருக்கு ஒரு துறையில் ஆர்வம் இருந்தாலும் அந்த துறையில் அவர்களால் வளர்ச்சி அடைய முடியவில்லை. ஒரு சிலரால் மட்டுமே தாங்கள் பிரியப்படும் துறைகளில் வளர்ச்சி அடைகிறார்கள் அதற்கு இந்த ஜாதகம் அமைப்புதான் காரணம். 

அதிர்ஷ்ட வாய்ப்புகள்

ஒரு சில பரணி நட்சத்திர காரர்களுக்கு , இயல்பிலேயே சில அதிர்ஷ்டகரமான சூழ்நிலை அமைய பெற்று இருக்கும் . இதற்குக் காரணம் அவர்களின் பூர்வ ஜென்ம கர்ம அடிப்படையிலே அவர்கள் அடையக்கூடிய நற்பலன்கள் ஆகும். ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானமாகும் . அதாவது ராசிக்கு ஐந்தாம் வீடு . அந்த வீட்டு அதிபதி பலம் பெறுவது. பலம் பெறுவது என்றால் ஆட்சி உச்சம் பெறுவது . அடிப்படை விதிமுறைகளை ஓரளவு படித்தவர்களுக்கு நான் சொல்லக்கூடிய இந்த விதிமுறைகள் புரியும். புதிதாக ஜோதிடம்  படிப்பவர்களுக்கு இந்த விதிமுறைகள் உடனே புரியாது. அடிப்படை ஜோதிட பாடம் ஒன்று முதல் படிப்படியாக இதே தளத்தில் அனைத்து பதிவுகளையும் படித்து வாருங்கள். நீங்களும் நிச்சயம் ஜோதிடராக முடியும் . மேலும் ஜோதிட பாடங்கள் வீடியோ பதிவாக என்னிடம் உள்ளது . அதனை வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வருகிறேன் பல நேயர்களுக்கு. உங்களுக்கும் தேவை என்றால் என்னை whatsup வழி தொடர்பு கொள்ளுங்கள் முறையாக ஜோதிடம் படித்து பலன் சொல்லுங்கள் ! What’s up 97 42 88 64 88. 
செவ்வாயை சுக்கிரன் பார்த்தாலோ, செவ்வாயுடன் சுக்கிரன் இணைந்தாலோ இவர்களுக்கு ராசிநாதன் வலிமை பெறுகிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் . இங்கு வலிமை என்பதை நல்ல அனுகூலம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது நல்ல கொடுப்பினை உள்ள ஜாதகம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் . இது போன்று உள்ள ஜாதக அமைப்புகளை தேடி ஆய்வு செய்தபோது 100 பேரில் 10 பேருக்கு தான் நல்ல விதமாக அமைந்திருக்கிறது ! மற்றவர்களுக்கு சுமாரான அமைப்புதான் இருக்கிறது ! 
எனவே எந்த ஒரு புதிய விஷயத்தை ஆரம்பிப்பதாக இருந்தாலும் அந்த குறிப்பிட்ட நபர் ஜாதகம் பார்த்து ஆரம்பிக்க வேண்டும் ! 

மேஷ ராசி வீட்டு அதிபதி செவ்வாய்

கிரக சேர்க்கை பலன் 

ராசிநாதன் செவ்வாய் ராகு அல்லது கேது வோடு இணைவது நல்லதில்லை .‌ கேதுவோடு இணைவது கூட ஓரளவு 50 சதவீதம் நற்பலன்கள் தரும் . கேது செவ்வாய் சேர்க்கை கூட ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம் . ஆனால் செவ்வாய் ராகு இணைவை ஏற்றுக் கொள்ள இயலாது. திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது இதை சர்வ ஜாக்கிரதையாக பார்த்து இணைக்க வேண்டும் . ராகு என்றால் பாம்பு . செவ்வாய் என்பது கோபம் . எனவே இந்த இரு கிரக சேர்க்கை ஒரு ஜாதகத்திற்கு ஆகாது ! 
செவ்வாய் சுக்கிரன் இணைவு நல்லது . செவ்வாய் சுக்கிரனோடு கேது இணைவது நல்லதில்லை. அதேபோல் செவ்வாய் சுக்கிரனோடு ராகு இணைவதும் நல்லதில்லை . 
செவ்வாயோடு குரு இணைவது நல்லது . செவ்வாயை குரு பார்ப்பதும் நல்லது. குருப் பார்வை கோடி நன்மை செய்யும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . மேலும் அனைத்து கிரக சேர்க்கை காண பலன்களை உயர்நிலை பாடத்தில் தெளிவாக எழுத இருக்கிறேன். 

