சொந்த தொழில் ஜாதகம் | பணக்கார ஜாதகம் | SN Ganapathi Astrologer B.Lit, M.A, D.Astro
சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம் யாருக்கெல்லாம் ஏற்படும் என்பது பற்றி இந்த பதிவிலே நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் ! பலருக்கு வேலைக்கு செல்வதை விட சொந்தமாக தொழில் செய்து நிறைய சாதிக்க வேண்டும் ! நிறைய சம்பாதிக்க வேண்டும் ! வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று துடிதுடிப்போடு இருப்பார்கள் ! இருப்பினும் அவர்களுடைய சுய ஜாதகத்தில் சொந்தமாக செய்யக்கூடிய கிரக அமைப்புகள் அவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் !
நேயர்களே! ஜோதிட ஆர்வலர்களே ! என்னுடைய பத்து வருட அனுபவத்தை கொண்டு, ஜோதிட விதிமுறைகளைக் கொண்டு இந்தப் பதிவை எழுதுகிறேன். பதிவை முழுமையாக படியுங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு தெளிவாக புரியும் ! ( follow our website https://www.snganapathiastro.com/ )
குரு தரும் யோகம் / சொந்த தொழில் செய்வதற்கான ஜாதக அனுகூலம் !
ஒருவர் சொந்தத் தொழில் செய்வதற்கு அவருடைய சுய ஜாதகத்தில் குரு பலமாக இருக்க வேண்டும் . குருவின் காரகத்துவங்கள் பல இருக்கின்றன . அதில் முக்கியமான ஒன்று பணம் . அதாவது குருவை தனக்காரகன் என்று ஜோதிடத்தில் நாங்கள் அழைக்கின்றோம் .தனம் என்றால் பொருள், பணம், பொருளாதாரம் என்று அர்த்தம் ! மேலும் குரு ஜாதகப்படி இரண்டாம் பாவகத்திற்கும் ஐந்தாம் பாவகத்திற்கும்
காரகாதிபதி ஆவார் . அதாவது லக்னப்படி இரண்டாவது வீடு மற்றும் ஐந்தாவது வீட்டை குறிக்கக்கூடிய ஒரு கிரகம் என்றால் அது குருவாகும் .
உங்களுக்கு இன்னும் தெளிவாக சொல்வதென்றால் .. லக்ன பாவம் ஜாதகரை குறிக்கும் . இரண்டாம் இடம் பணத்தைக் குறிக்கும் . எனவே இந்தப் பணத்தைக் குறிக்கும் கிரகம் குருவாகும். இந்த இரண்டாம் இடம் என்பது ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் சம்பாதிக்கக்கூடிய வருமானத்தை குறிக்கக்கூடிய இடமாகும் . ஐந்தாம் இடம் குழந்தையை குறிக்கும் .
இந்தப்பதிவிலே நாம் சொந்த தொழிலை பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம் . குருவும் லக்ன படி இரண்டாம் அதிபதியும் தொடர்பு கொள்ளும் போது , ஜாதகர் சிறப்பாக வருமானத்தை ஈட்டக்கூடிய தகுதியை அடைகிறார் . இந்த தகுதியை கொடுப்பது குருவாகும். எனவே ஒரு ஜாதகத்தில் குரு எனும் கிரகமும். ஒரு ஜாதகரின் குறிப்பிட்ட லக்னபடி இரண்டாம் அதிபதியும் தொடர்பு கொள்ளும் போது . ஜாதகர் நல்ல வருமானத்தை ஈட்டக் கூடியவராக விளங்குகிறார்.
சொந்த தொழில் யோகம் பற்றி குறிக்கும் பாவகம் !
ஒரு ஜாதகத்தில் சொந்தமாக தொழில் செய்வதற்கு மூன்றாம் இடம் , ஏழாம் இடம், பத்தாமிடம் மற்றும் இரண்டாம் இடம் சுபத்துவம் பெற வேண்டும் ! சுபத்துவம் என்றால் ஒரு கிரகம் சுப கிரக தொடர்போடு இருக்க வேண்டும் !
இப்போது ஒரு உதாரண ஜாதகத்தை பார்ப்போம் !
மேலே உள்ள ஜாதக அமைப்பு
ரிஷப லக்கனம் லக்னத்தில் சூரியன் சுக்கிரன், இரண்டாம் இடத்தில் செவ்வாய் புதன் சேர்க்கை, ஐந்தாம் இடத்தில் கேது, ஆறாம் இடத்தில் சந்திரன், ஏழாம் இடத்தில் சனி பகவான், பதினோராம் இடத்தில் குரு ராகு இணைவு ..
மேலே உள்ள ஜாதகத்தில் தனக்காரகன் என்று சொல்லக்கூடிய குரு பகவான் லாப ஸ்தானத்தில் உள்ளார் ! இரண்டாம் வீட்டு அதிபதி புதன் ஆட்சி பெற்றுள்ளார் . இரண்டாம் அதிபதியும் குருவும் தொடர்பு பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையில் புதனும் குருவும் தொடர்பு கொள்ளவில்லை . புதனும் குருவும் ஒன்றுக்கொன்று கேந்திரத்தில் உள்ளனர் . ஆனால் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் புதன் ஆட்சி பெற்றுள்ளார். அதாவது இரண்டாம் வீட்டு அதிபதி ஆட்சி பெறுவது சிறப்பு . ஜாதகருக்கு நிலையான நல்ல சம்பாதிக்கக்கூடிய அமைப்பை புதன் கொடுக்கிறது . பணத்தைக் குறிக்கக்கூடிய குருவும் ஆட்சி பெற்று இருப்பதால் ஜாதகருக்கு தாராளமான பணப்புழக்கத்தை ஏற்படுத்துகிறது . மேலே நான் கொடுத்திருக்கும் ஜாதகம் எனக்குத் தெரிந்த நபரின் ஜாதகமாகும் .
அடுத்து ஏழாம் வீடும் பத்தாம் வீடும் தொடர்பு கொள்ள வேண்டும் சொந்த தொழில் யோகம் அடைவதற்கு .. இந்த விதிமுறைப்படி.., ஏழாவது வீட்டை லாபஸ்தான அதிபதி குரு பார்க்கிறார் . மேலும் 10-ம் வீட்டு அதிபதி ஏழில் அமர்ந்துள்ளார் . பத்தாம் வீட்டு அதிபதி ஏழாம் பாவகத்தை தொடர்பு கொள்வதால் ஜாதகருக்கு சொந்த தொழில் யோகத்தை கொடுக்கிறது. மேலும் குருவின் பார்வை படுவதால் பரிபூரண அணுக்கிரகத்தை ஜாதகருக்கு கொடுக்கிறது . இதில் நேயர்கள் மேலும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால்.., சனி பகவான் ஏழாம் வீட்டில் திக்பலம் பெறுவார். ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகமோ அல்லது இரண்டு கிரகமோ திக்பலம் பெற்று விட்டால் அந்த ஜாதகர் ராஜயோகம் உடைய ஜாதகராகிறார் . திக்பலம் என்றால் என்னவென்றால் , ஒரு கிரகம் ஆட்சி பெற்றால் எந்த அளவுக்கு பலம் பெறுகிறதோ அதற்கு நிகரான ஒரு பலம் திக் பல பெற்ற கிரகம் ஆகும் ! ஓரளவு ஜோதிடம் பற்றி படித்து தெரிந்தவர்களுக்கு நான் கூறக்கூடிய இந்த விதிமுறைகள் தெளிவாக புரியும் !
முதலாளி ஜாதகம்
ஒரு ஜாதகர் முதலாளி ஆவதற்கு மேலே உள்ள ஜாதகம் அருமையான ஒர் உதாரணம் ! அதற்கான விளக்கத்தை இப்பொழுது பார்க்கலாம் . முதலாளி என்ற வார்த்தையை குறிக்கும் காரக கிரகம் சூரியன் ஆவார் . இந்த சூரிய மண்டலத்தில் சூரியனே பிரதான கிரகமாகும் . சூரியனை மையப்படுத்தி தான் நவகிரகங்களும் சுற்றி வருகின்றன . எனவே ஒரு ஜாதகத்தில் சூரியன் பலமாக இருக்க வேண்டும் . மேற்கொடுத்துள்ள ஜாதகத்தில் சூரியன் லக்னாதிபதி சுக்கிரனோடு இணைந்து லக்னத்திலேயே இருக்கிறார். அதாவது ரிஷப லக்னத்தில் சூரியனும் சுக்கிரனும் ஒன்றாக இணைவு பெற்றுள்ளனர் .
எந்த ஜாதகமாக இருந்தாலும் லக்னாதிபதியும் சூரியனும் தொடர்பு கொண்டாலே அந்த ஜாதகர் முதலாளி ஆவது உறுதி ! என்னுடைய கடந்த கால 10 வருட அனுபவத்தில் பலருடைய ஜாதகத்தில் இந்த விதிமுறையை நான் பார்த்திருக்கிறேன் .