தொழில் அல்லது வேலை 

மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இயல்பிலேயே தொழில் மீது ஆர்வம் இருக்கும் . நிர்வாக ஆற்றலும் இருக்கும். கோபம் இருந்தாலும் பொறுமை குணமும் இருக்கும். ‘ கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் ‘ என்று சொல்வார்கள் அல்லவா அது இந்த மேஷ ராசி பரணி நட்சத்திர நேயர்களுக்கு பொருந்தும் ! 
கடுமையாக உழைத்து செய்யக்கூடிய தொழில் அல்லது வேலை இவர்களுக்கு அமையும் . சொந்தமாக தொழில் செய்யலாமா ? அல்லது இன்னொருவர் இடத்தில் அடிமை வேலை செய்யலாமா ? என்பது அவர் அவர்களின் சுய ஜாதகத்தில் தான் அமைந்திருக்கும் . அதனை வைத்து தான் அந்த குறிப்பிட்ட ஜாதகர் சுயதொழில் செய்யலாமா என்று முடிவு செய்ய வேண்டும். எனவே ஜாதகத்தை ஒருமுறை பார்த்து விட்டு தான் இவர்கள் சுயதொழில் ஆரம்பிக்க வேண்டும் . எல்லோரும் சுயதொழில் செய்கிறார்கள் நாமும் செய்தால் என்ன என்று இவர்கள் ஆரம்பித்து விடக்கூடாது . 

திருமணம் 

இவர்களின் விருப்பப்படி திருமணம் அமையும் . இருப்பினும் பெற்றோரின் சம்மதத்தோடு இவர்கள் திருமணம் செய்வதுதான் நல்லது ! பெற்றோரின் விருப்பத்தோடு திருமணம் செய்தவர்கள் நன்றாகவே இருக்கிறார்கள் . பெற்றோரின் விருப்பமில்லாமல் திருமணம் செய்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் . எனவே பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது உத்தமம்! 
என்னிடம் ஜாதகம் பார்த்த பலர் திருமணம் செய்துவிட்டு, பிறகு பிரிந்த ஜாதகங்கள் பல பேர் என்னிடம் ஜாதகம் பார்த்திருக்கிறார்கள் . அவர்களின் ஜாதக அமைப்பை பார்த்தபோது விருப்பப்படி திருமண வாய்ப்பு இருந்தாலும் பொருத்தம் இல்லாத ஜாதகத்தோடு திருமணம் செய்து விட்டார்கள் . இதற்கும் பூர்வ ஜென்ம கர்மா தான் காரணம். இன்னார் இந்த விஷயத்தை அனுபவித்தாக வேண்டும் என்பது பூர்வ ஜென்ம ஐந்தாம் பாவக தன்மையாகும். எனவே சில நேரத்தில் பொருத்தம் பார்க்கும் ஜோதிடரின் கண்ணையும் மறைத்து விடும் கர்மா ! பெற்றோரின் ஆசிர்வாதம் இருந்தால் இந்த ஐந்தாம் பாவம் நன்றாக வேலை செய்யும் ! அதனால்தான் பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்ய சொல்லுகிறேன் ! பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் குருவிற்கு சமமானவர்கள் . ஒரு ஜாதகத்தில் குரு நல்ல விதமாக செயல்பட வேண்டும் என்றால் பெரியவர்களை மதிக்க வேண்டும் ! மேலும் அவர்களுக்கு நல்ல செல்வ வளமும் சேரும் ! 
எனவே மேஷ ராசி பரணி நட்சத்திர நேயர்கள் பெற்றோர்களின் ஆசிர்வாதத்தை பெற்றால் சகல செல்வ சௌபாக்கியமும் அவர்களுக்கு கிடைக்கப்பெறும் ! ஜோதிடத்துறையில் முன்னோர்கள் இது போன்ற ஆய்வுகளை செய்து நமக்கு கொடுத்து சென்று இருக்கிறார்கள் . என்னுடைய குருநாதரும் இதனை மிகச் சிறப்பாக எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். என்னுடைய அனுபவத்திலும் பல ஜாதகத்தில் ஜோதிட விதிமுறைகளை பொருத்திப் பார்க்கும் பொழுது சரியாக வருகிறது. மிகச் சரியாக பொருந்தக்கூடிய ஜோதிட விதிமுறைகளை மட்டுமே இந்த தளத்தில் எழுதி வருகிறேன் ! 