இந்த ஜாதகர் ஆரம்பத்தில் உத்தியோகம் செய்தார் ! பிறகு தனியாக தொழில் தொடங்கி முதலாளியாக ஆகிவிட்டார் !
இந்த ஜாதகர் ஆரம்பத்தில் வேலைக்கு சென்றதற்கான விதிமுறைகளை இப்பொழுது பார்ப்போம் . ஏன் இவர் ஆரம்பத்தில் வேலைக்கு சென்றார் ?, ஆரம்பத்திலேயே முதலாளி ஆகவில்லை ஏன் என்றால் ? முதலாளி ஆவதற்கு ஏழாம் பாவகம் மற்றும் பத்தாம் பாவகம் மட்டும் தொடர்பு கொண்டு விட்டால் போதாது .. , மூன்றாம் பாவகமும் தொடர்பு பெற வேண்டும் ! மூன்றாம் பாவக அதிபதி சந்திரன் உத்தியோகத்தை குறிக்கக்கூடிய ஆறாம் இடத்தில் அமர்ந்து விட்டார் . ஆறாம் பாவகம் என்பது ஜாதகரின் அடிமை வேலையை குறிக்கும் . அதாவது இன்னொருவரிடத்தில் சென்று வேலை செய்து கை நீட்டி சம்பளத்தை வாங்கக்கூடிய விஷயத்தைக் குறிக்கும் பாவகம் ஆறாம் பாவகம் ஆகும் !
ஒரு தொழிலை தைரியமாக செய்யக்கூடிய துணிவை தரும் இடம் மூன்றாம் பாவகம் . அந்த மூன்றாம் வீட்டு அதிபதி சந்திரன் உத்தியோகத்தை குறிக்கும் ஆறாம் வீட்டில் அமர்ந்தபடியால், இந்த ஜாதகருக்கு ஆரம்பத்தில் உத்தியோகத்தை செய்ய வைத்தது . சரி ஜாதகர் தொடர்ந்து ஏன் உத்தியோகம் செய்யவில்லை ? ஏன் தனியாக தொழில ஆரம்பித்து இப்போது முதலாளி ஆகி இருக்கிறார் ? என்றால் ..
சொந்தத் தொழில் யோகத்தை தரக்கூடிய 10 மற்றும் ஏழாம் பாவகம் தொடர்பு கொண்டு விட்டது, அதாவது பத்தாம் அதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்து திக்பலம் பெற்று தொடர்பு கொண்டு விட்டார் . பத்தாம் அதிபதி சாதாரணமாக 7ல் அமர்ந்தாலே முதலாளித்துவத்தை கொடுத்து விடும். இங்கு பத்தாம் அதிபதி திக்பலம் பெற்று விட்டார் ! எனவே ஆரம்பத்தில் இன்னொருவர் இடத்தில் கை நீட்டி சம்பளத்தை வாங்க வைத்தது சந்திரன் ! பிறகு காலம் செல்லச் செல்ல ஜாதகரை தனித்துவமான முதலாளி ஆக்கி அவர் பல பேருக்கு சம்பளத்தை கொடுக்கக்கூடிய யோகத்தை கொடுத்து விட்டது . இவருக்கு முதலாளித்துவத்தை கொடுத்த கிரகம் குருவும் சனி பகவானும் ஆவார் !
தொழில் அல்லது உத்தியோகத்தை நிர்ணயிக்க ஜாதகத்தை எப்படி பார்க்க வேண்டும் ?
ஆட்சி ,உச்சம் , நட்பு , சமம், மேலும் கிரகம் அமர்ந்த இடம், அந்த கிரகத்தை பார்க்கும் கிரகம் , நவ கிரகங்களும் வாங்கிய சாரம், மேலும் தசாம்ச சக்கரம், ராசி சக்கரம், நவாம்ச சக்கரம் இவைகளையெல்லாம் கொண்டு தான் ஒரு ஜாதகரின் தொழில் அல்லது உத்தியோகத்தை நிர்ணயிக்க வேண்டும் !
சொந்த தொழில் செய்ய ஒரு ஜாதகத்தில் எந்தெந்த கிரகம் பலம் பெற வேண்டும் ?
சூரியன் மற்றும் குரு ஒரு ஜாதகத்தில் பலம் பெற வேண்டும் . எப்படி என்றால் சூரியனும் குருவும் லக்னசுபராக வர வேண்டும் ! இந்த இரு கிரகமும் திக்பலம் பெற வேண்டும் . அல்லது இந்த இரண்டு கிரகத்தில் ஏதாவது ஒரு கிரகமாவது திக்பலம் பெற வேண்டும். அப்படி இல்லை என்றால் லக்ன சுபரில் ஏதாவது ஒரு கிரகம் திக்பலம் பெற வேண்டும் ! மேலும் சூரியனை குரு பார்க்க வேண்டும் . அடுத்ததாக சூரியனும் குருவும் இணைந்து இருக்க வேண்டும். ஆனால் ஒரு விஷயம் குரு சூரியனுக்கு பாகை அளவில் நெருங்கி இருக்கக் கூடாது ! சூரியனும் குருவும் 10 டிகிரி இடைவெளியில் இணைந்திருக்க வேண்டும் ! சூரியனும் குருபம் 10 டிகிரிக்குள் இருந்தால் குரு அஸ்தங்கம் அடைந்துவிடும் ! அதாவது குரு பலகீனம் ஆகிவிடும் ! எனவே சூரியன் நின்ற இடத்தில் இருந்து 10 டிகிரிக்கு மேல் குரு சூரியன் இணைய வேண்டும் ! இதுதான் ஆரோக்கியமான நல்ல கிரக சேர்க்கை ஆகும் ! எந்த ஒரு கிரகமும் சூரியனிடத்தில் அஸ்தங்கம் அடையக் கூடாது ! அஸ்தங்கம் என்றால் ஒரு குறிப்பிட்ட கிரகம் பலம் இழப்பது என்று அர்த்தம் ! ( ஒரு கிரகம் குரு, சுக்கிரன், தனித்த புதன், வளர்பிறை சந்திரன் பார்வை பெற்றால் பலம் பெறும் ! )
குரு பெரிய பண யோகத்தை கொடுக்கக் கூடியவர் . சுக்கிரன் சிறிய பணத்தொகையை குறிப்பவர் . எனவே ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரனை விட குருவே பலம் பெற வேண்டும் அவர்தான் முதலாளி ஆகி தொழில் தொடங்கி வெற்றி பெற முடியும் !
கோடீஸ்வர அமைப்பு
பணம் முதலீடு போட்டு சொந்த தொழில் செய்வதற்கான அமைப்பு !
ஒருவர் கோடிக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் முதலீடு போட்டு சொந்த தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் .. அவருடைய ஜாதகத்தில் குரு என்ற கிரகம் பிரதானமாக பலம் பெற வேண்டும் அந்த குரு எனும் கிரகம் லக்னசுபராக நிச்சயமாக வர வேண்டும் !
பணம் அதிகம் முதலீடு போடாமல் சொந்தத் தொழில் செய்யும் அமைப்பு
ஒருவருக்கு குரு பலம் இல்லாமல், சுக்கிரன் மட்டும் பலமாக இருந்து , இந்தப் பதிவிலே நான் சொல்லிய விதிமுறைகள் அடிப்படையில் , ஏழாம் அதிபதி பத்தாம் அதிபதி மூன்றாம் அதிபதி சுபத்துவத்தோடு ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்றுக் கொண்டிருந்தால் .. அந்த ஜாதகர் சிறிய முதலீடு போட்டு தொழில் தொடங்க வேண்டும் . அல்லது அடுத்தவரை முதலீடு போட சொல்லிவிட்டு இவர் அந்த தொழிலை செய்ய வேண்டும் . ஜாதக சொந்தமாக பணம் போட்டால் பணத்தை திரும்ப எடுக்க முடியாது ! அதேபோல் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் ! அவர் முதலாளியே ஆகிவிட்டாலும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் குரு பலம் இல்லாதவர்கள் !
சனிபகவான் உச்சம் பெற்றோ அல்லது உச்ச வீட்டிற்கு அருகில் இருந்தோ குருவின் பார்வையைப் பெற்றால்.. ஜாதகர் முதலாளி ஆவது உறுதி .. அதே சமயம் தொழிலாளிகளோடு சேர்ந்து பணிபுரிவார் !
இந்தப் பதிவில் நான் கூறிய தொழில் செய்வதற்கான ஜோதிட விதிமுறைகளோடு கூடிய ஒரு ஜாதகத்தில் , சனி நீச்சம் பெற்று இருந்தால்.. , குருவின் பார்வை பெற்றிருந்தால் .. , ஜாதகர் முதலாளி ஆவார் , ஆனால் எந்த வேலையும் எடுத்து செய்ய மாட்டார், திட்டம் போட்டு பலரை வேலை வாங்கி பலருக்கு சம்பளம் கொடுத்து தான் செய்யக்கூடிய தொழிலில் லாபத்தை பார்ப்பார் ! ஜாதகர் இறங்கி வேலை செய்ய மாட்டார் ! ஆனால் தொழிலில் நல்ல லாபத்தை அடைவார் !
தொழில் செய்ய செவ்வாயும் பலம் பெற வேண்டும் !
ஒருவர் தைரியமாக எடுத்த தொழிலை செய்து முடிப்பதற்கு .. , தொடர்ந்து வெற்றிகரமாக அந்த தொழிலை நடத்தி செல்வதற்கு , ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் கண்டிப்பாக பலம் பெற்று இருந்தே ஆக வேண்டும் ! அஷ்டலட்சுமிகளில் தைரியலட்சுமி மிக முக்கியம் . அஷ்டலட்சுமி ஒரே இடத்தில் இருக்க வேண்டுமென்றால், கண்டிப்பாக அங்கே தைரிய லட்சுமி என்று சொல்லக்கூடிய செவ்வாய் எனும் கிரகம் ஒருவர் ஜாதகத்தில் சுபத்துவத்தோடு பலம் பெற்று இருக்க வேண்டும் !
செவ்வாய் குருவின் பார்வை பெற்று இருப்பது நல்லது . சுக்கிரன் பார்வை சேர்க்கை பெறுவது நல்லது , வளர்பிறை சந்திரன் பார்வை சேர்க்கை பெறுவதும் நல்லது. மேலும் செவ்வாய் கேது உடன் இணைந்து இருப்பதும் 60 % சதவீதம் நல்லது தான்!
குரு பகவான் சிம்ம வீட்டிலோ, மேஷத்திலோ, தனுசு வீட்டிலோ இருந்து , ஏழாம் வீட்டையோ பத்தாம் வீட்டையோ மூன்றாம் வீட்டையோ அல்லது இரண்டாம் வீட்டையோ தொடர்பு கொள்ளும் போது ஜாதகருக்கு லட்சக்கணக்கில் பணம் வருமானத்தை கொடுக்கும் !
மேலும் தசாபுத்தி ரீதியாக , ஏழாம் அதிபதி பத்தாம் அதிபதி இரண்டாம் அதிபதி லக்னாதிபதி தசை நடந்தால் .. , சொந்தத் தொழில் செய்வதற்கான விதிமுறைகளும் ஜாதகத்தில் இருந்து .. மேற் சொன்ன பாவக அதிபதிகளின் தசை நடந்தால் ஜாதகர் நிச்சயம் முதலாளி ஆவது உறுதி !
என்ன நேயர்களே இப்பொழுது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என நம்புகிறேன் ! இந்தப் பதிவிலேயே நான் குறிப்பிட்டது ஒரு ஜாதகம் மட்டும் தான் .. முதலாளி ஆவதற்கு இன்னும் பல விதிமுறைகள் இருக்கின்றன . ஏனென்றால் ஒருவர் ஜாதகம் போலவே இன்னொரு ஜாதகம் கிடையாது .
இந்தப் பதிவு உங்களுக்கு மிகத் தெளிவான ஒரு விஷயத்தை கொடுத்திருக்கும் ! இன்னும் உங்களுக்கு தெளிவு வேண்டும் என்றால் உங்களுடைய ஜாதகத்தை என்னுடைய இந்த whatsuo நம்பருக்கு அனுப்பி உங்கள் ஜாதகத்தை முழுமையாகப் பார்த்து நீங்கள் தொழில் ஆரம்பிக்கலாம் ! மேலும் வேறு ஏதேனும் தனிப்பட்ட கேள்வி இருந்தால் என்னிடம் நீங்கள் ஜாதகம் பார்த்து தெளிவு பெற்றுக் கொள்ளலாம் !
தொலைபேசி வழி ஜாதகம் பார்க்க ஜாதகம் முறையாக படிக்க தொடர்புக்கு :
Phone Call 97 42 88 64 88
What’s up 97 42 88 64 88
( என்னிடம் ஜோதிடம் படிக்க விரும்பும் ஜோதிட மாணவர்களுக்கு ஜோதிடப் பாடம் வீடியோ பதிவுகளாக what’s up இல் அனுப்பி வைக்கப்படும் )
அடுத்தடுத்த பதிவிலேயே இன்னும் பல ஜோதிட விதிமுறைகளை பல பதிவுகளை தொடர்ந்து எழுத இருக்கிறேன் இதே வெப்சைட்டில் தொடர்ந்து படியுங்கள் ! அனைத்து ஜோதிட தகவல்களும் இந்த ஒரே வெப்சைட்டில் பாருங்கள் !
இந்த website ஐ follow செய்யுங்கள் !
https://www.snganapathiastro.com/
அடிப்படை ஜோதிட பாடங்கள் 👈இந்த தலைப்புகளையும் கிளிக் செய்து படியுங்கள் !