வீடு வாகன யோகம் 

மேஷ ராசி அதிபதி செவ்வாயும், பரணி நட்சத்திர அதிபதி சுக்கிரனும், மேஷ ராசி படி நான்காம் வீட்டு அதிபதி சந்திரனும் , பார்வை சேர்க்கை பெரும்பொழுது ஜாதகருக்கு வீடு வாகன யோகம் இயல்பாகவே அமையும் ! மேற் சொன்ன இந்த கிரக சேர்க்கை குறிப்பிட்ட ஜாதகருக்கு இல்லாத போது .. வாடகை வீட்டில் வசிப்பவராக இருப்பார் . சொந்த வீடுயோகம் இருக்காது .
ஒருவேளை இந்த ஜாதக அமைப்பு உடையவர்களுக்கு இவர்களுடைய வாழ்க்கை துணை மற்றும் இவருடைய பிள்ளைகளுக்கு வீடு வாகன யோகம் இருக்கும் பொழுது திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறந்த பிறகு ஜாதகருக்கு வீடு வாகன யோகம் அமையும் !
அடுத்த பதிவிலே மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம்  பற்றி பார்க்கலாம் ! 
ஜாதக பலன் சொல்வதற்கு அடிப்படை ஜோதிட அறிவு தேவை எனவே தொடர்ந்து அடிப்படை ஜோதிட பாடங்களை இந்த தளத்தில் ( எழுதி வருகிறேன் ! 
மீண்டும் உங்களை அடிப்படை ஜோதிட பாடம் 7 இல் சந்திக்கிறேன் .. 
அனைத்து அடிப்படை ஜோதிட பாடங்களையும் இந்த ஒரே website இல் ( https://www.snganapathiastro.com/ ) பாருங்கள்.. 

என்னைப் பற்றி 

நான் ஜோதிஷ வித்யாவதி , ஜோதிடர், எண் கணித நிபுணர், வீடு வாஸ்து ஸ்பெஷலிஸ்ட் S.N. கணபதி B.Lit , M.A, D.Astro 
What’s up And Ph : 97 42 88 64 88 
மேலும் முழு ஜாதக பலன் அறிய..
அதாவது வேறு ஏதேனும் தனிப்பட்ட கேள்வி இருந்தால்..
தொலைபேசி வழி ஜாதக பலன் அறிய ..
 என்னுடைய இந்த whatsapp நம்பருக்கு உங்கள் பிறந்த தேதி நேரம் விவரங்கள் அனுப்பி 
கட்டணம் செலுத்தி தொலைபேசி வழியே ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம் 
Phone Call 97 42 88 64 88 
What’s up 97 42 88 64 88 
 மேலும் whats up வழி வீடியோ ஜோதிட பாடப்பதிவுகளை படிக்க என்னுடைய இந்த whatsapp நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் 
What’s up 97 42 88 64 88 
follow our website ( https://www.snganapathiastro.com/ ) SN Ganapathi Astroger 
தொடரும் ….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *